It is one thing that one’s history is denied by invaders; it is unpardonable that people of the country destroy their own past glories. Africa when one reads about its history, is told that there was no civilization there before the advent of Christianity there.Yet , Africa was called the Cradle of Human civilization.( latest findings indicate that earliest DNA was from India). People brushed Early African history as one of Superstition and tribalism. But, as I had written, African culture bespeaks of an advanced culture in ancient days.Same treatment is meted out to Arabia stating that there was no culture to speak of there except Paganism.This is totally untrue. Arabia had a rich culture in ancient days.
In the case of India, invaders denied Indian history stating Indian history as Myths,Legends, stories.India had missionaries like Maxmuller who deliberately misinterpreted Indian Texts; India had Islam invaders who destroyed and looted temples, systematically wiped out symbols and heritage sites.Then India has a special homegrown species, Secularists,who are out to destroy Hinduism and Indian history and to promote and praise other cultures and religions;India also has a comedy piece Rationalists,very powerful, Atheists,who would denigrate Hinduism, but keep quiet on other Religions.
The last mentioned Species,under the garb of political parties in South India,proclaiming to be the Saviours of Tamils and Tamil language,leave no turn unturned in destroying , demolishing anything remotely connected to Hinduism and temples.
Systematically, under the guise of HRCE department ,which comes under the State government, these people have erased evidence of Great Tamil kings, Rajaraja Chola and Rajendra Chola having been ardent Followers of Hinduism. In their zeal, they have also destroyed critical evidence in the form of Epigraphs which have recorded the victory of Rajendra Chola(1012-1044-) so of Rajaraja Chola,who conquered areas upto Ganga.He was called Gangaikonda Chozhan,The Chozha who made Ganga his own.He built a temple in Tamil Nadu Gangaikonda Chozhapuram ,which is an architectural marvel.
He worshipped Siva by performing Abhishek of Siva with Ganga Water he brought from his North India Campaign,as Kailasanatha at Thiruloki .This temple is on the southern bank of Kollidam River.Later he built the Gangaikonda Chozhapuram temple on the northern bank of Kollidam.This evidence of his having built Gangaikonda Chozhapuram was in the form of Epigraphs in Thiruloki Temple.

In 2016,the Epigraphs were whitewashed and hence are in a state of disrepair.
HR&CE says it is ASI’s Job and they tossed the ball back to HRCE.
There are thousands of Epigraphs thus destroyed.Shall be writing in detail.
முதலாம் ராஜேந்திர சோழன் வடஇந்தியாவில் கங்கை வரை போர் தொடுத்து வெற்றி பெற்றதற்கு ஆதாரமாக விளங்கிய திருலோக்கி கல்வெட்டுகள், கோயில் கும்பாபிஷேகத்தின்போது வர்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளதால் வரலாற்று ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தனது தந்தை ராஜராஜ சோழன் போன்று முதலாம் ராஜேந்திர சோழனும் சிறந்த ஆட்சி நிர்வாகம் புரிந்ததுடன், தன்னுடைய படை பலத்தின் மூலம் பல சிற்றரசர்களை வென்று தனது பேரரசை விரிவுபடுத்தினார். அதன்படி, கி.பி.1012-1044-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த முதலாம் ராஜேந்திர சோழன் கங்கை போரில் வெற்றி பெற்று, கங்கை நதிநீரைக் கொண்டுவந்து, முதலில் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ள ஏமநல்லூர் என்று அழைக்கப்பட்ட திருலோக்கி என்ற ஊரில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு வந்து அங்கு உள்ள இறைவனை வழிபட்டுள்ளார்..
அதன் பின்னரே, கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையில் உள்ள சோழபுரத்துக்குச் சென்று அங்கு அழகிய சிவன் கோயிலை எழுப்பி, அதற்கு கங்கை கொண்ட சோழபுரம் என பெயரிட்டு அழைக்கப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு ஆதாரமாக திரு லோக்கி கைலாசநாதர் கோயிலில் கல்வெட்டுகள் பொறிக்கப் பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகளின் அடிப்படையில்தான் கங்கை கொண்ட சோழபுரத்தின் வரலாறு உலகுக்குத் தெரியவந்தது.
போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த கல்வெட்டு கள், அண்மையில் நடைபெற்ற இக்கோயில் கும்பாபிஷேகத் தின்போது முழுவதும் வர்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளன என்பது வரலாற்று ஆர்வலர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, கல்வெட்டு மற்றும் வரலாற்று ஆர்வலர் கோமன் கூறியபோது, “முதலாம் ராஜேந்திர சோழனின் கங்கை கொண்ட வெற்றி குறித்து வரலாற்றை நாம் அறிய திருலோக்கி கல்வெட்டுகளே ஆதாரமாக இருந்தன. இந்த கல்வெட்டுகள் பாதுகாக்கப்படாமல் இருந்ததால், அவை கும்பாபிஷேகத்தின்போது வர்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளன.
திருலோக்கி கைலாசநாதர் கோயிலில் 1932-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே இந்த கல்வெட்டுகளை படி எடுத்துள்ளனர். ஆனால், அவை வெளியிடப்படவில்லை. அதன்பிறகு எங்களைப் போன்ற வரலாற்று ஆர்வலர்கள் அந்த கல்வெட்டுகளை படி எடுத்துள்ளனர். இருந்தாலும் கோயிலில் இருந்த கல்வெட்டு பாதுகாக்கப்படாமல் அழிக்கப்பட் டுள்ளது வேதனையைத் தருகிறது.
இதுபோன்ற பல கோயில்களிலும் கும்பாபிஷேகத் தின்போது கல்வெட்டுகள் சிதைக்கப்படுகின்றன. இதனைப் பாதுகாக்க அறநிலையத் துறையும், தொல்லியல் துறையும் முன்வர வேண்டும் என்றார்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் கஜேந்திரனிடம் கேட்டபோது, “திருலோக்கி கோயி லில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்கு உள்ள கல்வெட்டுகள் மீது வர்ணம் பூசப்பட்ட தகவல் தற்போதுதான் தெரியவருகிறது. உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப் படும்” என்றார்.
இது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, “திருலோக்கி கைலாசநாதர் கோயில் முழுவதும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில்தான் உள் ளது. தொல்லியல் துறைக்கும் அக்கோயிலுக்கும் எவ்விதத் தொடர்பு இல்லை” என்றனர்https://www.hindutamil.in/news/tamilnadu/87330–2.html