கண்ணதாசனைப் போல் நாத்திகம் பேசியவரில்லை.ஆத்திகரானதும.
அவர்போல் பழகு தமிழில் இந்துமதத்தத்துவங்களைப்பரப்பியவர் எவருமில்லை.
அர்த்தமுள்ள இந்துமதம்வீடியோ 1 -12 பதிவு செய்திருக்கிறேன் .

13 மற்றும் 14 இதோ.
மேலும் விதைவிருட்சம் இணையதளம் கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்துமதம் முழுத்தொகுப்பினை ,கட்டுரை வடிவில் வெளியிட்டுள்ளது .அது:
முழுத்தொகுப்பு வ்ருட்சம் விருட்சம் இணைய தளத்தில் .
எனது வலைப்பதிவு மக்கள் நலனுக்காகவெளியிடப்பட்டுள்ளது .
மேல் விவரம்கவியரசர்கண்ணதாசன குடும்பத்தினரிடம்.
காப்புரிமை கவியரசு கண்ணதாசன் அவர்களது குடும்பத்தார்..
‘முதற்கட்டம் வறுமை என்றால், அடுத்த கட்டம் செல்வம். தற் கட்டம் இன்பமென்றால், அடுத்த கட்டம் துன்பம்.
முதற்கட்டமே துன்பமென்றால், அடுத்த கட்டம் இன்பம். இறைவ னது தராசில் இரண்டு தட்டுகளும் ஏறி ஏறி இறங்குகின்றன.
`இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்’
என்றான் வள்ளுவன்…
எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும் இறைவன் வழங்கியதில்லை. அந்த நாளில் எனக்கு நல்ல பசியெடுத்தது; உணவு கிடைக்கவில்லை. பின் பசியுமிருந்தது; உணவும் கிடைத் தது. இப்போது உணவு கிடைக்கிறது; பசியில்லை. அடுக்கடுக்கா கப் பணம் சேர்த்து, ஆயிரம் வேலிக்கு மிராசுதாரர் ஆனார் ஒரு வர். ஆன மறுநாளே, அவரை `அரிசி சாப்பிடக் கூடாது; சர்க்கரை வியாதி’ என்று சொல்லிவிட்டார் டாக்டர்.
..
எனது தி.மு.க. நண்பர்கள் ஒவ்வொருவரும் கடுமையான உழைப் பாளிகள். ரயிலிலும் கட்டை வண்டிகளிலும், கால்நடையாகவும் சென்று கூட்டத்தில் பேசுவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைச் சாலைக்குப் போவார்கள். அப்பொழுதெல்லாம் அவர்கள் உடல்நிலை நன்றாகவே இருந்தது. அவர்கள் பதவிக்கு வந்து நிம்மதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அவர்களில் பலருடைய ஆரோக்கியம் கெட்டுவிட்டது.
எனது நண்பர் ஒருவர் படமெடுத்தார். முதற்படமே அபார வெற்றி. அளவு கடந்த லாபம். அடுத்த படத்திலிருந்து விழத் தொடங்கியது அடி. இன்னும் அவர் எழ முடியவில்லை. இன்னொரு பட அதிபர்… ஊமைப்படக் காலத்திலிருந்து தொழிலில் இருக்கிறார். ஆரம்பக் கட்டத்தில் பல படங்கள் அவருக்குக் கை கொடுக்கவில்லை. மிகுந்த சிரமப்பட்டு சென்னைக்கு வந்து ஒரு படம் எடுத்தார். அவ ரது `வாழ்க்கை’யையே அந்தப் படம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். அந்தப் படம் அமோகமாக ஓடியது. ஒரு புது நடிகையை நட்சத்திர நடிகையாக்கிற்று. அது தெலுங்கி லும் வெற்றி; இந்தியிலும் வெற்றி. அது முதல் அவர் தொட்ட தெல்லாம் வெற்றி.
பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இல்லாமல் வாழ்ந்தவர் கள் எத்தனை பேர்? கண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாரு ங்கள்.
இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை. இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிட விரும்பு கிறேன். பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறுவயதிலிருந்தே அவர் தெய்வ நம்பிக்கையுள்ளவர். சினிமாத் தொழிலிலேயே மதுப் பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவ ர். மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது வாழ்க்கை கடுமையான வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது. அப்போதும் அவர் நாண யத்தையும் நேர்மையையும் விட்டதில்லை.
குஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார். ஜூபி டர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலை பார்த்தார். அவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடமாகும். அந்த நேரத்தில் ஒரு வெற்றிலை பாக்குக் கடையில் அவருக்கு ஆறு ரூபாய் வரை கடனாகி விட்டது. கடைக்காரன் அவர் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கினான்; அந்தக் கடையிருக்கும் பக்கமே போக முடியாதபடி அவதிப்பட் டார்.
அடிக்கடி கோவைக்குப் பத்து மைலுக்கு அப்பாலிருக்கும் மருத மலைக்குப்போய் `முருகா! முருகா!’ என்று அழுவார். அந்தக் கோவி லோ ஜன நடமாட்டமில்லாத கோவில். கடைக்காரன் கோபித்துக் கொண்ட அன்று இரவு. அந்த மருதமலைக் கோவிலில் போய் உட்கா ர்ந்து கொண்டு அழுதார்; “முருகா! காப்பாற்று” என்று வேண்டிக் கொண்டார்.
நள்ளிரவில் காடுகள் நிறைந்த அந்த மலையை விட்டு இறங்கி னார். வழியில் ஒரு சிகரெட் பாக்கெட் கிடந்தது. அதைக் காலால் உதை த்துக் கொண்டு நகர்ந்தார். கொஞ்சதூரம் வந்ததும் என்ன தோன்றி ற்றோ? அந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தார். உள்ளே இரண்டு சிகரெட்டுகளும், பத்து ரூபாய் நோட்டும் இருந்தன.
அப்போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?
ஆதாரம் :
Related articles
- Memory Is…… Yoga Sutra 1.11 (ramanan50.wordpress.com)
Leave a Reply