கண்ணதாசனை ,அவரது உறவினர் ஒருவருடன் அவரது ஹென்ஸ்மன் ரோடு இல்லத்தில் (இப்போது அது கண்ணதாசன் சாலை ) சந்தித்தேன் .
பேச்சு பாடல்களைப் பற்றித் திரும்பியது .
‘இலக்கணத்திற்கு அடங்காத பாட்டை எழுதி ,கருத்தைத் தெளிவாகக் கூறுவதில் நீர் நீர்தான் ‘ என்றேன் .
‘அப்படியா ,சொல்லுங்க தம்பி’ என்றார்.
கெளரவம் படத்தில் ‘நீயும் நானுமா ,கண்ணா , நீயும் நானுமா பாட்டில் அறிவைக் கொடுத்ததோர் துரோணரின் கெளரவம் அவர்மேல் தொடுத்ததேன் அர்ஜுனன் கெளரவம் வரி இலக்கணத்தில் அடங்காது,ஓரளவு உருவகம் என்று சொல்ல வேண்டியதுதான் ஆனால் படத்தின் கதை இந்த இரண்டு வரிகளில் ‘
‘வேறே ‘
தங்கப்பதக்கதில் சோதனை மேல் சோதனை பாடலில் ,சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது என்று எழுதியிருக்கிறீர்கள் .
இந்த இரண்டு வார்த்தைகளும் சம்ஸ்க்ருதம் ,இதன் பொருள் சம்ஸ்க்ருதம்படித்தவர்களுக்கே தெரியுமா என்பதே சந்தேகம் .
சொந்தத்தை நாம் தேர்ந்தெடுக்க முடியாது ,இறைவன் கொடுப்பது ,தாய் ,தந்தை ,உடன் பிறப்புகள் மற்றும் மக்கள் .
ஆனால் , பந்தம் நாம் தேர்ந்தெடுப்பது ,-மனைவி .
கால்களிலும் கைகளிலும் விலங்கு பூட்டப்பட்டவன்,முயன்றால் ஒருவேளை கால் விலங்கை அகற்றிக்கொள்ள முடியும் .
ஆனால்,கை விலங்கை ?
கண்ணதாசன் சொன்னார் .
‘தம்பி ,நாங்க பாட்டு எழுதும்போது இதை எல்லாம் யோசிக்கறதில்லே,நான் பாட்டு தண்ணி அடிச்சுட்டு எழுதறதுதான் .
நீங்கல்லாம் இந்தமாதிரி அனுபவிச்சு சொல்றீங்களே அது போதும் ‘
‘நான் தண்ணியடிச்சா தூக்கம்தான் வருது , படிக்கவே வரலே ‘
கண்ணதாசன் தொடரும் .
Related:




Alcohol stimulates creativity. Kannadasan, Pt. Bhimsen Joshi, Flute Mali, etc reached great heights of creativity after imbibing alcohol.
It probably brings out the latent geniuses in them.
Not for all.
Yes.