Located an hour away by Road from Tiruchirapalli. Siruvachur MadhuraKaliamman, is a powerful Deity, specially for alleviating the sufferings related mind and Black Magic induced ailments.
Legend has it that Adi Sankara, felt thirsty when he visited this place and Madura Kali provided a Spring to quench his thirst.
The Temple is open only on Mondays and Fridays between 8am to 8pm.
‘Madura Kaliamman Temple is an important temple for mother Goddess in Trichy and Perambalur regions in South India. The temple is open only on every Mondays and Thursdays. It is said to be the Kula Devta (family deity) of Chankarendra Saraswati Swamigal – famously called as Kanchi Periyavar or Kanchi Shankaracharya….
How to reach Siruvachur.
On the Chennai-Trichy highway (NH45), the temple is located around 270 kms from Chennai (7 kilometers after Peramabalur) and around 50 kms from Trichy. While travelling from Chennai to Trichy, the temple’s entrance Arch is located on the right side, on the main road, after the Dhanalakshmi Srinivasan Medical College. From the arch, the temple is at a distance of around 2 kms.
On Mondays and Fridays, devotees can hire auto rickshaws available near Arch to reach the temple. There are few mini buses from the Arch to the temple, but the frequency is less.
By road, all the buses between Trichy and Perambalur will stop at the Siruvachur arch. The Permabalur-bound buses start from Chathiram bus stand in Trichy, which is located near the Rockfort temple (Mainguard Gate).(Chathiram Bus Stand)
http://siruvachurmathurakaliassociation.org/reaching%20the%20temple.html
|
|||||
|
| Moolavar | : | Madhurakalaiamman | |
| Urchavar | : | Madhurakali | |
| Amman / Thayar | : | – | |
| Thala Virutcham | : | Marudham tree | |
| Theertham | : | Tirukulam | |
| Agamam / Pooja | : | – | |
| Old year | : | 1000-2000 years old | |
| Historical Name | : | – | |
| City | : | Siruvachur | |
| District | : | Perambalur | |
| State | : | Tamil Nadu |
Related articles
- Faith Is What Faith Does Traveler’s Memoirs (ramanan50.wordpress.com)
- Modern Ayyappa Temple With Ancient Hindu Discipline (ramanan50.wordpress.com)




அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாள்தான் சகலமும். எல்லா தோற்ற ங்களிலும் அவளேதான் உள்ளாள். மனசைச் செலுத்தி வணங்க ஒளியைக் காணலாம். அகந்தை கொள்ளும் அரக்கர்களை, இறங்கி வந்து ஓர் வடிவெடுத்து த்வம்சம் செய்ய, அழிக்கவும் தவற மாட்டாள். அன்னை என்று உலகுக்கு உணர்த்தவே இந்த செயல்கள். அம்பிகை ஸ்ரீ மதுரகாளி பார்வை சக்தியுடையது. அதான் ஸ்ரீ மதுரகாளியாக தோன்றினாள். அன்னை ஸ்ரீ மதுரகாளி நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க பாவம் தொலையும். அதிசயம் என்னவென்றால், அனைவரையும் அவரவர் தோற்றத்தில் இருந்த படி பக்தர்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்பதைத் துல்லியமாக அறிந்தவள் அன்னை. வியப்பில் ஆழ்த்தும் இது போல ஆயிரம் கதைகள் சொல்லலாம். சன்னதியில் இருந்து பார்க்கும் போது அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளின் காட்சி காண்போரை வியக்க வைக்கிறது. சாந்த கோலத்தில் தனிசன்னதியில் இருக்கிறாள். இவளை “ஸ்ரீ மதுரகாளிகாம்பாள்” என்று அழைக்கிறார்கள். அமுதைப் பொழிந்து கொண்டிருக்கிறாள். இதிலிருந்து என்ன தெரிகிறது. அம்பாள்தான் சகலமும். நல்ல மனத்தோடு கேட்கும் வரத்தைப் பூர்த்தி செய்பவள். அவள் இருந்தால் திருவருள் கிடைக்கும். அங்கு வரும் மகான்களுக்கு எந்தக் குறையும் இல்லை. தரிசனம் தரவில்லை என்ற கவலை இல்லை. பக்தியில் குறை வந்து விட்டதா என்ற கவலை இல்லை. சற்று நேரத்தில் தரிசனம் தந்து வாழ வைப்பவள். எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
அன்னை நமக்காகவே அவதரித்தவள். தனது அளவற்ற கருணையினால் நம்முடனே இருந்து நம் துன்பங்களை போக்கி அருள் புரிவதற்காக சிறுவாச்சூரில் ஜீவ விக்ரகமாக ஆயிரம் வருடங்கள் முன் எழுந்தருளி, தம்மை அடைந்தவர் துயரினை உடனுக்குடன் போக்கி திருவருள் புரிந்து வரும் அவதாரம் ஸ்ரீ மதுரகாளி அன்னை. சகல பாவங்களிலும் விடுவித்து கடைத்தேற்றுபவளை, யாவையும் இனிதே நடந்திட வாழ்த்தி அருளும் தாயே தலை வணங்குகின்றேன். பக்திபூர்வமாக மனம் மயங்கி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு உன்னை தேடி ஓடி வந்தார்கள் தாயே.
Sir I requested yo long back not to keep on posting unconnected comments. I have to spend time at least twice a day to delete them.Please avoid posting.
An incident which I cannot forget in my life. The incident is :
என் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப் பெரிய பேறு ஒன்று உண்டென்றால், அது ஸ்ரீமதுரகாளியி ன் திருவருள்தான். என்னுடைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன்அவர் தன் வாழ்க்கையில் ஏதோ ஒரு தேடல் இருந்தது. தேடிக் கொண்டிருக்கிற பொருள் ஏதோ ஒரு பெரிய பொருள் என்பது மட்டும் புரிந்தாலும், எதை அவர் தேடிக்கொண்டிருக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. அப்படிப்பட்ட கால கட்டத்தில் ஒருநாள் எதேச்சையாக கடைத் தெருவில்சந்தித்தேன். எனக்கு ஆச்சரியம்.
மிகுந்த ஆன்மிக நாட்டம் கொண்டவரான அவர் நான் சற்றும் எதிர்பாராதவகையில், சிறுவாச்சுர் போய் அம்பாளை தரிசனம் பண்ணிட்டு வரலாம்னு இருக்கேன். நீங்களும் வரீங்களா?” என்று கேட்டார். நானும் உடனே ஓ! வரேனே!” என்று சொன்னேன்.
வீட்டுக்குப் போய் விஷயத்தைச் சோன்னபோது, என் மனைவிக்கு ஆச்சரியம். என்ன திடீர்னு என்று கேட்டாள். நண்பர் கூப்பிட்டார். எனக்கும் போகணும்னு தோணிச்சு!” என்று பதில் சொல்லிவிட்டு நண்பரோடு அம்பா ளை தரிசிக்க சிறுவாச்சுர் பஸ் பிடித்தேன்.
அப்போது செல்லும் வழியில் என்னைப் போலவே ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். சிலர் உரக்க.ஜெய ஜெய ஸ்ரீமதுரகாளி என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் மனத்துக்குள்ளேயே ஜபித்துக் கொண்டிருந்தார்கள். இதெல்லாம் எனக்குப் புதுசு இல்லை வியப்புடன் சென்று கொண்டிருந்தேன். இடத்தை நெருங்கிய போது பக்தர்களின் கோஷம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. நான் மெய்மறந்து அந்த வரிசையில் கரைந்தேன்.அம்பாளை தரிசிக்கும்போது ‘பேசலாமா? கூடாதா? பேசலாமென்றால் என்ன பேசுவது? ஏதாவது கேள்விகள் கேட்லாமா?’ எனக்குள்ளே விடை தெரியாத பல கேள்விகள்.
கியூ என்னை முன்னே அழைத்துக்கொண்டு போனது. சுமார் எட்டு மணிக்கு கியூவில் சேர்ந்த நான் அம்பா ளைஅருகில் கண்டபோது மணி பதினொன்று அம்பா ளை நமஸ்கரித்து என் அறியாமையையும் வெளிப்படுத்தினேன். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால்அண்மையில் தரிசித்ததால்எனக்கு மெய்சிலிர்த்தது. பித்துப் பிடித்த நிலையில் நான் இருந்தேன். என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அந்த அழுகை கூட ஒரு வகை தொழுகைதானே. முந்தைய பிறவியில் இழந்த ஒரு பொருளை நான் இப்போது கண்டெடுத்தேனோ என்று நினைக்கத் தோன்றியது. தேடிக் கொண்டிருந்த பொருள், என் மடியில் வந்து விழுந்தது போன்ற மகிழ்ச்சி. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் அருகில் தரிசித்த கணத்தில் எனக்கு மெய்சிலிர்த்தது. என்னை பூசாரிகள் ஆசீர்வதித்தார்கள். தொடர்ந்து பக்தர்களுக்குப் பிரசாதம் கொடுக்கத் தொடங்கினார். சற்றே தள்ளி நின்று கொண்டிருந்தேன். நம்மை அவர் கவனிக்கவில்லையே என மனத்துக்குள்ளே ஏக்கம். அதே நேரம், தரிசனத்துக்கு வருகிற பக்தர்கள் எல்லோரும் பழம், பூ, என்று வாங்கிக் கொண்டு வந்ததை அவர் முன் சமர்ப்பிக்கிறார்கள்.
மௌனமாக மீண்டும் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கத் தொடங்கினார். மீண்டும் என்னை நோக்கி சாமி வரணும். எதிர்பார்த்துக்
கா த்திருந்தேன். லேசாகச் சிரித்துவிட்டு . சில நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் என்னை நோக்கி பார்த்து, அம்பாளின் உத்தரவு வந்தது, பிரசாதம் வழங்கத் தொடங்கினார் ஒரு கணமும் தாமதிக்காமல் கும்பிட்டு வணங்கி விட்டு அவரிடமிருந்து பிரசாதம் பெரும் போது புதையல் கிடைத்த சந்தோஷம் எனக்கு.
வீட்டுக்கு வந்ததும் வந்தபோது என் சந்தோஷம் இரட்டிப்பானது. குளித்துத் தயாராகி, பூஜை அறையில் அமர்ந்து அம்பாளை தியானித்தேன். அம்மனை மனத்திலே இருத்திக்கொண்டு அம்பாளை வணங்கி விட்டு, நுழைவாயிலையே பார்த்தபடி உட்கார்ந்துகொண்டிருந்தேன். இப்படி ஒரு அரிய வாய்ப்பினை அருளி இருக்கிறாளே என்ற மகிழ்ச்சி; அடுத்த சில நிமிடங்களில் என்னுடைய நண்பர் அந்த இடத்தில் பிரவேசித்தார். பல ரசிக்கத்தக்க விஷயங்கள் இடம்பெற்றன. அந்தக் கணத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஜெய ஜெய ஸ்ரீமதுரகாளி கோஷம் முழங்கியது
அங்கே திரண்டிருந்த ஆன்மிக அன்பர்கள் மத்தியில் ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது.அடுத்த சில நிமிடங்களில் எனக்குள்ளே ஒரு இனம் புரியாத உணர்வு. ஆனந்தத்தில் என் கண்கள் நீர் பெருக்கிட்டன.
அம்பாளுடைய தாம்பூலத்தில் புன்சிரிப்பு பார்க்கலாம். அம்பாளின் தாம்பூல ரஸத்தைப் பருகியவர்கள் மிகப்பெரிய கவிஞர்கள் ஆவார்கள். காளிதாஸர், காளமேகப் புலவர், ஏன் ஆதி சங்கரர் கூடதாம்பூலச் சுவையால் கவித்வம் அடைந்தவர் ஆவார்கள். அம்பாள் தாம்பூலம்தான் நமக்குக் கிடைக்கட்டுமே. அம்பாள் தன் மதுரமான பேச்சினால் தோற்கடிக்கிறாள். இனிமை என்பது அம்பாளின் “ஸ்ரீ மதுராம்பிகா” மொழிகளில்தான் மந்தஹாஸமான சிரிப்பில் இருக்கிறது. ஒப்பிட்டுக் கூற முடியாத அழகைக் கொண்டவள் அதனால் ப்ரகாசிக்கிறாள்! தங்கத் தோள்வளைகளால் அலங்கரிக்கப் பட்டவள் ஜய ஜய ஜகதம்பிகே ஜய ஜய ஸ்ரீ மதுராம்பிகா தாயே.
உயிர் ஆனாய் நீ என் உயிரில் ஊறும் உணர்வானாய்
ஞானப் பேரொளியின் பொருள் ஆனாய்
தேன் ஆனாய் உயிர்க்கு உயிரே ஆனாய்
மோட்ச சாம்ராஜ்யத்தின் கடைக்கண் பார்வையால் கடாட்சம் ஆனாய்
உன்னை உபாசனை, செய்யும் அனைவருக்கும்
எல்லா சம்பத்துகளையும் ஏராளமாக அள்ளிக் கொடுக்கும் தெய்வமே நீ ஆனாய்
உன்னை வாக்கு, காயம், மனம் எல்லாவற்றாலும் துதிக்கிறேன்.
வேதங்களின் ஸ்வரூபிணியாகத் திகழ்பவளே தாயே
தினமும் உன்னை யார் துதிக்கிறார்களோ, அவர்,
இவ்வுலகில் எல்லா நற்குணங்களும் நிறைந்தவர்களாகவும், மிகுந்த பாக்யசாலிகளாகவும்
புத்திப் பலம் உள்ளவர்களாகவும் ஆகிறார்கள்
உனக்கு தண்டனிட்ட நமஸ்காரம், தாயே
கடைக்கண் கடாட்சம் எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்க வல்லது.
எப்படி ஒரு பிரமாண்டமான மரம் எல்லா ஜீவராசிகளுக் கும் நிழல் கொடுத்து
அவர்களுடைய களைப்பைப் போக்கிப் புத்துணர்வு பெற வைக்கிறதோ
அது போன்ற கருணை கொண்டவள் நீ தேவியே நமஸ்காரம் உன் பேரழகை யாரால் வர்ணிக்க முடியும்
பார்வதி என்றும் போற்றித் துதிக்கப் படுகிற ஸ்ரீ மதுரகாளி தாயே
பக்தர்களின் ஏழ்மையைத் தொலைத்து ஐஸ்வர்யம் பெருக அருள்வாயாக.
குடும்பத்தில் மன அமைதியை இழந்து தவிப்பவர்கள் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பெறவும்,
குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரவும் அருள்வாயாக.
உன் கருணைக்கு உண்மையான பாத்திரவானாக என்னை ஆக்குவாயாக.
உன் கடைக்கண் பார்வையால் உடலே சிலிர்க்கும் ஸ்ரீ மதுரகாளி தாயே
உன் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.