Tag: வேதம்

  • பாவநோபநிஷத் பொருள் பொழிப்புரை பகுதி 1

    ஸ்ரீ வித்யையின் ஆதார நூலான பாவநோபநிஷத் அதர்வ வேததினுடன் தொடர்புடையது .

    ஸ்ரீ சக்ரம் மற்றும் தந்திர முறையிலான தேவி வழிபாட்டை விளக்கும் அற்புதமான உபநிஷத்.

     

    ஸ்ரீவித்யா உபாசனையின் ஆழத்தை  இந்த உபநிஷத்தில் உணரலாம்.

    வேத சாரமாகவும் வித்யா உபாசனையின் மூல விளங்குவது  பாவனோபனிஷத் .

    சாக்த தத்துவம் மட்டுமன்றி அத்வைத தத்துவத்தை மிக அழகாக விளக்கும் நூல் இது.

    இந்த  உபநிஷத்தின் சம்ஸ்க்ருத மற்றும் தமிழ் வடிவம் அனைத்தும் புத்தக  வடிவிலும் பணம் கொடுத்தாலே மட்டும் படிக்க முடியும் என்ற நிலையை நான் வலைத்தளத்தில் கண்டேன்.

    அனைவரும் படிக்கும் பொருட்டு  இதனை வெளியிடுகிறேன், இரண்டு பகுதிகளாக..

    Mediafireல் மட்டும் இந்த உபநிஷத் இலவசமாக  உள்ளதாக அறிகிறேன் .

    பிழை இருப்பின் மன்னிக்கவும் .

    பிழைத் திருத்தங்களை வரவேற்கிறேன் ,

    ரகசியமான இந்த நூல்களை வெளியிடுவது தவறு என்பது சிலர் கருத்து .

    ஆனால் அறிய நூல்கள் அழிந்து போக வாய்ப்பு இருப்பதால் வெளியிடுவது சரி எனக் கருதுகிறேன்.

    ஆப்ரிக்காவின் மதமே அழிக்கப்பட்டுவிட்டது மேலை நாட்டவரால் .

     

    இது பற்றி எனது வலைப் பதிவில் காண்க .

    நமது தொன்மையான பொக்கிஷங்களை வெளியிட்டு அவைகளை காக்க வேண்டும்.

    வித்யா உபாசனை ரகசியமானது மட்டுமல்ல , ஆபத்தானதும் கூட.

    படிப்பது வேறு , பின்பற்றுவது வேறு .

    குரு முகமாக உபதேசம் பெற்றுத்தான் வித்யா உபாசனை செய்ய வேண்டும்.

    புத்தகம் மற்றும் வலைத்தளத்தில் படித்து விட்டு இறங்கினால் ஆபத்து..

    என்னுடைய இப்பதிவு இந்து மதத்தின், வேதத்தின்  முழு வீச்சை இளைய தலை முறைக்கு எடுத்துச் செல்லும் என நம்புகிறேன் ..

    வேதத்தின் முழுச் சாரத்தையும், சாங்க்யா, யோகா  மற்றும் நியாயா தத்துவங்களையும் இந்த உபநிஷத் அடக்கியுள்ளது.

     

    ஆங்கில மொழி பெயர்ப்பையும் (வாரியர் அவர்களது) கொடுத்துள்ளேன் .

    சம்ஸ்க்ருதத்தில் படிப்பது சிறந்தது..

    இல்லையெனில் நமது தாய் மொழியில் படிப்பது நன்று

     

    Sri Chakra of Devi
    The Sri Chakra

     

     

     

     

     

     

    பத்ரம் கர்நேபி  ச்ருணையாம தேவா;

     

    பத்ரம் பச்யே மோக்ஷ்மபிர் யஜஸ்திரா ரன்கைஸ் துஷ்டு வாசஸ்

    தநூஊ பி :I

     

    வ்யசேம தேவஹிதம் யதாயு :

     

    ஸ்வஸ்தி ந இந்திரோ வ்ருததச்ரவா:I

     

    ஸ்வஸ்தி ந :பூஷாவிச்வவேதா!

     

    ஸ்வஸ்தி நஸ் தார்ஷ்யோ அரிஷ்டநேமிI

     

    ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாது I

     

    ஓம் சாந்தி :சாந்தி : சாந்தி ;

     

    ஓம்

    ஓம் ,

    தேவர்களே I

     

    செவிகளால் நாங்கள் நல்லதையே கேட்க வேண்டும் .

     

    விழிகளால் நல்லவற்றையே காண வேண்டும் .

     

    வலிவான உடல்களுடனும் உடல் உறுப்புக்களுடனும்,தேவர்களைத் துதித்துப் போற்றிக்கொண்டு ,அவர்களுக்கு உவப்பான ஆயுள் எவ்வளவோ ,

    அதை நாம் அடைவோமாக .

    பெரும் புகழ்பெற்ற இந்திரன் நமக்கு நன்மை அளிக்கட்டும் .

    அனைத்தையும் அறியும் சூரியன் ,நமக்கு நன்மை அளிக்கட்டும் .

     

    தடை படாத கதியை உடைய கருடன் ,நமக்கு நன்மை அளிக்கட்டும் .

    ப்ருஹஸ்பதி நமக்கு நன்மைகளை வழங்குவாராக .

    முவ்வகயிலும் சாந்தி நிலவுவதாக .

     

    1.

    ஆத்மான மகண்ட –மண்டலாகார –மாவ்ருத்ய ஸகல-ப்ரஹ்மாண்ட-

     

    மண்டலம்  ஸ்வப்ரகாசம் த்யாயேத்I

    ஸ்ரீ குரு சர்வ காரண பூதா சக்தி :-1

     

    தன்னைச் சுற்றிலும் தன் ஒளியால் அனைத்துப் பிரம்மாண்ட மண்டலங்களிலும் எல்லையின்றிப் பிரகாசிக்கும் ஆத்ம ஜோதியை த்யானம் செய்க .

    குருவே அனைத்திற்கும் காரணமான சக்தி .

     

    2.

    தேன நவரந்திர ரூபோ தேக :-2

    ஆகையினால் ,ஒன்பது வாயில்களுடன் தோன்றும் ,உடல் குருவின் வடிவாகும் .

     

    3.

    நவ சக்ர ரூபம் ஸ்ரீ சக்ரம் -3

     

    ஒன்பது சக்ரங்களைக் கொண்ட இதுவே ஸ்ரீ சக்ரத்தின் வடிவாகும்.

     

    4.

    வாராஹி பித்ருரூபா குருகுல்லா பலிதேவதா  மாதா –4

     

    தாதுக்களுக்கு அதிதேவதையான வாராஹி , தந்தையின் வடிவம் ;

    மாமிசத்திற்கு அதிதேவதையான வாராஹி எனப்படும் குருகுல்லா தேவி ,

    அன்னையின் வடிவம்.

     

    5.

    புருஷார்த்தா; சாகரா :-5

    அறம், பொருள் , இன்பம் மற்றும் வீடு எனப்படும் புருஷார்த்தங்கள் ,

    நாற்புறமும் சூழ்ந்துள்ள கடல்கள் .

     

    6.

    தேஹோ நவரத்ன த்வீப :-6

     

    உடலே நவரத்னத் தீவு .

     

    7.

    த்வகாதி சப்ததாது –ரோம சம்யுக்த :-7

     

    ஏழு தாதுக்கள் ரோமத்துடன் நவரத்தினங்கள் .

    உரோமம்  ,மாமிசம் ,இரத்தம்,மேதை ,மஜ்ஜை ,நரம்புகள் ,எலும்புகள்.

     

    8.

     

     

    சங்கல்பா :கலபதர்வச்தேஜ: கல்ப கோத்யானம்-7

    தெளிந்த தீர்மானமே கற்பக வ்ருக்ஷங்கள்.

     

    உள்ளொளி படைத்த மனமே கற்பகக் காடு .

     

    ரசனையா –பாவ்யமானா மதுராம்ல –திக்த –கடு –கஷாய –லவண-ரஸா:

     

    ஷட்த்ருதவ :-9

     

    நாவினால் உணரப்படும் இனிப்பு ,புளிப்பு ,கசப்பு ,உவர்ப்பு ,கார்ப்பு மற்றும் துவர்ப்பு என்னும் அறுசுவைகளும் ஆறு ருதுக்கள்.

     

    10.

    ஞானமர்க்யம் ஞேயம் ஹவிர் ஜ்ஞாதா ஹோதா

     

    ஞாத்ரு –ஞான-ஞேஞானா –மபேத-பாவனம் ஸ்ரீசக்ர பூஜனம்-

     

    ஞானமே சிறந்த அர்க்யம் .

     

    இந்திரிய அக்னியில் அர்ப்பணம் செய்யப்படும் ஞேய பொருள்களே ஹவிஸாகும்.

    தன்னைத் தானே அறிபவன் ,ஹோமம் செய்பவன் .

    அறிபவனும் ,அறிவும் ,அறியப்படுவதும் ஒன்றே என்ற பரிவற்ற மனப் பாங்கே ஸ்ரீசக்ர பூஜையாகும் .

     

    11.

    நியதி : ஸ்ருங்காரராதயோ ரஸா அணிமாதய :

     

    ஒழுக்கத்துடன் கூடிய ஒன்பது ரசங்களும் ,சேர்ந்து அணிமா முதலிய பத்து

    சித்தி தேவதைகள் .

    நவரசங்கள் .

    பயம்,,கோபம்,வெறுப்பு ,ஹாஸ்யம் ,வீரம் ,கருணை ,வியப்பு மற்றும் அமைதி .

     

    12.

    காம –குரோத –லோப –மோக –மத –மாத்சர்ய-புண்ய –பாப –மாயா ப்ராஹ்மாயத்-யஷ்டசக்த்ய :

    காமம் ,கோபம் ,லோபம் , மோகம் மதம் ,மாத்சர்யம் ,புண்யம் மற்றும் பாபம்  இவை  எட்டும்  மாத்ருகா சக்திகள் .

     

    13.

    ஆதார நவகம்முத்ரா சக்த்யா .

     

    மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்கள் ,இவைகளுக்கு மேலே உள்ள

    அகுல சகஸ்ராரம் ,கீழுள்ள குல சஹஸ்ராரம் ,இந்திர யோனி –உள்நாக்கு ஆகிய ஒன்பது ஆதாரங்களும் இவற்றின் சமஷ்டியாக ஒன்றும் சேர்த்து பத்து முத்ரா சக்திகள் .

     

    14.

    ப்ருத்வியப்ததேஜோ –வாய்வாகாச -ச்ரோத்ர –த்வக்-சக்ஷூர் –ஜிஹ்வாக்காரண-வாக் –பாணி –பாத –பாயுபச்தானி  மனோ விகாரா :

    காமா கர்ஷின்யாதி சோடச-சக்த்ய:

     

    நிலம் ,நீர் , நெருப்பு ,காற்று ,ஆகாயம் :

    செவி ,மெய் ,கண் ,நாக்கு ,மூக்கு ,வாக்கு :

    கை ,கால் பாயு ,உபஸ்தம் எனும் பதினைந்தும் , மற்றும் ,

    இவற்றால் மாறுபடும் மனத்துடன் காமகார்ஷினி முதலான பதினாறு சக்திகள் .

     

    15.

    வ்சனாதாகமான –விசர்க்கானந்த –ஹானபேதையோ பேக்ஷாக்ய-

    புத்தயோனங்க குசுமண்டத்திஷ்டவ்.

    பேசுதல் வாங்குதல் ,நடத்தல் ,கழித்தல் ரமித்தல் ஆகிய ஐந்து கர்மேந்திரியத் தொழில்களும்,தாகம் ,கிரகணம் ,உபேக்ஷை எனும் புத்தியின்  தொழில்களும் ,அனங்க குசுமா  எனப்படும் எட்டு சக்திகள்.

     

    16.

    அலம்புசா குஹூர் –விச்வோதரா வாரணாகமன- ஹஸ்தி ஜிஹ்வா

    யசொவதீ பயஸ்வினி காந்தாரி பூஷா சங்கினி சரசஸ்வதீதா

    பிங்களா சுஷும்னா சேதி சதுர்த்தச நாட்ய :

    சர்வ:சம்ஷன்யோபாதி  சதுர்த்தச சக்தய:

    அலம்புசா ,குஹு ,விச்வோதாரா ,வாரணா,ஹஸ்தி –ஜிஹ்வை ,யசோவதீ,

     

    பயச்விநீ ,காந்தாரி ,பூஷா ,சங்கினி ,சரஸ்வதி ,இடை , பிங்கலை ,சுஷும்னை  ஆகிய பதினான்கு நாட்களின் சக்திகளே சர்வ சம்க்ஷோபிணீ

    முதலிய பதினான்கு சக்திகள்.

     

    17.

    பிராணாபான –வ்யாநோதான –சமான –நாக –கூர்ம –க்ருகர-தேவதத்த –தனஞ்சயா தசாவயவ :

    சர்வ சித்தி –பிரதாதீ –பகிர்த்தசார தேவதா .

     

    பிராணன் ,அபானன்,,வியானன்,உதானன், சமானன் ,நாகன் ,கூர்மன் ,க்ருகரன் ,தேவதத்தன் ,தனஞ்சயன்  முதலிய பத்து வாயுக்களும் வெளிப்பத்துக் கோணங்களில் உள்ள தேவதைகள் .

     

     

     

    Bhavanopanishad.

    English Translation by Dr.A.G Krishna Warrier.

     

     

    Published by The Theosophical Publishing House, Chennai
    Om ! Gods ! With ears let us hear what is good;

    Adorable ones ! With eyes let us see what is good.

    With steady limbs, with bodies, praising,

    Let us enjoy the life allotted by the gods.

    May Indra, of wide renown, grant us well-being;

    May Pusan, and all-gods, grant us well-being.

    May Tarksya, of unhampered movement, grant us well-being.

     

    May Brihaspati grant us well-being.

    Om ! Peace ! Peace ! Peace !

    1. The holy Teacher is the Power (Para-Sakti) that is the cause of all.

    2. Of that Power the body with its nine orifices is the form.

    3. It is the holy Wheel in the guise of the nine wheels.

    4. The Power of the Boar is paternal: Kurukulla, the deity of sacrifice, is maternal.

    5. The (four) human Ends are the oceans (purusharthas – dharma, artha, kama and moksha).

    6- 7. The body with the seven constituents (Chile, blood, flesh, fat, bone, marrow and semen) like the skin and the hair is the island of the nine gems.

    8. Resolutions are the wish-granting trees; energy (of the mind) is the garden of the trees of plenty.

    9. The six seasons are the tastes, namely sweet, sour, bitter, pungent, astringent and saltish, which are apprehended by the tongue.

    10. Knowledge is the material for worship; the object of knowledge is the oblation; the knower is the sacrificer. The meditation on the identity of the three, knowledge, its object, and the knower, is the worship rendered to the holy Wheel.

    11. Destiny and sentiments like love are (the miraculous attainments like) atomicity, etc. Lust, anger, greed, delusion, elation, envy, merit, demerit – these constitute the eight powers of Brahma, etc. (Brahma, Maheshvari, Kaumari, Vaishnavi, Varahi, Raudri, Charmamunda and Kalasamkarsini).

    12. The nine abodes (muladhara etc.,) are the powers of the mystic gestures.

    13. The earth, water, fire, air, ether, ear, skin, eye, tongue, nose, speech, feet, hands, the organs of evacuation and generation and the modification of mind are the sixteen powers such as the pull of lust, etc.

    14. Speech, grasp, motion, evacuation, generation, and the attitudes of rejection, acceptance and apathy are the eight (entities) such as the flower of love, etc.

    15. Alambusa, kuhu, visvodara, varana, hastijihva, yasovati, payasvini, gandhari, pusa, sankhini, sarasvati, ida, pingala and susumna – these fourteen arteries are the fourteen powers such as the all-exciting, etc.

    16. The five vital breaths and the five minor breaths are the ten divinities of the outer spokes, (styled) Sarvasiddhiprada, etc.

    17. The digestive fire becomes fivefold through distinctions based on its association with this pre-eminent breath. (They are) what ejects, what cooks, what dries, what burns and what inundates.

    18. Owing to the prominence of the minor breath, these (fires) in the human body come to be styled as the corroder, the ejector, the agitator, the yawner and the deluder. They promote the digestion of the fivefold food: eaten, chewed, sucked, licked and imbibed.

    19. The ten aspects of Fire are the ten divinities of the inner spokes, Sarvajna, etc.

    20. The qualities of cold, heat, pleasure, pain, desire, sattva, rajas and tamas are the eight powers, vasini, etc.

    21. The five, rudimentary sound, etc., are the flowery shafts.

    22. Mind is the bow made of sugarcane.

    23. Attachment is the cord (that binds).

    24. Aversion is the hook.

    25. The unmanifest, the Great, and the principle of Egoism are the divinities of the inner triangle: Kameshvari, Vajreshvari and Bhagamalini.

    26. Absolute awareness, verily, is Kameshvara.

    27. The supreme divinity, Lalita, is one’s own blissful Self.

    28. Of all this the distinctive apprehension is the red glow.

    29. Perfection (ensues from) exclusive concentration of the mind.

    30. In the performance of meditation consist (various acts of) respectful service.

    31. The act of oblation is the merger in the Self of distinctions like I, Thou, Existence, non-Existence, the sense of duty and its negation, and the obligation worship.

    32. Assuagement is the thought of identity of (all) objects of imagination.

    33. The view of time’s transformation into the fifteen days (of the half lunar month) points to the fifteen eternal (divinities).

    34. Thus meditating for three instants, or two, or even for a single instant, one becomes liberated while living; one is styled the Siva-Yogin.

    35. Meditations on the inner wheel have been discussed (here) following the tenets of Saktaism.

    36. Whoso knows thus is a student of the Atharvasiras.

    Om ! Gods ! With ears let us hear what is good;

    Adorable ones ! With eyes let us see what is good.

    With steady limbs, with bodies, praising,

    Let us enjoy the life allotted by the gods.

    May Indra, of wide renown, grant us well-being;

    May Pusan, and all-gods, grant us well-being.

    May Tarksya, of unhampered movement, grant us well-being.

    May Brihaspati grant us well-being.

    Om ! Peace ! Peace ! Peace !

    Here ends the Bhavanopanishad, included in the Atharva-Veda.

     

    Enhanced by Zemanta
  • துர்க்கா ஸூக்தம் அர்த்தம்

     

    1.ஓம் || ஜாதவே’தஸே ஸுனவா ஸோம’ மராதீதோ னித’ஹாதி வேதஃ’ |
    ஸ னஃ’ பர்-ததி’ துர்காணி விஶ்வா’ னாவே ஸிம்தும்’ துரிதா‌உத்யக்னிஃ ||

     

    Goddess of Valor, Durga-Hinduism
    Durga Devi

     

     

    ஜாத வேதஸே -அனைத்தையும் அறிபவரான அக்னியே !

    ஸோமம் -சோமத்தை ,

    ஸுனவாம -பிழிந்து உமக்கு அளிக்கிறோம் .

    வேத :அக்னி தேவன் ,

    அராதீயதே -தடைகளை , இடர்ப்பாடுகளை ,

    நிதஹாதி -சுட்டு எரிக்கட்டும் .

    நாவா -படகு ,

    ஸிந்தும் இவ -கடலைக் கடக்க உதவுவது போல் ,

    ந -எங்களை ,

    துர்காணி -துன்பங்களில் இருந்து,

    பர்ஷததி -காக்கட்டும் .

    துரிதா -நாம் செய்யும் தவறுகளில் இருந்து நம்மை ,

    அக்னி -அக்னி ,

    அதி -நம்மைக் காக்கட்டும் .

     

    அக்னியே !

    சோமத்தைப் பிழிந்து அதன் ரசத்தை உனக்கு அளிக்கிறோம் .

    வாழ்வில் வரும் இடையூறுகளை அக்னி அழிக்கட்டும் .

    படகின் வழியே கடலைக் கடத்துவித்தல் போல், அக்னி தேவன் , எங்களை எல்லாத் துன்பங்களிலும்

    தவறுகளிலும் இருந்து காக்கட்டும் .

     

    2.தாக்னிவ’ர்ணாம் தப’ஸா ஜ்வம்தீம் வை’ரோனீம் க’ர்மலேஷுஜுஷ்டா”ம் |
    துர்காம் தேவீக்‍ம் ஶர’ணஹம் ப்ரப’த்யே ஸுதர’ஸி தரஸே’ னமஃ’ ||

     

    அக்னி வர்ணாம் -செஞ்சுடர் வண்ணம் கொண்டவளும் ,

    தபஸா -மேன்மையான தவத்தினால் ,

    ஜ்வலந்தீம் -ஒளிர்பவளும் ,

    வைரோசனீம் -ஈசருக்கு உரியவளும் ,

    கர்ம பலேஷு -செய்யப்படும் செயல்களுக்கு மற்றும் அதன் பலன்களுக்கு ,

    ஜுஷ்டாம் -ஆற்றலாக இருப்பவளும் ,

    (ஆகிய ),

    துர்காம் தேவீம் -துர்கா தேவியை ,

    சரணம் ப்ரபத்யே -நான் சரணடைகிறேன் .

     

    தரஸே -கரை சேர்ப்பவளே !

    ஸுதரஸி -கரை சேர்ப்பாய் ,

    நம :-நமஸ்காரம் .

     

    செஞ்சுடர் வண்ணம் கொண்டவளும் ,மேலான தவத்தினால் ஒளிர்பவளும் ,இறைவனுக்கு உரியவளும்

    ,செயல்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் இவற்றின் ஆற்றலாக இருப்பவளும் ஆனா துர்கா தேவியை ,

    நான் சரணடைகிறேன் .

    துன்பக் கடலில் இருந்து கரி சேர்ப்பவளே !

    எங்களைக் காப்பாய் .

    உனக்கு நமஸ்காரம் .

     

    3.க்னே த்வம் பா’ரயா னவ்யோ’ ஸ்மாம்த்-ஸ்வஸ்திபிரதி’ துர்காணிவிஶ்வா” |
    பூஶ்ச’ ப்றுத்வீ ப’ஹுலா ன’ ர்வீ பவா’ தோகா தன’யா ஶம்யோஃ ||

     

    அக்னே -அக்னியே !

    த்வம் -நீவிர் ,

    நவ்ய ;-போற்றுதலுக்கு உரியவர் ,

    ஸ்வஸ்திபி -மகிழ்ச்சியான பாதைகளின் மூலம், வழியாக ,

    அஸ்மான் -எங்களை ,

    விஸ்வா -அனைத்து ,

    துர்காணி -இன்னல்களுக்கும்

    அதிபராய -அப்பால் எடுத்துச் செல்வாய் ..

    ந -எங்கள் ,

     

    பூ : -ஊரும் ,

    ப்ருத்வீ ,-நாடும் ,

    உர்வீ ச -உலகும் ,

    பஹுலா -செழித்து ஓங்கட்டும் .

    தோகாய -பிள்ளைகளுக்கும் ,

    சம்யோ :இன்பம் தருபவனாக ,

    பவா -இருப்பாய் .
    அக்னியே !

    நீ போற்றுதலுக்கு உரியவன் .

    இன்பம் நிறைந்த பாதகளின் வழியே எங்களை எல்லாத் துன்பங்களுக்கும் அப்பால் எடுத்துச் செல்வாய் .

    எங்கள் ஊரும் நாடும் உலகும் செழிக்கச் செய்வாய் .

    எங்கள் பிள்ளைகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் மகிழ்வைத் தருவாய் .

    4.விஶ்வா’னி னோ துர்கஹா’ ஜாதவேதஃ ஸிம்துன்ன னாவா து’ரிதா‌உதி’பர்-ஷி |
    அக்னே’ அத்ரிவன்மன’ஸா க்றுணானோ”‌உஸ்மாகம்’ போத்யவிதானூனா”ம் ||

     

    ஜாத வேத: -அக்னியே !

    விஸ்வானி -அணைத்து ,

    துர்கஹா -துன்பங்களையும் அழிப்பவனே ,
    ஸிந்தும் நாவா -கடலில் படகின் மூலம் ,

    துரிதா -இன்னல்களிருந்து ,
    ந -எங்களை ,

    அதி பர்ஷி -காப்பாய் .
    அக்னே -அக்னே !

    அஸ்மாகம்-எங்கள் ,

    தனுனாம் -உடல்களை ,

    அவிதா -காப்பவனே !

    மனஸா -மனத்தால் ,

    க்ருணான -மீண்டும் ,மீண்டும் சொல்கின்ற ,

    அத்ரிவத் -அத்ரி முனிவரைப் போல் ,

    போதி -மனதில் கொள்வாய் .

     

    அக்னியே !

    எல்லாத் துன்பங்களிலிருந்தும் எங்களைக் காப்பவனே !

    கடலில் கஷ்டப்படவடுவனைப் படகின் மூலம் காப்பது போல் ,இன்னல்களிருந்து எங்களைக் காப்பாய் .

    எங்கள் உடல்களைக் காப்பவனே !

    எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மனத்தால் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கின்ற

    அத்ரி முனிவரைப் போல் எங்கள் நலனை மனதில் கொள்வாய் .

     

     

     

    5. ப்றுனா ஜிக்ம் ஸஹ’மானமுக்ரக்னிக்‍ம் ஹு’வேம பமாத்-தஸ்தா”த் |
    ஸ னஃ’ பர்-ததி’ துர்காணி விஶ்வா க்ஷாம’த்தேவோ அதி’ துரிதா‌உத்யக்னிஃ 

    ப்ருதனாஜிதகும் -எதிரிகளின் படையை அழிப்பவனும் ,

    ஸகமானம் -தாக்குபவனும் ,

    உகரம்-உக்ரமானவனுமான ,

    அக்னிம் -அக்னி தேவனை ,

    பரமத் சதஸ்யாத் -மன்றத்தின் உயர்ந்த இடத்தில் இருந்து ,

    ஹுவேம -அழைக்கிறோம் .

    ஸ -அந்த ,

    அக்னி -அக்னி ,

    தேவ -தேவன் ,

    ந -எங்களை ,

    விஸ்வா -அணைத்து ,

    துர்காணி -துன்பங்களுக்கும் ,

    ஷாமத் -அழியக் கூடியவற்றிற்கும்,

    துரிதாத் -தவறுகளுக்கும் ,

    அதி -அப்பால் ,

    பர்ஷாத் -காக்கட்டும் .
    எதிரிகளின் படைகளைத் தாக்கி அழிப்பவனும் ,உக்ரமானவனும் ஆகிய அக்னி தேவனை உயர்ந்த

    இடத்திலிருந்து இங்கே எழுந்து அருளுமாறு வேண்டுகிறோம் .

    அவன் , எங்களை அனைத்துத் துன்பங்களுக்கும் ,மற்றும் அழியக் கூடியவற்றிர்க்கும் தவறுகளுக்கும்

    அப்பால் எடுத்துச் செல்லட்டும் .

    எங்களைக் காக்கட்டும் .

     

    6.ப்ரத்னோஷி’ மீட்யோ’ அத்வரேஷு’ னாச்ச ஹோதா னவ்ய’ஶ்ச ஸத்ஸி’ |
    ஸ்வாம்சா”‌உக்னே னுவம்’ பிப்ரய’ஸ்வாஸ்மப்யம்’  ஸௌப’மாய’ஜஸ்வ II
    அக்னே -அக்னியே !

    அத்வரேஷு வேள்விகளில் ,

    ஈட்ய – புகழப்படுகின்ற ,

    கம் -ஆனந்தத்தை ,

    ப்ரத்னோஷி -அதிகரிக்கிறாய் .

    ஹோதா -வேள்வி செய்பவர்களுள் ,

    ஸனாத் ச -தொன்மையானதும் ,

    நவ்ய ச -புதியனாகவும் ,

    ஸத்ஸி -இருக்கிறாய்.

    ஸ்வாம்- உனது ,

    தனுவம் ச -வடிவாக இருக்கின்ற ,

    அஸ்மப்யம் -எங்களுக்கு ,

    பிப்ரஸ்ய -மகிழ்ச்சியைத் தருவாய் .

    ச -மேலும் ,

    ஸௌபகம் -நன்மையை ,

    அயுஜஸ்ய -எல்லாப் புறங்களில் இருந்தும் கொண்டு வருவாய் .

     

    அக்னியே !

    வேள்விகளில் புகழ்ச்சியால் சிறப்பிடப் படுகின்ற நீ எங்களின் சந்தோஷத்தை அதிகரிக்கின்றாய் .

    வேள்வி ஆற்றுபவர்களுள் நீ தொன்மையானவனும் மற்றும் புத்யவனும் ஆக விளங்குகிறாய் .

    உனது வடிவவி இருக்கின்ற எங்களுக்கு இன்பத்தைத் தருவாய் .

    அனைத்துப் புறங்களிலிருந்தும் எங்களுக்கு நன்மையைக் கொண்டு வருவாய் .

     

    7.கோபிர்ஜுஷ்ட’மயுஜோ னிஷி’க்தம் தவேம்”த்ர விஷ்ணோனுஸம்ச’ரேம |
    னாக’ஸ்ய ப்றுஷ்டபி ம்வஸா’னோ வைஷ்ண’வீம் லோக ஹ மா’தயம்தாம் ||

     

     

    இந்த்ர -தேவர்களின் தலைவனே !

    அயுஜ – பாவக் கலப்பில்லாதவன் ,

    விஷ்ணோ -எங்கும் நிறைந்தவன் ,

    கோபி :-பசுக்களுடன் ,

    ஜுஷ்டம்-மேலான ஆனந்தம் ,

    நிஷிக்தம் -மிகுதியாகப் பெற ,

    தவ -உன்னை ,

    அனு சஞ்சரேம-பின் தொடர்கிறோம் .

    பிருஷ்டம் அபி -உயர்ந்த ,

    நாகஸ்ய ‘தேவர்கள் உலகில் ,

     

    ஸம்வஸான -உறைகின்ற ,

    வைஷ்ணவீம் -விஷ்ணு உருவான தேவியிடம் ,

    இஹ -இந்த ,

    லோகே -உலகம் ,

    மாதயந்தாம் -இன்பத்தைத் தரட்டும் .

    இறையே !

    நீ பாவக் கலப்பிலாதவன் .
    எங்கும் நிறைந்தவன் .

    ஏராளமான பசுக்களுடன் நிறைந்த செல்வம் பெற்று இன்புறுவதர்க்காக உன்னைத் தொடர்கிறோம் .

    விஷ்ணு வடிவினளான தேவியிடம் நான் கொண்ட பக்திக்காக ,உயர்ந்த தேவருலகில் வாழுகின்ற தேவர்கள்

    இந்த உலகில் எனக்கு மகிழ்வைத் தரட்டும்.

    ஓம் காத்யானாய’ வித்மஹே’ கன்யகுமாரி’ தீமஹி | தன்னோ’ துர்கிஃ ப்ரசோதயா”த் ||

    ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

    காத்யயனாய -காத்யாயனி தேவியை ,

    வித்மஹே -அறிவோமாக .

    கன்யாகுமாரி . -கன்யா குமாரியை ,

    தீ மஹி -த்யானிப்போம் .

    தத் துர்கி -அந்த துர்கா தேவி ,

    ந -நம்மை ,

    ப்ரசோதயாத் -தூண்டட்டும் .
    காத்யாயனி தேவியை அறிவோமாக .

    அதன் பொருட்டு , அந்த கன்னியாகுமரி தேவியை த்யாநிப்போம் .

    அந்த துர்கா தேவி நம்மைத் துண்டுவாளாக .

     

     

     

     

    Enhanced by Zemanta
  • விஷ்ணு ஸூக்தம் அர்த்தம் ,பொருளுரை .

    ரிக் வேதத்தில் விஷ்ணு பல இடங்களில் துதிக்கப்படுகிறார் .

    ஆனால் முழுமையாக ஐந்து ஆறு துதிகள் மட்டும் முழமையாக கிடைக்கப் பெற்றுள்ளன .

    அவற்றின் தொகுப்பே இப்போது நாம் துதிக்கப் பயன் படுத்தும் விஷ்ணு ஸூக்தம் .

     

    Vishnu , one among the Trinity of Hinduism
    Vishnu

     

    ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் யஃ பார்தி’வானி விமமே ராஜாக்ம்’ஸி யோ அஸ்க’பாயதுத்த’ரக்‍ம் ஸதஸ்தம்’ விசக்ரமாணஸ்த்ரேதோரு’காயோ .

    ய : -எவர் ,யார் ,

     

    பார்த்திவானி ரஜாம்சி -இப்புவியையும் ,அதனில் உள்ள அனைத்தையும் ,

     

    விமமே -வெளிப்படுத்தினாரோ ,(உருவாக்கினாரோ),

     

    ய ;-யார் ,எவர் ,

     

    உத்தரம் -மேலுள்ள ,

     

    சதஸ்தம் -விண்ணுலகை ,

     

    அஸ்கபாய -தாங்கி உள்ளாரோ ,

     

    த்ரேதா -(தனது) மூவடியால் ,

     

    விசக்ரமாண : அளந்தாரோ ,

     

    உருகாய -போற்றித் துதிக்கப் படுகிறாரோ ,

     

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

     

    நுகம் வீர்யாணி -சிறப்பு மிக்க செயல்களை ,

     

    ப்ரவோசம் -போற்றுவோம் .

     

    யார் இப்புவியையும் ,மேலே உள்ள விண்ணுலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்து ,தாங்குகின்ராரோ ,

     

    மூன்று அடிகளால் மூவுலகையும் அளந்தாரோ ,பெரியோரால் போற்றப்படுகிராரோ ,அந்த விஷ்ணுவின்

     

    ,சீரிய செயல்களைப் போற்றுவோம் .

     

    2.விஷ்ணோ’ரராட’மஸி விஷ்ணோ”ஃப்றுஷ்டம’ஸி விஷ்ணோஃ ஶ்னப்த்ரே”ஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூர’ஸிவிஷ்ணோ”ர்த்ருவம’ஸி வைஷ்ணவம’ஸி விஷ்ண’வே த்வா ||……………

     

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

     

    ரராடமஸி -நெற்றியாய் விளங்குகிறாய் ,

     

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

     

    பிருஷ்டம் அஸி -பின் புறமாக உள்ளாய் ,

     

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

    ஶ்னப்த்ரே- ஸ்த – இரண்டு கால்களாக உள்ளீர்கள் ,

     

    விஷ்ணோ –விஷ்ணுவின்,

     

    ஸ்யூ:அஸி -நாடிகளாக இருக்கிறாய்.

     

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

     

    த்ருவம் அஸி -முடிச்சுகளாக உள்ளீர்கள்.

     

    வைஷ்ணவமஸி -விஷ்ணுமயமாக இருக்கிறாய் ,

     

    விஷ்ணவே -விஷ்ணுவின் அருளைப் பெறுவதற்காக,

     

     

    த்வா -உன்னை (வணங்குகிறேன் ).

     

    யக்ய சாலையின் மேல் விட்டமே !

     

    நீ விஷ்ணுவின் நெற்றியாக விளங்குகிறாய் .

     

    பின் புறமாக இருக்கிறாய் .

    வாயிற் கால்களே !

     

     

    நீங்கள் அவரது இரு கால்களாக உள்ளீர்கள் .

     

    கயிறே !

     

    நீ , அவரது நாடிகளாக இருக்கிறாய் .

     

    முடிச்சுக்களே !

     

    நீங்கள் , அவரது முடிச்சுகளாக உள்ளீர்கள் .

     

    3.தத’ஸ்ய ப்ரியமபிபாதோ’ அஶ்யாம் | னரோ யத்ர’ தேவயவோ மத’ன்தி |உருக்ரமஸ்ய ஸ ஹி பன்து’ரித்தா | விஷ்ணோ” பதே ப’ரமே மத்வ உத்ஸஃ’ |

    3

    யத்ர -எங்கு , எங்கெல்லாம்,

     

    தேவயவ -தேவர்கள் ,

     

    மதந்தி -மகிழ்கிறார்களோ ,

     

    நர :-மனிதர்கள் ,

     

    ப்ரியமிபிபாத -செல்ல விரும்புகிறார்களோ ,

     

    உருக்ரமஸ்ய -விஷ்ணுவின் ,

     

    ஸ ஹி பந்துரிஸ்தா -மனத்திற்கு உகந்த இடமோ ,(இருப்பிடமோ ),

     

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

     

    பரமே பதே -உயர்ந்த ,அனைத்திற்கும் மேலான திருவடியில் ,

     

    மத்வ : அமுதத் தேனூற்று பெருகுகிறதோ ,

     

    ததஸ்ய -அங்கே,

     

    அச்யாம் -அடைவேனாக .

     

    4.ப்ரதத்விஷ்ணு’ஸ்ஸ்தவதே வீர்யா’ய | ம்றுகோ ன பீமஃ கு’சரோ கி’ரிஷ்டாஃ |

     

    யஸ்யோருஷு’ த்ரிஷு விக்ரம’ணேஷு | அதி’க்ஷயன்தி புவ’னானி விஶ்வா” |பரோ மாத்ர’யா தனுவா’ வ்றுதான | ன தே’ மஹித்வமன்வ’ஶ்னுவன்தி |………………….4

    |

    எங்கு தேவர்கள் மகிழ்ந்து இருக்கிறார்களோ ,எங்கு மனிதர்கள் செல்ல விரும்புகிறார்களோ ,

     

    எது விஷ்ணுவாகிய உமக்கு உகந்த இருப்பிடமோ ,எங்கே அமுதத் தேனூற்று பெருகுகிறதோ ,

     

    அந்த விஷ்ணுவின் திருவடியை அடைவேனாக,

     

     

    கிரிஷ்டா -மலை மீது,

     

    குசர -திரிகின்ற ,

     

    பீமக : மிருக ;-பெரிய யானை ,

     

    யஸ்ய -யாருடைய ,

     

    உருஷு ,த்ரிஷு விக்ரமநேஷு -மூன்று பெரிய அடிகளுள் ,

     

    விஸ்வா -அனைத்து ,

     

    புவனானி -உலகங்களும் ,

     

    அதிஷியந்தி -அடங்குகின்றனவோ ,

     

    -விஷ்ணு – ப்ரதத் -அந்த விஷ்ணுவை ,

     

    வீர்யாய -சிறப்பிற்காக ,

     

    ஸ்தவதே -போற்றுவோம் .

     

    தனுவா -அத்திருமேனி ,

     

    மாத்ரயா பர ;வருதான ;- அளவில் அடங்காதது .

     

    தே -அதன் (உமது ),

     

    மஹித்வம் -சிறப்புகளை ,

     

    அனு அச்னுவந்தி -அறிய முடியாது .

     

    மலையில் உலவும் பெரிய யானை போல் சுதந்திரமானவரும்,கட்டுக்கு அடங்காதவரும் ,

     

    தனது மூன்று அடிகளுக்குள் அனைத்து உலகங்களையும் அடக்கிய்வருமான அந்த விஷ்ணுவை அவரது

     

    செயல் சிறத்திற்காக போற்றுவோம் .

     

    இறைவனே !

     

    உமது திருமேனி அளவிற்கு அடங்காதது .

     

    உமது சிறப்புக்கள் அறிய முடியாதவை .

     

    5.உபே தே’ வித்மா ரஜ’ஸீ ப்றுதிவ்யா விஷ்ணோ’ தேவத்வம் | பரமஸ்ய’ வித்ஸே | விச’க்ரமே ப்றுதிவீமேஷ ஏதாம் | க்ஷேத்ரா’ய விஷ்ணுர்மனு’ஷே தஶஸ்யன் .

    தே -உமது ,

    ப்ருதிவ்யா –நறுமணம் நிறைந்த பூமி ,

     

    உபே -இரண்டை ,

     

    வித்ம-அறிவோம் (நாங்கள் )

     

    விஷ்ணோ தேவ -ஒளி திகழ் திருமாலே !

     

    த்வம் -நீர் மட்டுமே ,

     

    பரமஸ்ய -உயர்ந்த , மேலான உலகை,

     

    வித்சே –அறிவீர்,

     

    ஏஷ -இந்த ,

     

    ப்ருத்வீம் -புவியில் ,

     

    விஷ்ணு -விஷ்ணு ,

     

    விசக்ரமே -நடந்து ,

     

    ஏதாம் -அதனை ,

     

    க்ஷேத்ராய -இருப்பிடமாகக் கொள்வதற்கு ,

     

    மனுஷே –மனிதர்களுக்கு,

     

    ததஸ்யன் -கொடுத்துள்ளார் .

     

    விஷ்ணுவே !

     

     

    நறுமணம் நிறைந்ததான பூமி மற்றும் விண்ணுலகம் இரண்டையும் நாங்கள் அறிவோம் .

     

    ஒளி மிக்க திருமாலே !

     

    நீர் மட்டுமே மேலான் உலகை அறிவீர் .

     

    நீர் நடந்த இந்த பூமியை மனிதர்களுக்கு இருப்பிடமாகக் கொடுத்துள்ளீர் .

    6.

    த்ருவாஸோ’ அஸ்ய கீரயோ ஜனா’ஸஃ | ஊருக்ஷிதிக்‍ம்ஸுஜனி’மாசகார | த்ரிர்தேவஃ ப்று’திவீமேஷ ஏதாம் | விச’க்ரமே ஶதர்ச’ஸம் மஹித்வா | ப்ரவிஷ்ணு’ரஸ்து தவஸஸ்தவீ’யான் | த்வேஷக்க் ஹ்ய’ஸ்யஸ்தவி’ரஸ்ய னாம’ ||……………………………………………………….6.

     

    கீரய ;ஜனாஸ -பணிவு மிக்க மக்கள் ,

     

    அஸ்ய -அவரில் ,

     

    த்ருவாஸ -பாதுகாப்பான உறைவிடைத்தை தேடுகிறார்கள் .

     

    ஏதாம் -இந்த ,

     

    ஊருஷிதம் -பூமியை ,

     

    சுஜனிமா -விரிந்து பரந்த வாழ்விடமாக ,

     

    சகார -செய்துள்ளார் .

     

    சதவர்ச்சசம் -அளவிலா எழில் பொருந்திய ,

     

    ஏஷு -இந்த ,

     

    ப்ருத்வீம் -பூமியை ,

     

    தேவ -தேவனான விஷ்ணு ,

     

    மகித்மா -தந்து பெருமையால் ,

     

    த்ரி -மும்முறை ,

     

    விசக்ரமே–அளந்துள்ளார் .

     

    தவ -உமது ,

     

    ஸ : ஸ்தவீயான் -சிறந்த ,மேலான பெருமை ,

     

    பிரவிஷ்ணு -விஷ்ணு ,

     

    அஸ்து -உள்ளது .

     

    து –மேலும்,

     

    ஏஷம் ஹி -இதுவே ,

     

    அஸ்ய ஸ்தவிரஸ்ய -இந்த மாபெரும் சிறப்பின் ,

     

    நாம -பெயர்.

     

    பணிவு மிகுந்த மக்கள் ,அவரில் பாதுகாப்பான உறைவிடத்தைத் தேடுகிறார்கள் .

     

    இப்பூமியை , அவர் , இந்த மக்களுக்காக விரிந்து பரந்ததாகச் செய்துள்ளார் .

     

    எழில் கொஞ்சும் இப்புவியை விஷ்ணு தனது கீர்த்தியினால் மும்முறை அளந்துள்ளார் .

     

    மஹா விஷ்ணுவே !

     

    உமது மேலான காக்கும் திறத்தால் நீர் விஷ்ணு எனப் பெயர் பெறுகிறீர் .

     

    இது உமது பெருமைக்குப் பொருத்தமாக உள்ளது .

     

    7.அதோ’ தேவா அ’வம்து னோ யதோ விஷ்ணு’ர்விசக்ரமே | ப்றுதிவ்யாஃஸப்ததாம’பிஃ |

    இதம் விஷ்ணுர்விச’க்ரமே த்ரேதா னித’தே பதம் | ஸமூ’டமஸ்ய பாக்‍ம் ஸுரே ||

     

    ய ;-எந்த ,

     

    ப்ருதிவ்யா -பூமியின் ,

     

    சப்ததாமஅபி -ஏழு பகுதிகளிலும் ,

     

    விசக்ரமே -நடந்தாரோ ,

     

    அத -அந்த பூமியின் ,

     

    தேவா -தேவர்கள் ,

     

    ந -நம்மை ,

     

    அவந்து -காக்கட்டும் .

     

    விஷ்ணு -விஷ்ணு ,

     

    இதம் விசக்ரமே -நடந்தபோது ,

     

    பதம்-தமது திருவடிகளை ,

     

    திரேதா -மும்முறை ,

     

    நிதேத -வைத்தார் .

    7

    அஸ்ய -அவரது ,

     

    பாம்சுரே -பாத தூசியால் ,

    ஸமூட -மூடப்பட்டது .

     

    8.த்ரீணி’ பதா விச’க்ரமே விஷ்ணு’ர்கோபா அதா”ப்யஃ | ததோ தர்மா’ணி தாரயன்’ |

     

    விஷ்ணோஃ கர்மா’ணி பஶ்யத யதோ”வ்ரதானி’ பஸ்ப்றுஶே | இன்த்ர’ஸ்ய யுஜ்யஃ ஸகா” ||

     

    விஷ்ணு -விஷ்ணு ,

     

    கோபா -அனைத்தையும் காப்பவரும் ,

     

    அதாப்ய -ஏமாற்றப்பட முடியாதவரும் ,

     

    த்ரீணி பதா -மூவடிகளால் ,

     

    விசக்ரமே -அளந்து ,

     

    அத -இங்கே ,

    தர்மாணி -தர்மங்களை ,

    தாரயன் -நிலை நிறுத்தினார் .

    இந்த்ரஸ்ய -இந்திரனனின் ,

    யுஜ்ய :சஹா -நெருங்கிய நண்பனான ,

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

    கர்மாணி -செயல்களை ,

    பச்யத -பாருங்கள்.

    யத : அவற்றின் மூலம் ,

    வ்ரதானி -வாழ்க்கை நெறிகளை ,

    பஸ்பசே -வெளிப்படுத்தினார் .

     

    விஷ்ணு அனைத்தையும் காப்பாற்றுவரும் ஒருவராலும் ஏமாற்றப்பட முடியாதவரும் ஆவார் .

    தனது மூன்று அடிகளால் இவுலகை அளந்து,,இங்கே தர்மத்தை நிலை நிறுத்தியுள்ளார் .

    இந்திரனின் நெருங்கிய நண்பனான விஷ்ணுவின் செயல்திறத்தைப் பாருங்கள் .

    அவற்றின் மூலம் வாழ்க்கை நியதிகளை வெளிப்படுத்தினார் .

     

    9.தத்விஷ்ணோ”ஃ பமம் தக்‍ம் ஸதா’ பஶ்யன்தி ஸூரயஃ’ | திவீக்ஷுராத’தம் | தத்விப்ரா’ஸோ வின்யவோ’ ஜாக்றுவாக்‍ம்ஸ்ஸமி’ன்ததே | விஷ்ணோர்யத்ப’மம் தம் 

     

    ஆததம் – பரந்து  விரிந்த ,

    திவி இவ -வானம் போல் ,

    சஷு -கண்களை உடையவர்கள் ,

    ஸூரய -ரிஷிகள் ,

    தத் விஷ்ணோ -அந்த விஷ்ணுவின் ,

    பரமம் பதம் -மேலான சிறந்த உறைவிடத்தை ,

    ஸதா -எப்பொழுதும் ,

    பஸ்யந்தி -காண்கிறார்கள் .

    விப்ராஸ் -கவிதையை விரும்புபவர்களும் ,

    விபன்யவ -முனிவர்களும் ,

     

    ஜாக்ர்வாம்ஸ -விழிப்புற்றவர்களுமான ,

    யத் -இவர்களே ,

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

    யத் பரமம் பதம் -மேலான சிறந்த உறைவிடத்தை ,

    ஸமிந்ததே -ஒளிரச் செய்கிறார்கள் .

     

    விரிந்து பரந்த வானம் போல் கண்களை உடையவர்களான ரிஷிகள் ,விஷ்ணுவின் மேலான உறைவிடத்தை

    ,எப்போதும் காண்கிறார்கள் .கவிதையை விரும்புபவர்களும் ,முனிவர்களும்,விழிப்புற்றவர்களுமான

    இவர்களே விஷ்ணுவின் மேலான அந்த உறைவிடத்தை ஒளிரச் செய்கிறார்கள் .

     

    பர்யா”ப்த்யாஅன’ன்தராயா ஸர்வ’ஸ்தோமோ‌உதி ராத்ர உ’த்தம மஹ’ர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வ’ஸ்ய ஜித்த்யை ஸர்வ’மேவ தேனா”ப்னோதிஸர்வம்’ ஜயதி ||

     

    பர்யாப்த்யா -அளவற்ற ,

    அனந்த ஆயாத -எல்லையில்லா செல்வம் பெறுவதற்கும் ,

    ஸர்வத்தோம -மங்காப் புகழ் அடைவதற்கும் ,

    அதிராத்ரம் – அதிராத்ரம்,

    உத்தம -சிறந்த ,

    மஹ -உயர்ந்த யாகம் ,

    பவதி- ஆகிறது .

    தென் -அந்த யாகத்தால் ,

    ஸர்வஸ்ய ஆப்த்யை- அனைத்தும் கிடைக்கிறது .

    ஸர்வஸ்ய ஜித்யை -அனைத்து வெற்றிகளும் கிட்டுகின்றன .

    சர்வம் ஏவ -அனைத்தும் ,

    ஆப்னோதி -அடையப்பெருகின்றன .

    ஸர்வம் -அனைத்தும் வளம் பெறுகின்றன .

     

    எல்லையில்லா வற்றாத செல்வம் பெறுவதற்கும் ,மங்காப் புகழ் பெறுவதற்கும் ,அதிராத்ரம் என்னும் யாகமே

    மேலான யாஹம் ஆகும் .

    அந்த யாகத்தால் அனைத்தும் கிடைக்கின்றன .

    அனைத்து வெற்றிகளும் கிட்டுகின்றன .

    அனைத்தும் அடையப் படுகிறது .

    அனைத்தும் வளம் பெறுகின்றன .

    விஷ்ணு ஸூக்தம் நிறைவுற்றது.

    ஓம் தத் ஸத்

     

    ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் யஃ பார்தி’வானி விமே ராஜாக்ம்’ஸி யோ அஸ்க’பாதுத்த’ரக்‍ம் தஸ்தம்’ விசக்ரமாஸ்த்ரேதோரு’காயோ விஷ்ணோ’ராட’மஸி விஷ்ணோ”ஃப்றுஷ்டம’ஸி விஷ்ணோஃ ஶ்னப்த்ரே”ஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூர’ஸிவிஷ்ணோ”ர்த்ருவம’ஸி வைஷ்ணவம’ஸி விஷ்ண’வே த்வா ||

    தத’ஸ்ய ப்ரிபிபாதோ’ அஶ்யாம் | னரோ யத்ர’ தேவோ மத’ன்தி |ருக்ரஸ்ய ஸ ஹி பன்து’ரித்தா | விஷ்ணோ” தே ப’மே மத்வ உத்ஸஃ’ | ப்ரதத்விஷ்ணு’ஸ்ஸ்தவதே வீர்யா’ய | ம்றுகோ ன பீமஃ கு’ரோ கி’ரிஷ்டாஃ | யஸ்யோருஷு’ த்ரிஷு விக்ரம’ணேஷு | அதி’க்ஷன்தி புவ’னானி விஶ்வா” |ரோ மாத்ர’யா னுவா’ வ்றுதான | ன தே’ மஹித்வமன்வ’ஶ்னுவன்தி ||

    பே தே’ வித்மா ரஜ’ஸீ ப்றுதிவ்யா விஷ்ணோ’ தேத்வம் | மஸ்ய’ வித்ஸே | விச’க்ரமே ப்றுதிவீமேஷ தாம் | க்ஷேத்ரா’ விஷ்ணுர்மனு’ஷே தஸ்யன் | த்ருவாஸோ’ அஸ்ய கீயோ ஜனா’ஸஃ | ருக்ஷிதிக்‍ம்ஸுஜனி’மாசகார | த்ரிர்தேவஃ ப்று’திவீமேஷ தாம் | விச’க்ரமே தர்ச’ஸம் மஹித்வா | ப்ரவிஷ்ணு’ரஸ்து ஸ்தவீ’யான் | த்வேஷக்க் ஹ்ய’ஸ்யஸ்தவி’ரஸ்ய னாம’ ||

    அதோ’ தேவா அ’வம்து னோ யதோ விஷ்ணு’ர்விசக்ரமே | ப்றுதிவ்யாஃப்ததாம’பிஃ | தம் விஷ்ணுர்விச’க்ரமே த்ரேதா னித’தே தம் | ஸமூ’டமஸ்ய பாக்‍ம் ஸுரே || த்ரீணி’ தா விச’க்ரமே விஷ்ணு’ர்கோபா அதா”ப்யஃ | ததோ தர்மா’ணி தாரயன்’ | விஷ்ணோஃ கர்மா’ணி பஶ்ய யதோ”வ்ரதானி’ பஸ்ப்றுஶே | இன்த்ர’ஸ்ய யுஜ்யஃ ஸகா” ||

    தத்விஷ்ணோ”ஃ பமம் தக்‍ம் ஸதா’ பஶ்யன்தி ஸூரயஃ’ | திவீக்ஷுராத’தம் | தத்விப்ரா’ஸோ வின்யவோ’ ஜாக்றுவாக்‍ம்ஸ்ஸமி’ன்ததே | விஷ்ணோர்யத்ப’மம் தம் | பர்யா”ப்த்யாஅன’ன்தராயா ஸர்வ’ஸ்தோமோ‌உதி ராத்ர உ’த்தம மஹ’ர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வ’ஸ்ய ஜித்த்யை ஸர்வ’மேவ தேனா”ப்னோதிஸர்வம்’ ஜயதி ||

    ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

     

     

  • நாராயண ஸூக்தம் பொருளுரை பொழிப்புரை

     

    நாராயண ஸூக்தம் தைத்ரீய ஆரண்யகம் ,4.10.13.

     

    ஓம் || ஸஹஸ்ரஶீர்’ஷம் தேவம் விஶ்வாக்ஷம்’ விஶ்வஶம்’புவம் |

    விஶ்வம்’னாராய’ணம் தேவமக்ஷரம்’ பரமம் பதம் |

    சகஸ்ர சீர்ஷம் -ஆயிரக்கணக்கான (எண்ணற்ற )தலைகளை உடையவரும் ,

    தேவம் –ஒளிமிகுந்த தலைவனும் ,

    விச்வாக்ஷம் -அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும் ,

    விஸ்வ சம்புவம் -அனைத்துலகும் ஏற்படக் காரணமானவரும்,,மன்கலலத்தைச் செய்பவரும் ,

    விஸ்வம்-உலகனைத்தும் இருந்து, விரிந்து பரந்தவரும் ,

    அக்ஷரம் -அழிவற்றவரும் ,

    பரமம் பதம் -அனைத்திற்கும் மேற்பட்டு மேலான நிலையில் உள்ளவரும் ,

    நாராயணம் தேவம் -நாராயணன் என்னும் தெய்வத்தை.

     

    ,எண்ணற்ற தலைகளை உடையவரும் ,ஒழி மிக்கவரும் ,அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும் ,

    உலகைத்தை விளைவித்து ,மங்கலத்தைச் செய்பவரும் ,அணைத்து உலகிலும் நிறைந்து , விரிந்து பரந்தவரும் ,

    அழிவற்றவரும் ,மேலானவருமான நாராயணன் என்னும் தேவனை த்யானிக்கிறேன் .’                                                                     1

     

    2.

    விஶ்வதஃ பர’மான்னித்யம்விஶ்வம் னா’ராயணக்‍ம் ஹ’ரிம் | விஶ்வ’மேவேதம் புரு’ஷ-ஸ்தத்விஶ்வ-முப’ஜீவதி |

    பதிம் விஶ்வ’ஸ்யாத்மேஶ்வ’ரக்ம் ஶாஶ்வ’தக்‍ம் ஶிவ-மச்யுதம் |

    விஸ்வத-இந்த உலகத்தைவிட ,

    பரமான் -இதற்கு அப்பாற்பட்டு ,மேலானவரும் ,

    நித்யம் -என்றும் உள்ளவரும் ,

    விஸ்வம் -உலகமாய் விளங்குபவரும் ,

    ஹரிம் -அவரது பெயரை உச்சரித்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பங்களைப் போக்குபவரும் ,

    நாராயணம் -நாராயணனை

     

    இந்த உலகிற்கு அப்பாற்பட்டு ,இதனை விட மேலானவரும் ,என்றும் உள்ளவரும் ,பெயரை உச்சரித்த

    மாத்திரத்தில் துன்பங்களைக் களைபவரும் ,ஆகிய நாராயணனை த்யானம் செய்கிறேன் .

     

    3.பதிம் விஶ்வ’ஸ்யாத்மேஶ்வ’ரக்ம் ஶாஶ்வ’தக்‍ம் ஶிவ-மச்யுதம்

    னாராயணம் ம’ஹாஜ்ஞேயம் விஶ்வாத்மா’னம் பராய’ணம் |

     

    விஶ்வ’ஸ்ய-இவ்வுலகிற்கு ,

    பதிம் -தலைவரும் ,

    ஆத்ம ஈஸ்வரம் -அனைத்து உயிர்களின் தலைவரும் ,

    சாஸ்வதம் -என்றும் உள்ளவரும்,நிலை பெற்றவரும் ,

    சிவம் -மங்கள வடிவானவரும் ,

    அச்யுதம் -அழிவற்றவரும் ,

    மகாக்யேயம் -சிறந்த அறிவினால் அறியத்தக்கவரும் ,

    விஸ்வ ஆத்மானம் -அனைத்திற்கும் ஆத்மாவாக இருப்பவரும் ,

    பராயணம் -சிறந்த புகலிடமாக இருப்பவருமான ,

    நாராயணனை.

     

    அனைத்து உலகிற்கும் தலைவனை ,என்றும் நிலையாய் இருப்பவரும் ,மங்கள வடிவினரும் சிறந்த அறிவால்

    அறியத்தக்கவரும் ,எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருப்பவரும் ,சிறந்த புகலிடமாக இருப்பவருமான

    நாராயணனை ,த்யானிக்கிறேன் .

     

    4.னாராயணப’ரோஜ்யோதிராத்மா னா’ராயணஃ ப’ரஃ |

    னாராயணபரம்’ ப்ரஹ்ம தத்த்வம் னா’ராயணஃ ப’ரஃ |

     

    “நாராயண பர ஜ்யோதி -நாராயணனே சிறந்த ஒளி ,

    நாராயண : பர : ஆத்மா -நாராயணனே அனைத்தையும் கடந்த பரமாத்மா ,

    நாராயண : பர ப்ரஹ்ம-நாராயணனே பர ப்ரஹ்மம்.

    நாராயண :பர தத்வம் -நாராயணனே மேலான உயர்ந்த உண்மை .

    நாராயண : பர த்யாதா -நாராயணனே த்யானம் செய்பவர்களுள்,த்யானம் செய்யப் படுபவர்களில் சிறந்தவர் .

    நாராயண ; பர த்யானம் -நாராயணனே சிறந்த த்யானம் .
    5.யச்ச’கிம்சிஜ்ஜகத்ஸர்வம் த்றுஶ்யதே” ஶ்ரூயதே‌உபி’ வா ||

    அம்த’ர்பஹிஶ்ச’ தத்ஸர்வம் வ்யாப்ய னா’ராயணஃ ஸ்தி’தஃ |

    ஜகத் சர்வம் -உலகனைத்திலும் ,

    யத்ய கிஞ்சித் த்ருச்யதே -காணப்படுவது எதுவாயினும், மிகுந்து காணப் படுவத்ஹயினும் ,

    அபிவா -அல்லது ,

    ஸ்ரூயதே -கேட்கப் படுவது எதுவாயினும் ,

    தத் சர்வம் -அவை அனைத்தையும் ,

    அந்த -உள்ளும் ,

    பஹி : ச -புறமும் ,

    வ்யாப்ய -வியாபித்தபடி, நிறைந்தபடி ,ஊடுறிவியபடி ,

    நாராயண : ஸ்தித : இருக்கிறார் .

     

    உலகனைத்தும் காணப்படுவது , கேட்கப்படுவது எதுவாயினும் ,அவை அனைத்தையும் உள்ளும் புறமும்

    வியாபித்தபடி நாராயணன் இருக்கிறார்

     

     

    6.அனம்மவ்யயம்’ விக்‍ம் ஸ’முத்ரே‌உம்தம்’ விஶ்வஶம்’புவம் |

     பத்மகோஶ-ப்ர’தீகாஶக்ம் ஹ்றுதயம்’ சாப்யதோமு’கம் |

    .அனந்தம் -எல்லையற்றவரும், முடிவற்றவரும் ,

    அவ்யயம் -விளக்க முடியாதவரும் ,விளக்கித்திற்கு அப்பாற்பட்டவரும் ,

    கவிம் -அனைத்தும் அறிந்தவரும் ,

    சமுத்ரே -சம்சாரப் பெருங்கடலின் ,

    அந்தம் -முடிவில் ,இருப்பவரும் ,

    விஸ்வ சம்புவம் -உலகம் விளையக் காரணமானவரும் ,மங்கலம் செய்பவரும் ,

    ஹ்ருதயம் ச அபி – இதயம் ,

    அதோ முகம் -கீழ் நோக்கிய ,

    பத்ம கோச ப்ரதீகாசம் -தாமரை மொட்டு போல் ,

     

    முடிவற்றவரும் ,அனைத்தும் உணர்ந்தவரும் ,அறிந்தவரும் ,சம்சாரப் பெருங்கடலின் இறுதியில் இருப்பவரும் ,

    உலகிற்கு நன்மை செய்பவரும் ,ஆகிய நாராயணனை ,கீழ் நோக்கிய தாமரை மொட்டு போல் அமைந்துள்ள

    இதயத்தில் த்யானிக்கின்றேன் .

     

    7.

    அதோ’ னிஷ்ட்யா வி’தஸ்யாம்தேனாப்யாமு’பரி திஷ்ட’தி |

    ஜ்வாலமாலாகு’லம் பாதீ விஶ்வஸ்யாய’தனம் ம’ஹத் |

     

    நிஷ்ட்ட்யா -குரல் வளைக்கு ,

    அத :- கீழே ,

    நாப்யாம் -தொப்புளுக்கு ,

    உபரி -மேலே ,

    விதஸ்யா : அந்தே -ஒரு சாண் தூரத்தில் ,

    திஷ்டதி – இருக்கிறது .

    விச்வச்ய -அனைத்து உலகிற்கும்,

    மகத் -உயர்ந்த , சிறந்த ,

    ஆயதனம் -உறைவிடம்.

    ஜ்வாலமால குலம் -சுடர் வரிசையால் சூழப்ப்பட்டார்ப்போல் ,

    பாதி -ப்ராகசிக்கிறது .

     

    குரல் வளைக்குக் கீழே ,தொப்புளுக்கு மேலே , ஒரு சாண் தூரத்தில் இதயம் இருக்கிறது .

    உலகிற்கெல்லாம் சிறந்த அந்த உறைவிடம் ,சுடர் வரிசையால் சூழப்பட்டற்போல் பிரகாசிக்கிறது .

     

    8.

    ஸன்தத’க்‍ம் ஶிலாபி’ஸ்து லம்பத்யாகோஶஸன்னி’பம் |

    தஸ்யாம்தே’ ஸுஷிரக்‍ம் ஸூக்ஷ்மம் தஸ்மின்” ஸர்வம் ப்ரதி’ஷ்டிதம் |

     

     

    ஆகோச சந்நிபம் -தாமரை மொட்டு போன்ற இதயம் ,

    சந்ததம் -நான்கு புறங்களிலும் ,

    சிலாபி -நாடிகளால் ,

    லம்பதி -தொங்குகிறது ,

    தஸ்ய -அதன் ,

    அந்தே -உள்ளே ,

    சூக்ஷ்மம் -நுண்ணிய ,

    சூக்ஷிரம் -ஆகாசம் ,

    சர்வம் -அனைத்தும் ,

    தஸ்மின் -அதில் ,

    ப்ரதிஷ்டிதம் -நிலை பெற்றுள்ளன .

     

    தாமரை மொட்டு போன்ற இதயம் நாற்புறங்களிலும் நாடிகளால் சூழப்பட்டு தொங்குகிறது .

    அதன் உள்ளே ஆகாசம் உள்ளது .அனைத்தும் அதில் நிலை பெற்றுள்ளன .

     

    9. தஸ்ய மத்யே’ ஹான’க்னிர்-விஶ்வார்சி’ர்-விஶ்வதோ’முகஃ |

    ஸோ‌உக்ர’புக்விப’ஜம்திஷ்ட-ன்னாஹா’ரமஜரஃ கவிஃ |

    தஸ்ய -அதன் ,

    மத்யே -நடுவில் ,

    விச்வார்ச்சி -எங்கும் ஒழி வீசுபதாகவும் ,

    விச்வதோ முக :-எல்லாத் திக்கிலும் செல்வதாகவும் ,

    மகான் -சிறந்த ,

    அக்னி -அக்னி ,

    அக்ரபுக்- முதலில் உண்பதாக ,

    ஆகாரம் -உணவை ,

    விபஜஸ் -பிரித்துக் கொடுப்பதாக ,

    திஷ்ட்டன் – நிலைத்து நிற்பதாக .

    அஜர :- பழுது படாதததாக .

    கவி -அனைத்தையும் காண்பதாக .

     

     

    எங்கும் ஒளி வீசுபதாகவும் ,எல்லாத் திசைகளிலும் செல்வதாகவும் உள்ள சிறந்த அக்னி ,அந்த ஆகாசத்தின்

    நடுவில் உள்ளது .

    பிராணனாகிய அந்த அக்னி ,முதலில் உண்பதாகவும் , உணவைப் பிரித்துக் கொடுப்பதாகவும் ,நிலைத்து

    நிற்பதாகவும் ,தான் பழுது படததாதாகவும் ,அனைத்தையும் காண்பதாகவும் உள்ளது.

     

    10.

    திர்யகூர்த்வம’தஶ்ஶாயீ ரஶ்மய’ஸ்தஸ்ய ஸம்த’தா |

    ஸம்தாபய’தி ஸ்வம்தேஹமாபா’ததலமஸ்த’கஃ |

    தஸ்யமத்யே வஹ்னி’ஶிகா அணீயோ”ர்த்வாவ்யவஸ்தி’தஃ

    .தஸ்ய -அந்த பிராணனின் ,

    ரச்மைய -கிரணங்கள் ,

    த்ரியக் -குறுக்கிலும் ,

    ஊர்த்வம் -மேலும் ,

    அத :- பரவி ,

    சந்ததா -எப்போதும் வியாபித்திருக்கின்றன .

    ஆபாத தல மஸ்தக :-உள்ளங்கால் முதல் உச்சந்த்தலை வரை ,

    ஸ்வம் தேகம் -தனக்குரிய உடலை ,

    சந்தாபயதி -உஷ்ணமுள்ளதாகச் செய்கிறது .

    தஸ்ய -அதன் ,

    மத்யே -மத்தியில் ,

    அணீய -மெலிதான ,

    வஹ்நிசிகா -நெருப்புச்சுடர்,

    ஊர்த்வா -மேல் நோக்கி அமைந்துள்ளது .

     

     

    அப்பிராணனின் கிரணங்கள் ,குறுக்கிலும் ,நெடுக்கிலும் ,மேலும் கீழும் பரவி ,உடல் எங்கும் நிறைந்துள்ளன .

    உச்சி முதல் பாதம் வரை தனது உடலை சூடுள்ளதாகச் செய்கிறது .

    இதன் நடுவில் மெலிதான அக்கினிச் சுடர் மேல் நோக்கி அமைந்துள்ளது .

     

    11.

     னீலதோ’-யத’மத்யஸ்தாத்-வித்யுல்லே’கேவ பாஸ்வ’ரா |

    னீவாரஶூக’வத்தன்வீ பீதா பா”ஸ்வத்யணூப’மா |

    நீலதோயாத மத்யஸ்தாத் ‘கருத்த மேகங்களின் மத்தியில் இருந்து ,

    பாஸ்வரா -ஒளி வீசுகின்ற ,

    வித்யுத் லேகா இவ -மின்னர்க் கொடி போல் ,

    நீவார சூகவத் -நெல் மணியின் சிறு முளை போல் ,

    தன்வீ -மெல்லியதாக ,

    பீதா -பொன்னிறமாக ,

    அணு உபமா -நுண்ணியதான அணுவைப் போல் ,

    பாஸ்வதி -ஒளிர் விட்டுக் கொண்டு இருக்கின்றது .

     

    12.

    தஸ்யா”ஃ ஶிகாயா ம’த்யேபரமா”த்மா வ்யவஸ்தி’தஃ

    | ஸ ப்ரஹ்ம ஸ ஶிவஃ ஸ ஹரிஃ ஸேம்த்ரஃஸோ‌உக்ஷ’ரஃ பரமஃ ஸ்வராட் ||

     

    தஸ்யா -அந்த ,

    சிகாயா -சுடரின்

    மத்யே -மத்தியில் ,

    பரமாத்மா -அனைத்தையும் கடந்த இறைவன் வீற்றிக்கிறார் .

    ஸ : அவரே ,

    பிரம்மா -பிரம்மா,

    ஸ -அவரே ,

    ஹரி -விஷ்ணு ,

    ஸ -அவரே ,

    சிவ -சிவன் ,

    ஸ -அவரே ,

    இந்த்ர -இந்திரன் ,

    ஸ -அவரே ,

    அக்ஷரே -கட்டுக்குள் அடங்காதவர்,அழிவற்றவர் ,

    ஸ்வராட் -தனது ஒளியுடன் பிரகாசிப்பவர் .

    பர : அவருக்கு மேல் எவரும் இல்லாதவர் .

     

    அச் சுடரின் நடுவில் இறைவன் வீற்றிக்கிறார் .அவரே பிரம்மா ,அவரே சிவன் ,அவரே ஹரியாகிய விஷ்ணு ,

    ,அவரே இந்திரன் ,அவர் அழிவற்றவர் .தன சுய ஒளியுடன் பிரகாசிப்பவர் .அவருக்கு மேல் எவரும் இல்லாதவர்.

     

    13.

    றுதக்‍ம் த்யம் ப’ரம் ப்ரஹ்ம புருஷம்’ க்றுஷ்ணபிம்க’லம் |

    ர்த்வரே’தம் வி’ரூபா’க்ஷம் விஶ்வரூ’பா வை னமோ னமஃ’ ||

    ரிதகும் -காணும் பொருள்களின் அழகாகவும் சீராகவும் ,

    சத்யம் -காண் பொருட்களுக்கு ஆதாரமாகவும் உள்ள ,

    பரம் ப்ரஹ்ம -பரம் பொருளை ,

    புருஷம் -உடலனைத்தும்,உடல் தோறும் உறைபவனை ,

    கிருஷ்ண பிங்கலம் -கரு மேனித் திருமாலும் ,செம்மேனிச் சிவனும் ,

    இணைந்த வடிவை ,

    ஊர்த்வரேதம் -சக்தி கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும் இறைவனை ,

    விருபாக்ஷனை -முக்கண் உடயோனை ,

    விச்வரூபாய வை -அனைத்தையும் தன வடிவாய்க் கொண்டவனை ,

    நமோ நம -பன் முறை வணங்குகிறேன் .

     

    காணும் பொருள்களின் ஆதாரமாகவும் அவற்றின் எழிலாகவும் உள்ள பரம் பொருளை ,உடல்கள்

    அனைத்திலும் ,உறைபவனை ,கருமேணித் திருமாலும் செம்மேனிச் சிவனும் ஒருங்கிணைந்த வடிவை

    ,தூயவனை,முக்கண்ணனை அனைத்தையும் தன வடிவைக் கொண்டவனை பன் முறை வணங்குகிறேன்

    ஓம் னாராணாய’ வித்மஹே’ வாஸுதேவாய’ தீமஹி | தன்னோ’ விஷ்ணுஃ ப்ரசோதயா”த் ||

    ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

    நாராயணாய -நாராயணனை ,

    வித்மஹே -அறிந்து கொள்வோம் .

    வாசுதேவாய -வாசு தேவரின் புதல்வனாகிய வாசுதேவனை ,

    தீமஹி -த்யானிப்போம் .

    தத் விஷ்ணு -அந்த விஷ்ணு ,

    ந ;நம்மை ,

    ப்ரசோதயாத் -தூண்டட்டும் .

    நாரணனை அறிந்து கொள்வோம் .

    அந்த வாசுதேவனைத் த்யாநிப்போம் .

    அந்த விஷ்ணு அவரைத் த்யானிக்க நம்மைத் தூண்டட்டும் .

    ஓம் || ஸ்ரஶீர்’ஷம் தேவம் விஶ்வாக்ஷம்’ விஶ்வஶம்’புவம் |

    விஶ்வம்’னாராய’ணம் தேக்ஷரம்’ பமம் பதம் |

    விஶ்வதஃ பர’மான்னித்யம்விஶ்வம் னா’ராணக்‍ம் ஹ’ரிம் |

    விஶ்வ’மேவேதம் புரு’-ஸ்தத்விஶ்வ-முப’ஜீவதி |

    திம் விஶ்வ’ஸ்யாத்மேஶ்வ’க்ம் ஶாஶ்வ’தக்‍ம் ஶிவ-மச்யுதம்

    னாராணம் ம’ஹாஜ்ஞேயம் விஶ்வாத்மா’னம் ராய’ணம் |

     னாராணப’ரோஜ்யோதிராத்மா னா’ராணஃ ப’ரஃ |

     னாராணபரம்’ ப்ரஹ்ம தத்த்வம் னா’ராணஃ ப’ரஃ |

    னாராணப’ரோ த்யாதா த்யானம் னா’ராணஃ ப’ரஃ |

    யச்ச’கிம்சிஜ்ஜகத்ஸர்வம் த்றுஶ்யதே” ஶ்ரூதே‌உபி’ வா ||

    அம்த’ர்பஹிஶ்ச’ தத்ஸர்வம் வ்யாப்ய னா’ராணஃ ஸ்தி’தஃ |

    அனம்மவ்யயம்’ விக்‍ம் ஸ’முத்ரே‌உம்தம்’ விஶ்வஶம்’புவம் |

     த்மகோஶ-ப்ர’தீகாக்ம் ஹ்றுதயம்’ சாப்யதோமு’கம் |

    அதோ’ னிஷ்ட்யா வி’தஸ்யாம்தேனாப்யாமு’பரி திஷ்ட’தி |

    ஜ்வாமாலாகு’லம் பாதீ விஶ்வஸ்யாய’னம் ம’ஹத் |

    ஸன்தத’க்‍ம் ஶிலாபி’ஸ்து லம்த்யாகோஸன்னி’பம் |

    தஸ்யாம்தே’ ஸுஷிரக்‍ம் ஸூக்ஷ்மம் தஸ்மின்” ர்வம் ப்ரதி’ஷ்டிதம் |

    ஸ்ய மத்யே’ ஹான’க்னிர்-விஶ்வார்சி’ர்-விஶ்வதோ’முகஃ |

    ஸோ‌உக்ர’புக்விப’ஜம்திஷ்ட-ன்னாஹா’ரமரஃ விஃ |

    திர்யகூர்த்வம’தஶ்ஶாயீ ஶ்மய’ஸ்தஸ்ய ஸம்த’தா |

    ம்தாபய’தி ஸ்வம்தேஹமாபா’ததமஸ்த’கஃ |

    ஸ்யத்யே வஹ்னி’ஶிகா ணீயோ”ர்த்வாவ்யவஸ்தி’தஃ

    னீலதோ’-யத’மத்யஸ்தாத்-வித்யுல்லே’கே பாஸ்வ’ரா |

    னீவாஶூக’வத்தன்வீ பீதா பா”ஸ்வத்யணூப’மா |

    தஸ்யா”ஃ ஶிகாயா ம’த்யேரமா”த்மா வ்யவஸ்தி’தஃ

    | ஸ ப்ரஹ்ம ஸ ஶிவஃ ஸ ஹரிஃ ஸேம்த்ரஃஸோ‌உக்ஷ’ரஃ பமஃ ஸ்வராட் ||

    றுதக்‍ம் த்யம் ப’ரம் ப்ரஹ்ம புருஷம்’ க்றுஷ்ணபிம்க’லம் |

    ர்த்வரே’தம் வி’ரூபா’க்ஷம் விஶ்வரூ’பா வை னமோ னமஃ’ ||

    ஓம் னாராணாய’ வித்மஹே’ வாஸுதேவாய’ தீமஹி | தன்னோ’ விஷ்ணுஃ ப்ரசோதயா”த் ||

    ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

     

    Enhanced by Zemanta
  • ஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்

    ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
    தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |

    ஜாத வேத -எல்லாவற்றையும் அறியும் அக்னி தேவனே ,

    ஹிரண்யவர்ணாம் -பொன் நிறத்தவளும்.

    ஹரிணீம் -பாவங்களைப் போக்குபவளும் ,

    ஸ்வர்ண ரதஸ்ரஜாம்-தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் ,

    சந்த்ராம்- நிலவு போன்றவளும் ,

    ஹிரண்மயீம் -பொன்னே உருவானவளும்,

    லக்ஷ்மீம் -லக்ஷ்மி என்று அழைக்கப்படும் திரு மகளை ,

    மே -என்னிடம் ,

    ஆவஹ -எழுந்தருளச் செய்வாய் —————1

    Laksmi Painting by Ravi Varma
    Maha Laksmi Ravi Varma’s painting Image credit, http://www.cyberkerala.com/rajaravivarma/ravivarma-painting-58.htm

    பொன் நிறத்தவளும் ,பாவங்களைப் போக்குபவளும் தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் நிலவு போன்றவளும் ,

    பொன்மயமானளும் ஆன மகாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்.

    தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |
    யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||2

    ஜாதவேத -அக்னியே ,

    அஹம் -நான் ,

    ஹிரண்யம் -பொன்னையும் ,

    காம் -பசுக்களையும் ,

    அஸ்வ -குதிரைகளையும் ,

    புருஷான் -உறவினரையும் ,

    விந்தேயம் -பெறுவேனோ ,

    தாம் -அந்த ,

    லக்ஷ்மீம் -அந்த மகாலக்ஷ்மியயை,

    யஸ்யாம் அனபகாமிநீம் -என்னிடமிருந்து விலகாதிருப்பவளை ,

    மே -என்னிடம் ,

    ஆவஹ -எழுந்தருளச் செய்வாய்………………………………..2

    அக்னி தேவனே,,

    யாருடைய அருளால் ,நான் பொன்னையும் பசுக்களையும் ,குதிரைகளையும் மற்றும் உறவினரையும் பெறுவேனோ ,

    அந்த மஹாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்.

    அவளை என்னிடமிருந்து விலகாதிருக்கச் செய்வாயாக.

    அஸ்வ பூர்வாம் -முன்னால் குதிரைகளும் ,

    ரத மத்யாம் -நடுவில் ரதங்களும் ,

    ஹச்திநாத ப்ரபோதிநீம் -களிறுகளின் பிளிறல்களை தனது அறிகுறியாகக் கொண்டவளுமான ,

    ஸ்ரியம் தேவீம் -மனதிற்கு உகந்தவளுமான ஸ்ரீ தேவியை ,

    உபஹ்வையே -அழைக்கிறேன் .

    ஸ்ரீ தேவி -செல்வத்தின் உறைவிடமான திருமகளே ,

    மா ஜுஷதாம் -என்னிடம் இன்புற்று உறைவாய் .

    முன்னால் குதிரைகள் ,நடுவில் தேர்கள் புடைசூழ வருபவளும் ,யானைகளின் பிளிறலை தன வரவின் முன்னோடியாகக் கொண்டவளும்மான ,மனதிற்கு உகந்த செல்வத்தின் தலைவியாகிய திருமகளை அழைக்கின்றேன் .

    திருமகளே !

    நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாயாக .

    காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |
    பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||…………………….4

    ஸ்மிதாம் -புன்முறுவல் தவழ்பவளும் ,

    ஹிரண்யப் ப்ராகாராம் -பொன் மயமான கோட்டையில் உறைபவளும் ,

    ஆர்த்ராம் -கருணை நிறைந்தவளும் ,

    ஜ்வலந்தீம் -ஒழி வீசுபவளும் ,

    த்ருப்தாம் -மன நிறைவுடயளும் ,

    தர்பப்பயந்தீம் -தன்னைத் துதிப்போர்க்கு மகிழ்ச்சியை அருளுபவளும்,

    பத்மே -தாமரையில் ,

    ஸ்திதாம் -நிலை பெற்றவளும் ,

    பத்ம வர்ணாம் -தாமரை நிறத்தவளும்,

    காம் -யாரோ ,

    தாம் ஸ்ரியம் -அந்த மனத்திருக்கு உகந்த லக்ஷ்மியை ,திருமகளை ,

    இஹ -இங்கே,

    உபஹ்வையே–வேண்டுகின்றேன்.

    குறுநகை தவழ்பவளும் ,பொன் மயமான கோட்டையில் உறைபவளும் ,கருணை நிறைந்து ததும்புவளும்,ஒளி நிறைந்தவளும் ,

    மகிழ்ச்சி நிறைந்தவளும் ,மகிழ்ச்சியைத் தருபவளும் ,தாமரையில் வீற்றிருப்பவளும் தாமரை நிறத்தவளுமான அந்தத் திருமகளை இங்கே எழுந்தருளுமாறு இறைஞ்சுகின்றேன் .

    சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |
    தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||

    லோகே -உலக வாழ் உயிர்களுக்கு ,

    சந்த்ராம் -குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் ,

    பிரபாஸாம் -சிதறும் ஒளி மிக்கவளும் ,

    யசஸா -தன மகிமையால்,

    ஜ்வலந்தீம் -சுடர் விட்டு ஒளிர்பவளும் ,

    தேவ ஜுஷ்டாம் -தேவர்காளால் வழிபடப்படுபவளும்,

    உதாராம் -கழிவிரக்கம் நிறைந்தவளும் ,

    பத்மிநீம் -தாமரையைத் தாங்கியவளும்,

    ஈம் -ஈம் என்னும் பீஜ மந்திரத்தின் பொருளாகத் திகழ்பவளும்,

    ஆன,

    தாம் ஸ்ரியம் -அந்த மனதிற்குகந்த மகலக்ஷ்மியை ,

    அஹம் -நான் ,

    சரணம் ப்ரபத்யே -அடைக்கலம் புகுகிறேன் .

    த்வாம் -உன்னை ,

    வ்ருணே -வேண்டுகிறேன்.

    மே -என்னிடமிருந்து ,

    அலக்ஷ்மி -வறுமை,

    நச்யதாம் – அழியட்டும் .

    நிலவைப் போன்றவளும் ,ஒளிநிரைந்தவளும் , சுடர்விட்டு ஒளிர்பவளும் ,தேவர்களால் வழிபடப்படுபவளும் கருணை

    மிக்கவளும் ,தாமரையைத் தாங்கியவளும் ,ஈம் என்னும் பீஜ மந்திரந்தின் பொருளாக உள்ளவளும் ஆகிய அந்த மகாலக்ஷிமயை

    நான் சரணடைகிறேன்.

    தேவியே!

    என் வறுமை விலகி அழிய அருள்வாய் .

    ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |
    தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ

    ஆதித்யவ’ர்ணே – சூரியனின் நிறத்தவளே ,

    தவ-உனது ,

    தபசக -தவத்தால் ,

    வனஸ்பதி ‘கானகங்களுக்குத் தலைவனாகிய ,

    பில்வக வ்ருக்ஷ -வில்வ மரம் ,

    அதிஜாதக -உண்டாயிற்று .

    அத -அதே போல் ,

    தபஸா -தவத்தால் ,

    தஸ்ய -அதன் ,

    பலானி -பலத்தால்,விளைவாக ,பழங்கள் ,

    மாயா -அறியாமை ஆகிய ,

    அந்தராயாக -எனது உள்ளத்தில் உள்ள அகத்தடயையும் ,

    அ’லக்ஷ்மீஃ -அமங்கலமாகிய .

    பாஹ்யா -புறத்தடயையும்,

    நுதந்து -அழிக்கட்டும்.

    கதிரவன் நிறத்தவளே ,காட்டிற்குத் தலைவனான வில்வ மரம் உன் தவத்தால் உண்டாயிற்று .

    அதன் பழங்கள் அறியாமையாகிய அகத்தடயையும் ,அமங்கலமாகிய புறத்தடையையும் உன் தவத்தாலே

    அழிக்க்கட்டும் .

    உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |
    ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||…….7

    தேவஸகஃ’குபேரனும் ,

    கீர்திச்ச -புகழின் தேவனும் ,

    மணின சஹ -என்னை நாடி வர வேண்டும் .

    அஸ்மின் -இந்த ,

    ராஷ்ட்ரே‌-நாட்டில் ,

    ப்ராதுர் பூத அஸ்மின் -பிறந்திருக்கிறேன் .

    மே -எனக்கு ,

    கீர்த்திம்- பெருமையும் ,

    ரிதிம் -செல்வமும் ,

    ததாது வழங்குவாய் .

    செல்வதிர்க்குத் தலைவனான குபேரனும் புகழின் தேவனும் என்னை நாடி வர நீண்டும்.

    உனது அருளும் கருணையும் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன் .

    நீ எனக்குப் பெருமையும் செல்வமும் தருவாய் .

    க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |
    அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் ||…… 8

    க்ஷுத்பி’பாஸாம’லாம் -பசியினாலும் தாகத்தினாலும் இளைத்தவளும் ,

    ஜ்யேஷ்டாம-( உனக்கு மூத்தவளும் ), முன்னால் பிறந்தவளுமான ,

    அலக்ஷ்மீம் -செல்வதிலிருந்து விலகிய மூதேவியை ,

    அஹம் -நான் ,

    மீ க்ருஹாத் -எனது இல்லத்திலிருந்து

    நாசயாமி -விலக்குகிறேன் .

    சர்வாம் -எல்லா ,

    அபூதிம் -ஏழ்மையையும் ,

    அசம்ருத்திம் ச -வறுமையையும் ,

    நிர்ணுத -அகற்றி அருளுக .

    பசி தாகத்தினால் மெலிந்தவளும் ,லக்ஷ்மிக்கு முன்னால் பிறந்தவளுமான மூதேவியை நான் விளக்குகிறேன் .

    எனது இல்லத்திலிருந்து அனைத்து எழ்மைகளையும் வறுமைகளையும் அகற்றி அருள்வாய் .

    கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |
    ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||…9

    கம்தத்வாராம்-நறுமணத்தின் இருப்பிடமானவளும் ,

    துராதர்ஷாம் -வெல்லவே முடியாதவளும் ,

    நித்ய புஷ்டாம் -நிதமும் வலிமையை தருபவளும் ,

    கரீஷிணீம் -அனைத்தும் நிறைந்தவளும் ,

    சர்வ பூதானாம் -எல்லா உயிர்களுக்கும் ,

    ஈஸ்வரீம் -தலைவியும் ஆன ,

    தாம் ஸ்ரியம் -அந்த மகாலக்ஷ்மியை ,

    இஹ -இங்கே ,

    உபஹ்வையே–எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன் .

    நறுமணத்தின் இருப்பிடமானவளும் ,எவராலும் வெல்லப்பட முடியாதவளும் , என்றும் இனிமையைத் தருபவளும்,

    அனைத்தும் நிறைந்தவளும் ,அனைத்து உயிர்களின் தலைவியுமான, மகாலக்ஷ்மியை

    இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்

    மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |
    பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||..10.

    ஸ்ரீ -திருமகளே !,

    மனசஹ -மனத்தில் எழும் ,

    காமம் -ஆசைகளையும் ,

    ஆகூதிம் -தருமத்திற்கு முரணாகாத ஆசைகளையும் ,மகிழ்ச்சிகளையும் ,

    வாக்-வாக்கில் ,

    சத்யம் -உணமையையும் ,

    பசூனாம் -பசுக்களாலும் ,

    அன்னச்ய -உணவினாலும் ,

    அசீமகி ,-அனுபவிக்க வேண்டும் .

    மயி -எனக்கு ,

    கீர்த்தி -பெருமை ,

    ஸ்ரயதாம் -உண்டாகட்டும் .

    திருமகளே !

    தருமத்திற்குப் புறம்பாகாத எனது நல்ல ஆசைகளையும் ,மகிழ்ச்சியையும் ,வாக்கில் உண்மையையும் ,

    பசுக்களின் மற்றும் உணவின் நிறைவால் ,ஏற்படுகின்ற இன்பத்தை நான் நுகர வேண்டும் .

    எனக்கு புகழ் உண்டாகட்டும் .

    கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |
    ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||..11

    கர்தமே’ன. கர்த்தமரே (கர்தம முனிவரே ),

    கர்தமேன -உமக்கு (கர்த்தமராகிய )

    பிரஜா பூதா -மகளாய்ப் பிறந்த மகாலக்ஷ்மி ,

    மயி -எனக்கு ,என்னிடம்,

    சம்பவ -தோன்ற வேண்டும் .

    பத்ம மாலினீம் -தாமரைப்பூக்களினால் ஆன மாலை அணிந்தவளும் ,

    ஸ்ரியம் -செல்வத்திற்கு தலைவியுமான ,

    மாதாம் -அன்னையும்

    மே -என் ,

    குலே- என் குலத்தில் ,

    வாசய -தங்கச் செய்ய வேண்டும் .

    கர்த்தமரே !

    உமது மகளான லக்ஷ்மி என்னிடம் வர வேண்டும் .

    தாமரை மாலை அணிந்தவளும் ,செல்வத்தின் தலைவியும் அன்னயுமாகிய அவளை என் குலத்தில் தங்கச்

    செய்ய வேண்டும்.

    சிக்லீத -சிக்லீதரே (முனிவர்,லக்ஷ்மியின் மகன் )

    ஆபஹ -தண்ணீர் ,

    ச்னிக்தானி ;சிறந்த உணவுப் பொருள்களை ,
    .
    ஸ்ருஜந்து -விளைவிக்கட்டும் .

    மே -எனது ,

    க்ருஹே -எனது இல்லத்தில் ,

    வசஹ -வசிக்க வேண்டும் .

    ச -மேலும் ,

    தேவீம் -தேவியும் ,

    மாதரம் -உலகிற்கு அன்னையும் ஆன ,

    ஸ்ரியம் -உங்கள் தாயாகிய திருமகளை ,

    மே -என் .

    குலே -குலத்தில் ,

    நிவாசய – எப்போழ்தும் வாழும்படி அருள வேண்டும் .

    லக்ஷ்மியின் மகனான சிக்லீதரே !

    நீர் சிறந்த உணவுப் பொருள்களை விளைவிக்கட்டும் .

    நீங்கள் என் இல்லத்தில் வசிக்க வேண்டும் .

    தேவியும் உங்கள் அன்னையுமான மகாலக்ஷ்மியை என் குலத்தில் நிலைத்து வாழ அருள வேண்டும் .

    ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |
    ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||…13.

    ஜாத வேத -அக்னியே !,

    ஆர்த்ராம் -கருணை நிரம்பிய மனமுடயவளும் ,

    புஷ்கரிணீம் -தாமரை மலர்கள் நிரம்பிய தடாகத்தில் வசிப்பவளும் ,

    புஷ்டிம்-உணவூட்டி அனைவரையும் வளர்ப்பவளும் ,

    பிங்கலாம் -குங்குமத்தின் நிறத்தை உடையவளும் ,

    பத்ம மாலீநீம் -தாமரை மாலை அணிந்தவளும் ,

    சந்திராம் -நிலவைப் போன்றவளும் ,

    ஹிரண்மயீம் -பொன்மயமானவளுமான ,

    லக்ஷ்மீம் -மகா லக்ஷ்மியை ,

    மே -என்னிடம் ,

    ஆவஹ -எழுந்தருளச் செய்ய வேண்டும்.

    அக்னியே !

    கருணை நிரம்பிய மனதை உடையவளும் ,தாமரை மலரில் உறைபவளும் ,உலகை ஊட்டி வளர்ப்பவளும்,

    குங்குமத்தின் நிறத்தை உடையவளும் ,தாமை மாலை அணிபவளும் ,பொன் மயமானவளுமான திருமகளை ,

    என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .

    ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |
    சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||..14

    ஜாத வேத -அக்னியே !,

    ய-யார் ,

    ஆர்த்ராம் -கருனைநிரம்பிய மனத்தவளும் ,

    கரிணீம் -செயல் திறத்தில் கம்பீரமானவளும் ,

    யஷ்டீம் -தருமத்தை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும் ,

    சுவர்ணாம் -உருக்கிய பசும்பொன் நிறத்தை உடையவளும் ,

    ஹேம மாலீனினீம் -பொன் மாலை அணிந்தவளும் ,

    சூர்யாம் -பகலவன் போல் பிரகாசிக்கின்றவளும் ,

    ஹிரண்மயீம் -பொன் மயமானவளும் ,

    ஆன ,

    லக்ஷ்மீம் -மகாலக்ஷ்மீயை ,

    மே -என்னிடம்,

    ஆவஹ -எழுந்து அருளச் செய்ய வேண்டும்.

    அக்னியே !

    கருணை நிரம்பியவளும் ,செயல் திறத்தில் கம்பீரமானவளும் ,நீதியை நிலை நிறுத்த செங்கோல்

    ஏந்தியவளும் ,அழகிய நிறத்தை உடையவளும் ,பகலவன் போல் பிரகாசிப்பவளும் ,பொன் மயமான

    லக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .

    தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |
    யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||..14.

    ஜாத வேத -அக்னியே !,

    யஸ்யாம் -யாரால் ,

    பிரபூதம் -அளவிட முடியா ,

    ஹிரண்யம் -பொன்னும் ,

    காவஹ -பசுக்களும் ,

    தாஸ்ய -பணிப் பெண்டிரும் ,

    அஸ்வான் -குதிரைகளும் ,

    புருஷான் -பணியாட்களும் ,

    அஹம் -நான் ,

    விந்தேயம்-பெறுவேனோ,

    தாம் -அந்த ,

    லக்ஷ்மீம் -திருமகளை ,

    மே அனபகாமீநீம் -என்னிடமிருந்து விலகாதிற்குமாறு ,

    ஆவஹ -செய்தருள வேண்டும் .

    அக்னி தேவனே !

    யாரால் அளவிட முடியாத பொன்னும் , பசுக்களும் ,பணிப் பெண்டிரும் ,குதிரைகளும் மற்றும்

    பணியாட்களையும் நான் பெறுவேனோ ,அந்த திருமகள் ,என்னை விட்டு விலகாதிருக்க அருள வேண்டும் .

    ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||

    மஹா லக்ஷ்மியை அறிந்து கொள்வோம் ,

    திருமாலின் துணைவியாம் அவளை த்யாநிப்போம் ,

    அந்தத் திருமகள் நம்மைத் தூண்டுவாளாக .

    ய சுசி ..
    ..
    இதனின்று பலஸ்ருதி ,

    ஆகவே பொருள் இங்கு தரப்படவில்லை.

    ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
    தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |

    யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||
    அஶ்வபூர்வாம் ர’தமத்யாம் ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் |
    ஶ்ரியம்’ தேவீமுப’ஹ்வயே ஶ்ரீர்மா தேவீர்ஜு’ஷதாம் ||

    காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |
    பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||

    சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |
    தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||

    ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |
    தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ ||

    உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |
    ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||

    க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |
    அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் ||

    கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |
    ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||

    மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |
    பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||

    கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |
    ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||

    ஆபஃ’ ஸ்றுஜம்து’ ஸ்னிக்தானி சிக்லீத வ’ஸ மே க்றுஹே |
    னி ச’ தேவீம் மாதரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||

    ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |
    ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

    ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |
    சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

    தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |
    யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||

    ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||

    ஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” | தான்யம் தனம் பஶும் பஹுபு’த்ரலாபம் ஶதஸம்”வத்ஸரம் தீர்கமாயுஃ’ ||

    ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

    Enhanced by Zemanta