பாவனோபனிஷத் பொருள் பொழிப்புரை பகுதி 2

 

18.

ஏதத்வாயு  சம்சர்க்ககோபாதி–பேதேன ரேசக:பாசக :

 

சோஷகோ தாக :

 

ப்லாகவ இதி பிராண –முக்யத்வேன பஞ்சதசா ஜடராக்னிற் பவதி .18

 

 

க்ஷாரக உததராக :க்ஷோபகோ ஜ்ரும்பகோ மோஹக இதி  நாக

 

ப்ராதான்யேன பஞ்சவிதாஸ்தே மனுஷ்யாணாம் தேஹகா பக்ஷ்ய

 

lalitha Devi and SriChakra
Lalitha Devi

 

போஜ்ய சோஜ்ய சோஷ்ய லேஹ்ய பேயாத்மக பஞ்சவித

 

மன்னம் பாசயந்தி .

 

 

ஏதாதசவக்னிகலா:சர்வக்ஞாயாத்யா  அந்தர் தசார தேவதா

 

18 to 20.

 

மேற்கூறிய பத்து  அக்னிகள்  பத்து தொழில்களையாற்றுகின்றன .

 

அவையாவன .

ஜாடராக்னி ,பிராணன் முதலிய ஐந்து வாயுக்களுடன் சேர்ந்து உபாதி

பேதத்தினால் ,ரேசகம்,பாசகம் (உணவைப் பரிபக்குவம் செய்தல் ,

 

சோஷகம் -உணவை உலர்த்துதல் (during digestion),

 

தாஹகம்- உணவை எரித்தல்,

 

ப்லாவகம் –நிறைத்தல் .(5 )

 

க்ஷாரகம்,உத்தாரகம்,க்ஷோபகம் ,ஜ்ரும்பகம் ,மோஹகம்  எனப்பட்ட ஐந்து

உப வாயுக்களுடன் , ஜாடாக்னி செய்கிறது..

இவை மனிதரின் உடலெங்கும் பரவி , பஷ்ய,போஜ்ய ,சோஷ்ய லேஹ்ய

,பேய( ஐந்து விதமான உணவுகள் நாம் சாப்பிடும்  முறையை வைத்து )

எனப்பட்ட ஐந்து வகையான உணவுகளை ஜீரணம் செய்கிறது .

இப்பத்து அக்நிகலைகளும் , சர்வக்க்யா முதலிய பத்துக் கோணங்கள் .

 

21.

சீதோஷ்ண –சுகது : க்கேச்சா :சத்வம் ரஜஸ்தமோ

 

வசின்யாதி –சக்தயோஷ்டௌ.

குளிர் ,வெப்பம் ,இன்பம் ,துன்பம் ,ஆசை,சத்வம் ,ரஜஸ் ,தமஸ் ஆகியன வசினி முதலான  எட்டு சக்திகள் .

 

22.

சப்தாதி தன்மாத்ரா பஞ்ச புஷ்ப பாணா:

 

23.மன இக்ஷு தனு:

 

24. ராக : பாச :

 

25.

த்வேஷான்குச:

 

 

ஸ்பர்சம் ,ரூபம், கந்தம் ,ரசம் , சப்தம் ஆகிய ஐந்து தன்மாத்திரைகள்

தேவியின் கையில் உள்ள புஷ்ப பானங்கள்;

 

மனமே கரும்பு வில் ;

ஆசையே பாசமாகிய கயிறு ,

த்வேஷமே அங்குசம் ,

 

26.

அவ்யக்த :மகத் அஹங்காரா :காமேஸ்வரி வஜ்ரேஸ்வரி

 

பகமாலின்யோந்தஸ்திரி-கோணகா தேவதா :

 

அவ்யக்தம்(விளக்கவொண்ணாதது),மகத்,அஹங்காரம் ஆகியவையே ,காமேஸ்வரி,,வஜ்ரேஸ்வரி மற்றும் பகமலலினி எனப்படும் உள் முக்கோண தேவதைகள் .

 

27. நிருபாதிக சம்விதேவ காமேஸ்வர:

 

உபாதியற்ற பிந்துவடிவான ஞானமே காமேஸ்வரர்

 

28.

சதானந்த பூர்ண :ச்வாத்மைவ பரதேவதா லலிதா

எப்பொழுதும் பரிபூர்ண ஆனந்தமாயிருக்கும் தனது ஆத்ம ஸ்வரூபமே

 

லலிதா தேவி .

 

29.

லவ்ஹித்ய   மேதச்ய சர்வச்ய விமர்ச :

ஜீவன்  சக்தி இவற்றின் செந்நிறம் , இவ்வனைத்தின் விமர்சம் .

 

30.

அனன்ய சித்தத்வேன ச சித்தி :

 

இந்த சாதைனையால் சித்தத்தை ஒருமுகப்படுத்தலே  சித்தியாகும் .

 

31.

பவானாயாக : க்ரியா : உபசார :.

 

பாவனை செய்வதே உபசாரம்.

 

32.

அகம் த்வமஸ்தி நாஸ்தி கர்த்தவ்ய மகர்த்தவ்ய முபாசிதவ்ய

 

மிதி விகல்பானா மாத்மனி விலாபனம் ஹோம :

நான் ,நீ ,உண்டு , இல்லை , செய்யத்தக்கது , தகாதது ,உபாசிக்கத்தக்கது எனும் வேறுபாடுகளை எல்லாம் ஆத்மாவில் ஒடுங்க ,லயிக்கச் செய்வதே ஹோமம்.

 

33.

பாவனா  விஷயாணா மபேத பாவனா தர்ப்பணம்

 

பாவனைக்கு சொல்லப்பட்ட விஷயங்களில் உயர்ந்தது தாழ்ந்தது பார்க்காமல் இருப்பதே தர்ப்பணம் .

 

34.

பஞ்சதச திதி ரூபேண காலச்ய பரிநாமவலோகன :

 

 

பதினைந்து திதிகளின் வடிவைக் காலம் மாறி வருவதை , சாட்சியாயிருந்து ,காண்பதே காட்சி

 

35.

ஏவம். முஹூர்த்த த்விதயம் முஹூர்த்த மாத்ரம் வா

 

பாவனா பரோ ஜீவன் முக்தோ பவதி ஸ ஏவ சிவ

 

யோகீதி கத்யதே.

 

இப்படி மூன்று முஹூர்த்தமோ , அல்லது இரண்டு முஹூர்த்தமோ ,அல்லது ஒரு முஹூர்த்தமோ ஆவது பாவனையில் நிலைத்திருப்பவன்

ஜீவன் முக்தன் ஆவான்

அவனே சிவயோகி எனப்படுவான் .

 

36.காதி மதேனாச்சக்ர பாவனா : பிரதிபாதிதா :

 

இவ்வாறு காதி மதத்தை ஒற்றி மிகவும் தனிப்பட்ட ஸ்ரீசக்ர பாவனைகள்

 

விளக்கப்பட்டன

 

ய.ஏவம் வேத ஸோதர்வசிரோ தீதே

யார் இதை உள்ளபடி அறிகிறானோ அவன் அதர்வ வேதத்தின் சிறந்த உண்மையைக் கற்றவன் ஆகிறான் .

 

இதத்துடன் பாவனோபனிஷத் நிறைவு பெற்றது .

 

பத்ரம் கர்நேபி …… சொல்லவும்.

 

Related;

 

http://ramanisblog.in/2014/04/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/

 

Comments

Leave a Reply

More posts

Discover more from Ramanisblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading