ரிக் வேதத்தில் விஷ்ணு பல இடங்களில் துதிக்கப்படுகிறார் .
ஆனால் முழுமையாக ஐந்து ஆறு துதிகள் மட்டும் முழமையாக கிடைக்கப் பெற்றுள்ளன .
அவற்றின் தொகுப்பே இப்போது நாம் துதிக்கப் பயன் படுத்தும் விஷ்ணு ஸூக்தம் .

ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் யஃ பார்தி’வானி விமமே ராஜாக்ம்’ஸி யோ அஸ்க’பாயதுத்த’ரக்ம் ஸதஸ்தம்’ விசக்ரமாணஸ்த்ரேதோரு’காயோ .
ய : -எவர் ,யார் ,
பார்த்திவானி ரஜாம்சி -இப்புவியையும் ,அதனில் உள்ள அனைத்தையும் ,
விமமே -வெளிப்படுத்தினாரோ ,(உருவாக்கினாரோ),
ய ;-யார் ,எவர் ,
உத்தரம் -மேலுள்ள ,
சதஸ்தம் -விண்ணுலகை ,
அஸ்கபாய -தாங்கி உள்ளாரோ ,
த்ரேதா -(தனது) மூவடியால் ,
விசக்ரமாண : அளந்தாரோ ,
உருகாய -போற்றித் துதிக்கப் படுகிறாரோ ,
விஷ்ணோ -விஷ்ணுவின் ,
நுகம் வீர்யாணி -சிறப்பு மிக்க செயல்களை ,
ப்ரவோசம் -போற்றுவோம் .
யார் இப்புவியையும் ,மேலே உள்ள விண்ணுலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்து ,தாங்குகின்ராரோ ,
மூன்று அடிகளால் மூவுலகையும் அளந்தாரோ ,பெரியோரால் போற்றப்படுகிராரோ ,அந்த விஷ்ணுவின்
,சீரிய செயல்களைப் போற்றுவோம் .
2.விஷ்ணோ’ரராட’மஸி விஷ்ணோ”ஃப்றுஷ்டம’ஸி விஷ்ணோஃ ஶ்னப்த்ரே”ஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூர’ஸிவிஷ்ணோ”ர்த்ருவம’ஸி வைஷ்ணவம’ஸி விஷ்ண’வே த்வா ||……………
விஷ்ணோ -விஷ்ணுவின் ,
ரராடமஸி -நெற்றியாய் விளங்குகிறாய் ,
விஷ்ணோ -விஷ்ணுவின் ,
பிருஷ்டம் அஸி -பின் புறமாக உள்ளாய் ,
விஷ்ணோ -விஷ்ணுவின் ,
ஶ்னப்த்ரே- ஸ்த – இரண்டு கால்களாக உள்ளீர்கள் ,
விஷ்ணோ –விஷ்ணுவின்,
ஸ்யூ:அஸி -நாடிகளாக இருக்கிறாய்.
விஷ்ணோ -விஷ்ணுவின் ,
த்ருவம் அஸி -முடிச்சுகளாக உள்ளீர்கள்.
வைஷ்ணவமஸி -விஷ்ணுமயமாக இருக்கிறாய் ,
விஷ்ணவே -விஷ்ணுவின் அருளைப் பெறுவதற்காக,
த்வா -உன்னை (வணங்குகிறேன் ).
யக்ய சாலையின் மேல் விட்டமே !
நீ விஷ்ணுவின் நெற்றியாக விளங்குகிறாய் .
பின் புறமாக இருக்கிறாய் .
வாயிற் கால்களே !
நீங்கள் அவரது இரு கால்களாக உள்ளீர்கள் .
கயிறே !
நீ , அவரது நாடிகளாக இருக்கிறாய் .
முடிச்சுக்களே !
நீங்கள் , அவரது முடிச்சுகளாக உள்ளீர்கள் .
3.தத’ஸ்ய ப்ரியமபிபாதோ’ அஶ்யாம் | னரோ யத்ர’ தேவயவோ மத’ன்தி |உருக்ரமஸ்ய ஸ ஹி பன்து’ரித்தா | விஷ்ணோ” பதே ப’ரமே மத்வ உத்ஸஃ’ |
3
யத்ர -எங்கு , எங்கெல்லாம்,
தேவயவ -தேவர்கள் ,
மதந்தி -மகிழ்கிறார்களோ ,
நர :-மனிதர்கள் ,
ப்ரியமிபிபாத -செல்ல விரும்புகிறார்களோ ,
உருக்ரமஸ்ய -விஷ்ணுவின் ,
ஸ ஹி பந்துரிஸ்தா -மனத்திற்கு உகந்த இடமோ ,(இருப்பிடமோ ),
விஷ்ணோ -விஷ்ணுவின் ,
பரமே பதே -உயர்ந்த ,அனைத்திற்கும் மேலான திருவடியில் ,
மத்வ : அமுதத் தேனூற்று பெருகுகிறதோ ,
ததஸ்ய -அங்கே,
அச்யாம் -அடைவேனாக .
4.ப்ரதத்விஷ்ணு’ஸ்ஸ்தவதே வீர்யா’ய | ம்றுகோ ன பீமஃ கு’சரோ கி’ரிஷ்டாஃ |
யஸ்யோருஷு’ த்ரிஷு விக்ரம’ணேஷு | அதி’க்ஷயன்தி புவ’னானி விஶ்வா” |பரோ மாத்ர’யா தனுவா’ வ்றுதான | ன தே’ மஹித்வமன்வ’ஶ்னுவன்தி |………………….4
|
எங்கு தேவர்கள் மகிழ்ந்து இருக்கிறார்களோ ,எங்கு மனிதர்கள் செல்ல விரும்புகிறார்களோ ,
எது விஷ்ணுவாகிய உமக்கு உகந்த இருப்பிடமோ ,எங்கே அமுதத் தேனூற்று பெருகுகிறதோ ,
அந்த விஷ்ணுவின் திருவடியை அடைவேனாக,
கிரிஷ்டா -மலை மீது,
குசர -திரிகின்ற ,
பீமக : மிருக ;-பெரிய யானை ,
யஸ்ய -யாருடைய ,
உருஷு ,த்ரிஷு விக்ரமநேஷு -மூன்று பெரிய அடிகளுள் ,
விஸ்வா -அனைத்து ,
புவனானி -உலகங்களும் ,
அதிஷியந்தி -அடங்குகின்றனவோ ,
-விஷ்ணு – ப்ரதத் -அந்த விஷ்ணுவை ,
வீர்யாய -சிறப்பிற்காக ,
ஸ்தவதே -போற்றுவோம் .
தனுவா -அத்திருமேனி ,
மாத்ரயா பர ;வருதான ;- அளவில் அடங்காதது .
தே -அதன் (உமது ),
மஹித்வம் -சிறப்புகளை ,
அனு அச்னுவந்தி -அறிய முடியாது .
மலையில் உலவும் பெரிய யானை போல் சுதந்திரமானவரும்,கட்டுக்கு அடங்காதவரும் ,
தனது மூன்று அடிகளுக்குள் அனைத்து உலகங்களையும் அடக்கிய்வருமான அந்த விஷ்ணுவை அவரது
செயல் சிறத்திற்காக போற்றுவோம் .
இறைவனே !
உமது திருமேனி அளவிற்கு அடங்காதது .
உமது சிறப்புக்கள் அறிய முடியாதவை .
5.உபே தே’ வித்மா ரஜ’ஸீ ப்றுதிவ்யா விஷ்ணோ’ தேவத்வம் | பரமஸ்ய’ வித்ஸே | விச’க்ரமே ப்றுதிவீமேஷ ஏதாம் | க்ஷேத்ரா’ய விஷ்ணுர்மனு’ஷே தஶஸ்யன் .
தே -உமது ,
ப்ருதிவ்யா –நறுமணம் நிறைந்த பூமி ,
உபே -இரண்டை ,
வித்ம-அறிவோம் (நாங்கள் )
விஷ்ணோ தேவ -ஒளி திகழ் திருமாலே !
த்வம் -நீர் மட்டுமே ,
பரமஸ்ய -உயர்ந்த , மேலான உலகை,
வித்சே –அறிவீர்,
ஏஷ -இந்த ,
ப்ருத்வீம் -புவியில் ,
விஷ்ணு -விஷ்ணு ,
விசக்ரமே -நடந்து ,
ஏதாம் -அதனை ,
க்ஷேத்ராய -இருப்பிடமாகக் கொள்வதற்கு ,
மனுஷே –மனிதர்களுக்கு,
ததஸ்யன் -கொடுத்துள்ளார் .
விஷ்ணுவே !
நறுமணம் நிறைந்ததான பூமி மற்றும் விண்ணுலகம் இரண்டையும் நாங்கள் அறிவோம் .
ஒளி மிக்க திருமாலே !
நீர் மட்டுமே மேலான் உலகை அறிவீர் .
நீர் நடந்த இந்த பூமியை மனிதர்களுக்கு இருப்பிடமாகக் கொடுத்துள்ளீர் .
6.
த்ருவாஸோ’ அஸ்ய கீரயோ ஜனா’ஸஃ | ஊருக்ஷிதிக்ம்ஸுஜனி’மாசகார | த்ரிர்தேவஃ ப்று’திவீமேஷ ஏதாம் | விச’க்ரமே ஶதர்ச’ஸம் மஹித்வா | ப்ரவிஷ்ணு’ரஸ்து தவஸஸ்தவீ’யான் | த்வேஷக்க் ஹ்ய’ஸ்யஸ்தவி’ரஸ்ய னாம’ ||……………………………………………………….6.
கீரய ;ஜனாஸ -பணிவு மிக்க மக்கள் ,
அஸ்ய -அவரில் ,
த்ருவாஸ -பாதுகாப்பான உறைவிடைத்தை தேடுகிறார்கள் .
ஏதாம் -இந்த ,
ஊருஷிதம் -பூமியை ,
சுஜனிமா -விரிந்து பரந்த வாழ்விடமாக ,
சகார -செய்துள்ளார் .
சதவர்ச்சசம் -அளவிலா எழில் பொருந்திய ,
ஏஷு -இந்த ,
ப்ருத்வீம் -பூமியை ,
தேவ -தேவனான விஷ்ணு ,
மகித்மா -தந்து பெருமையால் ,
த்ரி -மும்முறை ,
விசக்ரமே–அளந்துள்ளார் .
தவ -உமது ,
ஸ : ஸ்தவீயான் -சிறந்த ,மேலான பெருமை ,
பிரவிஷ்ணு -விஷ்ணு ,
அஸ்து -உள்ளது .
து –மேலும்,
ஏஷம் ஹி -இதுவே ,
அஸ்ய ஸ்தவிரஸ்ய -இந்த மாபெரும் சிறப்பின் ,
நாம -பெயர்.
பணிவு மிகுந்த மக்கள் ,அவரில் பாதுகாப்பான உறைவிடத்தைத் தேடுகிறார்கள் .
இப்பூமியை , அவர் , இந்த மக்களுக்காக விரிந்து பரந்ததாகச் செய்துள்ளார் .
எழில் கொஞ்சும் இப்புவியை விஷ்ணு தனது கீர்த்தியினால் மும்முறை அளந்துள்ளார் .
மஹா விஷ்ணுவே !
உமது மேலான காக்கும் திறத்தால் நீர் விஷ்ணு எனப் பெயர் பெறுகிறீர் .
இது உமது பெருமைக்குப் பொருத்தமாக உள்ளது .
7.அதோ’ தேவா அ’வம்து னோ யதோ விஷ்ணு’ர்விசக்ரமே | ப்றுதிவ்யாஃஸப்ததாம’பிஃ |
இதம் விஷ்ணுர்விச’க்ரமே த்ரேதா னித’தே பதம் | ஸமூ’டமஸ்ய பாக்ம் ஸுரே ||
ய ;-எந்த ,
ப்ருதிவ்யா -பூமியின் ,
சப்ததாமஅபி -ஏழு பகுதிகளிலும் ,
விசக்ரமே -நடந்தாரோ ,
அத -அந்த பூமியின் ,
தேவா -தேவர்கள் ,
ந -நம்மை ,
அவந்து -காக்கட்டும் .
விஷ்ணு -விஷ்ணு ,
இதம் விசக்ரமே -நடந்தபோது ,
பதம்-தமது திருவடிகளை ,
திரேதா -மும்முறை ,
நிதேத -வைத்தார் .
7
அஸ்ய -அவரது ,
பாம்சுரே -பாத தூசியால் ,
ஸமூட -மூடப்பட்டது .
8.த்ரீணி’ பதா விச’க்ரமே விஷ்ணு’ர்கோபா அதா”ப்யஃ | ததோ தர்மா’ணி தாரயன்’ |
விஷ்ணோஃ கர்மா’ணி பஶ்யத யதோ”வ்ரதானி’ பஸ்ப்றுஶே | இன்த்ர’ஸ்ய யுஜ்யஃ ஸகா” ||
விஷ்ணு -விஷ்ணு ,
கோபா -அனைத்தையும் காப்பவரும் ,
அதாப்ய -ஏமாற்றப்பட முடியாதவரும் ,
த்ரீணி பதா -மூவடிகளால் ,
விசக்ரமே -அளந்து ,
அத -இங்கே ,
தர்மாணி -தர்மங்களை ,
தாரயன் -நிலை நிறுத்தினார் .
இந்த்ரஸ்ய -இந்திரனனின் ,
யுஜ்ய :சஹா -நெருங்கிய நண்பனான ,
விஷ்ணோ -விஷ்ணுவின் ,
கர்மாணி -செயல்களை ,
பச்யத -பாருங்கள்.
யத : அவற்றின் மூலம் ,
வ்ரதானி -வாழ்க்கை நெறிகளை ,
பஸ்பசே -வெளிப்படுத்தினார் .
விஷ்ணு அனைத்தையும் காப்பாற்றுவரும் ஒருவராலும் ஏமாற்றப்பட முடியாதவரும் ஆவார் .
தனது மூன்று அடிகளால் இவுலகை அளந்து,,இங்கே தர்மத்தை நிலை நிறுத்தியுள்ளார் .
இந்திரனின் நெருங்கிய நண்பனான விஷ்ணுவின் செயல்திறத்தைப் பாருங்கள் .
அவற்றின் மூலம் வாழ்க்கை நியதிகளை வெளிப்படுத்தினார் .
9.தத்விஷ்ணோ”ஃ பரமம் பதக்ம் ஸதா’ பஶ்யன்தி ஸூரயஃ’ | திவீவசக்ஷுராத’தம் | தத்விப்ரா’ஸோ விபன்யவோ’ ஜாக்றுவாக்ம்ஸஸ்ஸமி’ன்ததே | விஷ்ணோர்யத்ப’ரமம் பதம்
ஆததம் – பரந்து விரிந்த ,
திவி இவ -வானம் போல் ,
சஷு -கண்களை உடையவர்கள் ,
ஸூரய -ரிஷிகள் ,
தத் விஷ்ணோ -அந்த விஷ்ணுவின் ,
பரமம் பதம் -மேலான சிறந்த உறைவிடத்தை ,
ஸதா -எப்பொழுதும் ,
பஸ்யந்தி -காண்கிறார்கள் .
விப்ராஸ் -கவிதையை விரும்புபவர்களும் ,
விபன்யவ -முனிவர்களும் ,
ஜாக்ர்வாம்ஸ -விழிப்புற்றவர்களுமான ,
யத் -இவர்களே ,
விஷ்ணோ -விஷ்ணுவின் ,
யத் பரமம் பதம் -மேலான சிறந்த உறைவிடத்தை ,
ஸமிந்ததே -ஒளிரச் செய்கிறார்கள் .
விரிந்து பரந்த வானம் போல் கண்களை உடையவர்களான ரிஷிகள் ,விஷ்ணுவின் மேலான உறைவிடத்தை
,எப்போதும் காண்கிறார்கள் .கவிதையை விரும்புபவர்களும் ,முனிவர்களும்,விழிப்புற்றவர்களுமான
இவர்களே விஷ்ணுவின் மேலான அந்த உறைவிடத்தை ஒளிரச் செய்கிறார்கள் .
பர்யா”ப்த்யாஅன’ன்தராயாய ஸர்வ’ஸ்தோமோஉதி ராத்ர உ’த்தம மஹ’ர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வ’ஸ்ய ஜித்த்யை ஸர்வ’மேவ தேனா”ப்னோதிஸர்வம்’ ஜயதி ||
பர்யாப்த்யா -அளவற்ற ,
அனந்த ஆயாத -எல்லையில்லா செல்வம் பெறுவதற்கும் ,
ஸர்வத்தோம -மங்காப் புகழ் அடைவதற்கும் ,
அதிராத்ரம் – அதிராத்ரம்,
உத்தம -சிறந்த ,
மஹ -உயர்ந்த யாகம் ,
பவதி- ஆகிறது .
தென் -அந்த யாகத்தால் ,
ஸர்வஸ்ய ஆப்த்யை- அனைத்தும் கிடைக்கிறது .
ஸர்வஸ்ய ஜித்யை -அனைத்து வெற்றிகளும் கிட்டுகின்றன .
சர்வம் ஏவ -அனைத்தும் ,
ஆப்னோதி -அடையப்பெருகின்றன .
ஸர்வம் -அனைத்தும் வளம் பெறுகின்றன .
எல்லையில்லா வற்றாத செல்வம் பெறுவதற்கும் ,மங்காப் புகழ் பெறுவதற்கும் ,அதிராத்ரம் என்னும் யாகமே
மேலான யாஹம் ஆகும் .
அந்த யாகத்தால் அனைத்தும் கிடைக்கின்றன .
அனைத்து வெற்றிகளும் கிட்டுகின்றன .
அனைத்தும் அடையப் படுகிறது .
அனைத்தும் வளம் பெறுகின்றன .
விஷ்ணு ஸூக்தம் நிறைவுற்றது.
ஓம் தத் ஸத்
ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் யஃ பார்தி’வானி விமமே ராஜாக்ம்’ஸி யோ அஸ்க’பாயதுத்த’ரக்ம் ஸதஸ்தம்’ விசக்ரமாணஸ்த்ரேதோரு’காயோ விஷ்ணோ’ரராட’மஸி விஷ்ணோ”ஃப்றுஷ்டம’ஸி விஷ்ணோஃ ஶ்னப்த்ரே”ஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூர’ஸிவிஷ்ணோ”ர்த்ருவம’ஸி வைஷ்ணவம’ஸி விஷ்ண’வே த்வா ||
தத’ஸ்ய ப்ரியமபிபாதோ’ அஶ்யாம் | னரோ யத்ர’ தேவயவோ மத’ன்தி |உருக்ரமஸ்ய ஸ ஹி பன்து’ரித்தா | விஷ்ணோ” பதே ப’ரமே மத்வ உத்ஸஃ’ | ப்ரதத்விஷ்ணு’ஸ்ஸ்தவதே வீர்யா’ய | ம்றுகோ ன பீமஃ கு’சரோ கி’ரிஷ்டாஃ | யஸ்யோருஷு’ த்ரிஷு விக்ரம’ணேஷு | அதி’க்ஷயன்தி புவ’னானி விஶ்வா” |பரோ மாத்ர’யா தனுவா’ வ்றுதான | ன தே’ மஹித்வமன்வ’ஶ்னுவன்தி ||
உபே தே’ வித்மா ரஜ’ஸீ ப்றுதிவ்யா விஷ்ணோ’ தேவத்வம் | பரமஸ்ய’ வித்ஸே | விச’க்ரமே ப்றுதிவீமேஷ ஏதாம் | க்ஷேத்ரா’ய விஷ்ணுர்மனு’ஷே தஶஸ்யன் | த்ருவாஸோ’ அஸ்ய கீரயோ ஜனா’ஸஃ | ஊருக்ஷிதிக்ம்ஸுஜனி’மாசகார | த்ரிர்தேவஃ ப்று’திவீமேஷ ஏதாம் | விச’க்ரமே ஶதர்ச’ஸம் மஹித்வா | ப்ரவிஷ்ணு’ரஸ்து தவஸஸ்தவீ’யான் | த்வேஷக்க் ஹ்ய’ஸ்யஸ்தவி’ரஸ்ய னாம’ ||
அதோ’ தேவா அ’வம்து னோ யதோ விஷ்ணு’ர்விசக்ரமே | ப்றுதிவ்யாஃஸப்ததாம’பிஃ | இதம் விஷ்ணுர்விச’க்ரமே த்ரேதா னித’தே பதம் | ஸமூ’டமஸ்ய பாக்ம் ஸுரே || த்ரீணி’ பதா விச’க்ரமே விஷ்ணு’ர்கோபா அதா”ப்யஃ | ததோ தர்மா’ணி தாரயன்’ | விஷ்ணோஃ கர்மா’ணி பஶ்யத யதோ”வ்ரதானி’ பஸ்ப்றுஶே | இன்த்ர’ஸ்ய யுஜ்யஃ ஸகா” ||
தத்விஷ்ணோ”ஃ பரமம் பதக்ம் ஸதா’ பஶ்யன்தி ஸூரயஃ’ | திவீவசக்ஷுராத’தம் | தத்விப்ரா’ஸோ விபன்யவோ’ ஜாக்றுவாக்ம்ஸஸ்ஸமி’ன்ததே | விஷ்ணோர்யத்ப’ரமம் பதம் | பர்யா”ப்த்யாஅன’ன்தராயாய ஸர்வ’ஸ்தோமோஉதி ராத்ர உ’த்தம மஹ’ர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வ’ஸ்ய ஜித்த்யை ஸர்வ’மேவ தேனா”ப்னோதிஸர்வம்’ ஜயதி ||
ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||
Leave a Reply