Category Archives: answers

அந்தரங்கம் + 2 முடிப்பதற்குள் காதலா ?


எல்லாவற்றிற்கும் ஒரு வயது உண்டு . டென்த் படிப்பதற்குள் காதல் என்று பேசுவதைப் போல ஒரு தவறான வாழ்க்கை அணுகுமுறை ஏதும் இல்லை.. இவ்வாறு நினைக்குமுன் நமக்கு நம்மைப் பேணிக்கொள்ள முடியுமா என்று நினைக்க வேண்டும்.. உழைத்துக் கொட்ட தந்தையும் ,உணவளிக்க ஒரு தாயும் இருக்கும் போது பொறுப்பை உணராமல் நடந்து கொள்ளுவது வருந்தத் தக்கது . நம்மைப் பேணிக்கொள்ள வழி இல்லாத போது, இன்னொருவரைக் காப்பாற்ற முடியுமா என்று சிந்திக்க வேண்டும் . வாழ்க்கையில் பணம் இன்றியமையாதது .அதைப் பெற கல்வி வேண்டும்

Read more

அந்தரங்கம் ,ஒரேகோத்திர திருமணம்


ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளுவதில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

எந்த மதத்தை எடுத்துக்கொண்டாலும் தலைமுறைகள் ஒரு கணவன் மனைவியிலிருந்து உருவாகிஉள்ளன .
ஆதாம், ஏவாள் ,தக்ஷப்ப்ரஜாபதி,காச்யபர், திதி உதாரணங்கள் .
அப்படிப்பார்க்கையில் அனைவரும் சஹோதர சஹோதரிகளாகிறோம்.
அதே சமயம் மரபணு சார்ந்த உண்மைகளை ஒதுக்கவும் முடியாது.

Read more

அந்தரங்கம் -முதிர்ந்த ,குடும்பம் உடையவருடன் வாழவேண்டும் -ஆலோசனை .


உங்கள் உடல் நிலைக்கும் ,இப்போதைய உங்கள் நிலைக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை . .28 வயதில் காதல் என்று நினைத்துக்கொண்டு ,விளைவுகளைப் பற்றி யோசியாமல் முடிவு எடுத்து உள்ளீர்கள் மணமும் செய்து கொண்டீர்கள் , அவருக்கு விருப்பம் இல்லை  என்ற போதிலும். .அவர் இப்போது அவர் குடும்பத்தைப் பற்றி யோசிப்பதாகவும் ,உங்களுக்கு குழந்தை வேண்டும் என்பதாகவும் கூறி உள்ளீர்கள் . அவர் நிலை மற்றும் அவர் குடும்பத்தார் நிலை பற்றி யோசித்தீர்களா? அவரும் அவர் குடும்பத்தாரும் என்ன செய்ய வேண்டும் ?அவர் குடும்பத்தை விட்டு

Read more

அந்தரங்கம்-கேள்வி ,பதில் .


உங்கள் கடித்ததில் இருந்து உங்கள் தரப்பில் இருந்து ஏதும் தவறு இல்லை என்பதாகத் தொனிக்கிறது.இது நடை முறை சாத்தியம் இல்லை .உங்கள் மனைவியின் தரப்பு விளக்கங்களை கேட்ட பின்னர், தெளிவான ஆலோசனை கூற இயலும். மேலும் மனைவி தவறு செய்கிறாள் என்று தெரிந்த பின்னரும் இணைந்து வாழ்ந்தது தவறு. ஆதாரங்களுடன் திருமணத்தை ரத்து செய்திருக்க வேண்டும்.. இன்னும் அதையே நினைத்து ,அதுவும் இந்த வயதில் ,வருந்துவது முதிர்ச்சி இல்லை. வேண்டுமென்றால் தனியாகச் செல்வது நல்லது. உங்கள் குழந்தைகள் தாயை சார்ந்திருப்பதருக்குக் காரணம் யோசித்தீர்களா ?

Read more