Category: question

  • அந்தரங்கம்-கேள்வி ,பதில் .

    உங்கள் கடித்ததில் இருந்து உங்கள் தரப்பில் இருந்து ஏதும் தவறு இல்லை என்பதாகத் தொனிக்கிறது.இது நடை முறை சாத்தியம் இல்லை .உங்கள் மனைவியின் தரப்பு விளக்கங்களை கேட்ட பின்னர், தெளிவான ஆலோசனை கூற இயலும்.
    மேலும் மனைவி தவறு செய்கிறாள் என்று தெரிந்த பின்னரும் இணைந்து வாழ்ந்தது தவறு.
    ஆதாரங்களுடன் திருமணத்தை ரத்து செய்திருக்க வேண்டும்..
    இன்னும் அதையே நினைத்து ,அதுவும் இந்த வயதில் ,வருந்துவது முதிர்ச்சி இல்லை.
    வேண்டுமென்றால் தனியாகச் செல்வது நல்லது.
    உங்கள் குழந்தைகள் தாயை சார்ந்திருப்பதருக்குக் காரணம் யோசித்தீர்களா ?
    உங்கள் மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்ளவும் .
    உங்கள் பிரச்சினைக்கு முன்னர் அளிக்கப்பட்ட விடையில் தன்னிலை விளக்கம் அதிகம்.

    செய்தி .

    என் வயது 61. ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி.  திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிறது. நான்கு மகன்கள்; மூன்று பேர் இன்ஜினியராக, நல்ல உத்தியோகத்தில் இருக்கின்றனர். நான்காவது மகன் மேல்படிப்பு படிக்கிறான்.
    என் மனைவி ஒரு பட்டதாரி. திருமணமாகி இரண்டு ஆண்டுகளில், நான் வேலை செய்யும் நிறுவனத்தில், மேலதிகாரிகளின் உதவியால், படாதபாடுபட்டு ஒரு வேலையை அவளுக்கு வாங்கி தந்தேன். அதுவும் நான் குடியிருக்கும் ஊருக்கே மாறுதல் கேட்டு வாங்கி வந்தேன்.
    அவள் வேலை செய்யும் அலுவலகம், காவல் துறையில் கைரேகைப் பிரிவாகும். இதுதான் என் வாழ்க்கையில் செய்த மாபெரும் தவறு. அவளது அலுவலகத்தில் பணியாற்றிய செக்ஷன் கண்காணிப்பாளர் ஒரு பெண் பித்தன். என் மனைவி  பணியில் சேர்ந்தவுடன், அவன் எப்படியோ பேசி, அவளை, தன் வயப்படுத்திக் கொண்டான்.திருமணமாகி மூன்றாண்டுகள் தான் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். அவளது அலுவலகத்தில் வேலை செய்பவனின் தொடர்பு கிடைத்ததால், என்னை உதாசீனப்படுத்தினாள். அப்போதெல்லாம் என் பணியில் நான் மிகவும் கவனமாக இருந்ததால், அதை பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை.தற்போது அவன் ஓய்வு பெற்று, இதே ஊரில் இருக்கிறான். இவர்களுடைய தொடர்பு இன்னும் இருக்கிறது. அலுவலகம் சென்றவுடன், அவனிடம் தொலைபேசியில் பேசிவிட்டு தான் மறு வேலை பார்ப்பாள்.இருவரும் பணியில் இருந்த காலத்தில், ஒரு வருடம் இங்கு இருப்பர்; அடுத்த வருடம் வேறு மாவட்டத்திற்கு மாறுதலாகி போய் விடுவர்.

    …………

    அன்புள்ள சகோதரருக்கு—
    உங்களின் கண்ணீர் கடிதம் கிடைத்தது. தொடர்ந்து 28 வருடங்களாக கட்டின கணவனுக்கு துரோகம் செய்து வரும் மனைவியைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். இதுவரை நான் எழுதிய பல பதில்கள், பெண்களுக்கு சார்பாய், அதுவும் தவறு செய்யும் பெண்களுக்கு சார்பாய் இருப்பதாக, சில ஆண் வாசகர்கள், “இ-மெயில்’ விமர்சனம் பண்ணியிருந்தனர்.
    கடித நடையை வைத்தும், எழுதியவரின் மனோபாவத்தை யூகித்தும், எழுதப்பட்ட இருவரிகளுக்கிடையே ஒளிந்திருக்கும் சிறுசிறு உண்மைகளை கண்டுபிடித்தும், எழுதியவரின் உள்ளக்கிடக்கையை அவதானித்தும், சில பதில்களை நான் எழுதியிருக்கக் கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக, நான் ஒரு பெண். அதுவும் திருமணமான பெண். பத்துவிதபட்ட பட்டய படிப்புகள் படித்த பெண். ஒரு கனிவான அகிம்சாவழி பதிலைத் தானே கூற முடியும். ஒரு கடிதத்தில் பத்து சதவீதம் பெண்களுக்கு சார்பான க்ளுக்களோ, அலிபிக்களோ தென்பட்டால், தீர்ப்பு பெண்களுக்கு சார்பாகத் தான் அமையும்.

    http://vidhai2virutcham.wordpress.com/2010/10/02/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81/#comment-41

    AfrikaansAlbanianArabicBelarusianBulgarianCatalanChineseCroatianCzechDanishDetect languageDutchEnglishEstonianFilipinoFinnishFrenchGalicianGermanGreekHaitian Creole ALPHAHebrewHindiHungarianIcelandicIndonesianIrishItalianJapaneseKoreanLatvianLithuanianMacedonianMalayMalteseNorwegianPersianPolishPortugueseRomanianRussianSerbianSlovakSlovenianSpanishSwahiliSwedishThaiTurkishUkrainianVietnameseWelshYiddishAfrikaansAlbanianArabicBelarusianBulgarianCatalanChineseCroatianCzechDanishDutchEnglishEstonianFilipinoFinnishFrenchGalicianGermanGreekHaitian Creole ALPHAHebrewHindiHungarianIcelandicIndonesianIrishItalianJapaneseKoreanLatvianLithuanianMacedonianMalayMalteseNorwegianPersianPolishPortugueseRomanianRussianSerbianSlovakSlovenianSpanishSwahiliSwedishThaiTurkishUkrainianVietnameseWelshYiddish 

    Detect language » Hungarian