Tag: ஆண்

  • திருநங்கையருக்கு ஆலோசனை – அறுவைசிகிச்சை வீடியோ

    இது இயற்கையினால் விளைந்தது .இதைப்பற்றி அதிகம் சிந்தனை செய்வது நல்லதல்ல .

    பெண்ணாக மாற வேண்டும் என்ற மனத்திண்ணம் இருப்பின் நல்ல மருத்துவரை அணுகி அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் .மேலும் மனவள வல்லுனரின் அறிவுரையை ஏற்கவும்.
    கல்வி ஒன்றுதான் உங்கள் மன நலத்திற்கும் மற்றும் வாழ்க்கையை சந்திக்கவும் உதவும் .
    எனவே கல்வியை அஞ்சல் முகமாகப் பெறவும் .
    பெற்றோரின் அணைப்பு அவசியம் .அவர்களையும் ஆலோசகர்களிடம் அழைத்துச்செல்லவும்.
    கல்வி கிடைத்தாலே பிரச்சினை   தீர்ந்த மாதிரி .
  • அந்தரங்கம் -முதிர்ந்த ,குடும்பம் உடையவருடன் வாழவேண்டும் -ஆலோசனை .

    உங்கள் உடல் நிலைக்கும் ,இப்போதைய உங்கள் நிலைக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை .

    .28 வயதில் காதல் என்று நினைத்துக்கொண்டு ,விளைவுகளைப் பற்றி யோசியாமல் முடிவு எடுத்து உள்ளீர்கள்
    மணமும் செய்து கொண்டீர்கள் , அவருக்கு விருப்பம் இல்லை  என்ற போதிலும்.
    .அவர் இப்போது அவர் குடும்பத்தைப் பற்றி யோசிப்பதாகவும் ,உங்களுக்கு குழந்தை வேண்டும் என்பதாகவும் கூறி உள்ளீர்கள் .
    அவர் நிலை மற்றும் அவர் குடும்பத்தார் நிலை பற்றி யோசித்தீர்களா?
    அவரும் அவர் குடும்பத்தாரும் என்ன செய்ய வேண்டும் ?அவர் குடும்பத்தை விட்டு உங்களுடன் வர வேண்டுமா ?
    அப்போது அவர் குடும்ப நிலை என்ன?
    அப்படியே அவர் செய்தாலும் ,பின் அவர் உங்களைப் போன்று அவரை விரும்பும் பெண்ணிடம் சென்றால் ,
    உங்கள் மனம் என்ன பாடு படும் ?.
    ஆலோசியாமல் காதல் என்ற பெயரில் தவறு செய்து விட்டீர்கள் .
    இப்போதேனும் மன முதிர்ச்சி உடையவர்களின் அறிவுரையைக் கேட்டு முடிவு எடுங்கள்.
    என்னைப் பொறுத்தவரை ,நீங்கள் அவரை விட்டு விலகி ,உங்கள் நிலையை அறிந்து உணர்ந்து கொள்பவரை மணப்பது நன்று .இதுவும் சிறிது கடினமானதுதான்.
    இந்த முடிவிலும் திருமணத்திற்குப் பின் சச்சரவு வர வாய்ப்புண்டு .காதல் ,புனித உறவு என்று சிக்கலில் மாட்டிக் கொள்ளுபர்கள் முன்பே யோசிப்பது நல்லது
    Story:
    வணக்கம்.  என் வயது 28; பெண். சிறுவயதில் போலியோ நோயால் இருகால்களும் செயலிழந்து விட்டன.ளும் செயலிழந்து விட்டன. நான் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து உள்ளேன். என் குடும்ப சூழ்நிலை காரணமாக, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலே, அங்கு வேறொரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர், ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. அவருக்கு, தற்போது 50 வயது. அவர், என் மீது காட்டிய கருணை, பின் காதலாக மாறி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டோம். அந்த திருமணத்தில், அவருக்கு துளியும் விருப்பம் இல்லை. என் கட்டாயத்தால், யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டோம். அவர் குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். அவர் மகள் திருமண வயதில் இருக்கிறாள்; மகன் தொழிற்கல்வி படிக்கிறான். திருமணத்திற்கு பின், நாங்கள் இருவரும் சேர்ந்து, ஒரு கடையை துவங்கினோம். கடை நல்ல நிலையில் நடக்கிறது. கடையின் அத்தனை பொறுப்புகளையும் நான் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் குடும்பத்தைச் சார்ந்த யாரும் வருவது கிடையாது; ஆனால், அதன் பலனை மட்டும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவரது மனைவி, குழந்தைகளுக்கு எங்கள் உறவு நன்கு தெரியும். ஆனால், அவர்கள் தெரியாதது போல் நடந்து கொள்கின்றனர். என் கணவர் என்னை விட, அவர்கள் மீதுதான் மிகுந்த பாசம் கொண்டுள்ளார். தற்போது, என்னுடன் சேர்ந்து வாழ இன்னும் காலம் தாமதிக்கிறார். ஏன் என்று கேட்டால், “என் பிள்ளைகளுக்கு நல்ல வரன்களை அமைத்து, என் கடமைகளை முடித்த பின்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும். அதுவரை உன்னுடைய வீட்டிலேயே இரு…’ என்று கூறுகிறார். அவருடைய மகளுக்கு 23 வயதாகிறது. திருமணம் செய்ய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்கிறார். எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். அவனுக்கு தற்போது திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் என்னுடைய நிலை என்னவென்று தெரியவில்லை. என் பெற்றோரும் என் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை.
    என் கணவர் மீது நான் கொண்டுள்ள பாசத்தை அளவிட்டு கூற முடியாது. என்னுடைய அன்பை அவருக்கு எப்படி <உணர்த்துவது என்றே தெரியவில்லை. எதிலும் அவர் தன் குடும்பத்திற்கே முன்னுரிமை தர நினைக்கிறார். அவருக்கு வயதாகி விட்டது. இருக்கிற கொஞ்ச நாட்களில் நாங்களும் அன்பாக வாழ வேண்டும் என்று நினைக்கிறேன்.
    அவருடைய குடும்பத்தினர், தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே அவரை பயன்படுத்துகின்றனர். எதிர்காலத்தில், ஒரு குழந்தை இருந்தால், எனக்கு உதவியாக இருக்கும். ஆனால், அவருடைய குழந்தைகளே திருமண வயதில் இருக்கும்போது, நான் குழந்தை பெற்றுக் கொள்வது அவருக்கு அவமானமாக தெரிகிறது. எனக்கு, குழந்தை வேண்டும் என்று அவரிடம் கேட்க, பயமாக இருக்கிறது. ஏதாவது தவறாக நினைத்து விடுவாரோ என்று கவலையாக இருக்கிறது. அவருடைய குழந்தைகளை பற்றி, அவரது நல்லெண்ணம் எனக்கு புரிகிறது.
    ஆனால், என் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ எனத் தோன்றுகிறது. எனக்கு என் கணவரோடு சேர்ந்து, எல்லாரையும் போல் வாழ வேண்டும் என்று ஆசையாக உள்ளது. என் பாசத்தையும், எண்ணத்தையும் அவருக்கு புரிய வைக்கவும், என் வாழ்வில் ஒளியோற்றவும், தங்களின் மகளாக நினைத்து, அறிவுரை கூற வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.