Where does one concentrate while meditating? In the initial stages, one may keep both eyes open and concentrate on an Idol of his choice,A photo,Or The flame of a Lamp. At an advanced, next level, one is asked to close one’s eyes, as it would shut down external Stimuli. And where to concentrate?

Many concentrate on the spot in by the two eyebrows, the centre of the forehead where Hindus kero their caste mark or Kumkum. This part is associated with Ajna Chakra.Some advice the tip of the nose,while keeping the eyes open as well as keeping them closed( While performing Sandhya vandhana, Pranayama is performing by looking at the top of the nose or both eyes closed)

I have noticed that this practice is disturbing , makes eyes watery.Even while eyes are closed , if you concentrate either in between the eyebrows or at the top of the nose, your eyeballs roll-up,though your eye lids are closed. I had this doubt for quite sometime whether there is any other interpretation.

Siva being the Adi Yogi and the most authentic texts are Thirumandihram by Thirumoolar,which pre dates Patanjali, Agastya’s works I was meaning to check them and also the works of Siddhas.

A Facebook group Siva Sambho in Tamil has provided me the answer. I studied the verses and am convinced that the spot to concentrate ,with eyes closed, is the Pupils of the eyes or pupil of one eye.

Tamil texts by Siddhas mention this. Agasthya says that ‘Do not go after the Center of the eyebrow,( Your ) Eyes are Full of Divine Light and the tip of the nose is The End( that it is the End, I am unable to decipher). What is clear is one should concentrate on the eyes , specifically Pupils of the eyes 👁️ for through the eyes are seen the Light and eyes are the expressions of the Soul and concentrating on them leads to Inner Light.

Thirumoolar says to keep your gaze or attention at the center of the Nose.This seems to indicate the eyes again as when you convey on the Centre of the nose,with your eyes closed, you will find that you are looking at your eyes internally. Here the physical Eyes,which are Karmendriya are not referred to. It the Eye as Gnanendriya is pointed out . It the process and awareness of Seeing knowledge of Seeing.

One must see follow the Inner Light in the eyes, follow it to the heart while meditating.

புருவ மத்தி என்பது எது?


நமது சித்தர்கள் யோகசாதனமுறையை விளங்கும் போது.மனதை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் என்று கூறுவர்..

புருவமத்தி எது என்று சாதரணமாக யாரிடம் கேட்டாலும் “புருவமத்தி” என்று நாம் நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தை கூறுவர்.

இன்று பல யோகா மையங்களும் இதையே தான் கூறுகிறது. புருவமத்தி என்றால் பொட்டு வைக்கும் இடமா என்றால் அது தான் இல்லை? சிறிது சிந்தித்து பார்த்தால் இது புலப்படும்.

அதற்கு முன் அவ்வையார் கூறும் இந்த பாடலை நினைவில் கொள்ளுங்கள் ” “தேவர் குறளும் திருநான் மறை முடிபும் மூவர் தமிழும் முனி மொழியும் – கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்று உணர்”

திருக்குறள் நான்கு வேதங்கள் தேவாரம் அகத்தியர் முதலான சித்தர் பாடல்கள் திருவாசகம் திருமந்திரம் இவை அனைத்தும் உரைப்பது ஒரு வாசகம். மெய். உண்மை. சத்தியம். மெய்பொருள். ஆக அணைத்து ஞானிகளும் ஒரே இடத்தில் தான் தியானம் செய் என்று கூறியிருப்பார் என்று தெளிவாகிறதல்லவா.

சரி முதலில் புருவ மத்தி எது என்று நாம் சிறிது சிந்திப்போம்? நாம் பொட்டு வைக்கும் இடம் இரு புருவங்களிடையே உள்ளது. ஞானிகள் இரு புருவ மத்தி எனக் கூறவில்லையே?! புருவ மத்தி என்று ஒருமையில் தானே கூறினர். ஒரு புருவம் அதன் மத்தி என்று ஒன்றும் இல்லை, அதன் கீழ் இருப்பது கண்.

இப்படி சிந்திக்க வேண்டும். யூகிக்க வேண்டும். புருவ மத்தி என்று சொன்னார்களே அதன் கீழ் உள்ள கண்ணை பற்றி தானே சொல்லியிருப்பர்.

நாம் சிந்தித்ததை….. சித்தர்கள், ஞானிகள் பாடல்கள் கொண்டு பார்போம். எல்லா சித்தர்களும் , ஞானிகளும் நாம் தியானம் செய்ய வேண்டிய இடம் புருவ மத்தியான கண்ணே என்று நேரடியாகவும், பரிபாசயாகவும் கூறிபிட்டுள்ளனர்.

அதில் சிலவற்றை இதில் பார்போம்.

“புருவ மத்தி எதென்றக்கால் பரப்பிரம்மமானதோர் அண்ட உச்சி” . – சித்தர்

காகபுசந்தர். புருவமத்தி பரப்பிரம்மமான அண்ட உச்சி. அண்டம் போல் அழகான பூமி போல் அழகான கண்மணி, உச்சி என்றால் கண்மணி மத்தியாகும். அது பரப்பிரம்மமானது. அதாவது ஒளியானது புருவமத்தி கண்மணி மத்தியிலுள்ள ஒளி.

கண் நிறைந்த ஜோதியட புருவமத்தி

அலையாதே புருவமத்தி துலையென்றெண்ணி

அப்பனே மூக்கு நுனி அந்தமாச்சே – அகத்தியர்

கண்ணில் நிறைந்த ஜோதியே (அ ) ஒளியே புருவமத்தி என்று தெளிவாக அகத்தியர் பெருமான் நமக்கு உரைக்கிறார்.

வள்ளல் பெருமான் புருவம் கண் என்று தெளிவாக கூறிவிட்டார்.

“கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு.” என்று வெட்ட வெளிச்சமாக்கி விட்டார். “நடுக்கண் தான் புருவபூட்டு” இதற்கு விளக்கமும் வேண்டுமோ. மேலும் வள்ளலார் தான் இரு கண்களாலும் செய்த பெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்.

“என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்”

தன் கண்ணில் தான் தானும் தவம் செய்தேன் என்று வள்ளலாரே குறிபிடுகிறார்: இதை திருமூலர் திருமந்திரத்தில் பரிபாசையாகவும், நேரடியாகவும் குறிபிடுகிறார்: “நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில் வாட்டம் இல்லை மனைக்கும் அழிவில்லை"

இங்கு திருமூலர் நமது நாட்டம் நடுமூக்கில் வைக்கணும் என்கிறார். ஒரு சித்தர் புருவமத்தி என்றார், இங்கு திருமூலர் நடுமூக்கு என்கிறார். எது சரி.

அவ்வை பிராட்டி கூறிய முதல் பாடலை நினைவு கொள்ளுங்கள்.

நடுமூக்கு – இது பரிபாசை. ஞானத்திற்கு பொருள் காணனும்.! மேலோட்டமாக பார்த்து மூக்கு என்று ஏமாந்து போகாதீர். மூக்கை பார்த்து மோசம் போனவர் ஏராளம்.

இதன் விளக்கம் என்ன?

தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவா அதில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று தானே சொல்வோம்.

நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும் அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது! இதில் தான் நம் நாட்டம் இருக்க வேண்டும். கண் என நேரடியாக சொல்லாமல் நடுமூக்கு என்றது நாம் சிந்தித்து தெளிய வேண்டும். குரு மூலம் உபதேசம் பெற்று தெளிய வேண்டும் என்பதற்காக. தான். மேல் கூறிய விளக்கத்திற்கு சான்று மற்றும் ஒரு திருமந்திர பாடலே

“நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத் தோட்டத்து மாம்பழந்தூங்கலு மாமே”

நயனம் என்றால் கண். இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.

மற்றுமொரு பாடல் திருமந்திரத்தில் இருந்து. தவம் எப்படி செய்ய வேண்டும் என்று கூறும் பாடல். இப்பாடலை படிக்கும் முன் “உடலில் உயிர் எங்கு உள்ளது “என்று இந்த லிங்கை படித்த பின் பார்க்கவும்” “நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் பற்றுக்குப் பற்றாய் பரம – னிருந்திடம் சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே”

நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி இதை நாம் உற்று உற்று பார்க்க வேண்டும். கிணற்றை உற்று பார்த்தான் என்றால் கிணற்றில் உள்ளே பார்த்தான் என்று தானே பொருள்.

நெற்றிக்கு நேரே புருவத்திடைவெளி உள்ளே இரு கண்களும் உள்ளே போய் சேருமிடம் நம் ஆத்மஸ்தானம். அதை தான் உற்று உற்று பார்க்க ஒளி விட்டு பிரகாசிக்கும் என திருமூலர் சொல்கிறார்.

அது தான் ஒளி தான் மந்திரம். அந்த நம் ஜீவஸ்தானம் தான் பரமன் இறைவன் இருக்குமிடம். நம் உயிரை பற்றி உடலை பற்றி இருக்கும் இடம். அதுவே சிற்றம்பலம் கோயில் என தெரிந்து கொண்டேன்.

நம் கண்மணியை பற்றியிருக்கும் ஒளி உள் ஒளி அம்சம். கண்மணி ஒளி வழி உள்ளே புக வேண்டும். குரு மூலம் உபதேசம், தீட்சை பெற்று கண் ஒளியை பற்றி உள் போக வேண்டும்.

இதுவே ஞானம். கண்ணை மூடி கொண்டு உற்று உற்று என பார்த்தாலும் மாயை தான் விளையாடும். கண்ணை திறந்து கண்மை ஒளியோடு போ.

மேலும் பல ஞானிகள் புருவமத்தியான கண்ணை இருதயம் என்பர். இருதயம் என்பதை பிரித்து பாருங்கள் இரு+ உதயம் . நம் உடலில் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், ஆக இதை தான் இந்த சூரிய , சந்திர உதயத்தை தான் இரு உதயமாக (இருதயமாக) கூறி உள்ளனர் ஞானிகள்.

இதை சிவவாக்கியர் எந்த ஒளிவு மறைவுமில்லாமல் கூறி உள்ளார்.

“வலது கண் சூரியன் இடது கண் சந்திரன்”

கீதையிலும் கிருஷ்ண பகவான் “மந்திரங்களில் நான் காயத்ரி” என்கிறார். காயத்ரி மந்திரத்தின் சாராம்சம் “கடவுளின் ஒளியை தியானிப்போமாக என்பதே.

Right Eye represents Sun,Left, Moon.The flowering of these two is Heart.- Siva Vaakiyar- Siddha.

” கண்ணன் என்ற தமிழ் வார்த்தை நம் உடலில் இறைவன் துலங்குவதை குறிக்கும். கண் + அவன் = கண்ணன்.

Sri Krishna is called Kannan. It means He is Eyes

ஆகா இந்த கண்ணனை – கண் ஒளியை தான் நாம் தியானிக்க வேண்டும். இப்படி அனைவரும் கூறுவது ஒன்றைத்தான்…

Tamil text quoted is from Facebook group post Siva Sambo .https://www.facebook.com/groups/471697570143349/permalink/919565142023254/

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending