Tag: கண்ணதாசன்

  • காதல் சிறகை வானில் விரித்து ,கண்ணதாசன் -காலத்தை வெல்லும் வரிகள்

    ‘தூது’ பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் விரவிக் கிடக்கின்றன .

    சம்ஸ்க்ருதத்தில் காளிதாசனின் மேக சந்தேசம் மிக உயர்ந்த கற்பனை வளத்துடன் படைக்கப்பட்டது .
    சம  கால இலக்கியத்திலும் பல பாடல்கள் உள்ளன .
    காதலியும் காதலனும் பிரிந்து பின் சேர்கின்றனர் .
    எண்ணத்தையே தூது விடும் கற்பனை கண்ணதாசன் சிறப்பு.
    எண்ணங்களைப்   பறவயாககி  விண்ணில்  பறக்கவிட்டவர் ,காதலை சிறகு விரித்துப் பறக்கச் செய்கிறார்.
    ‘காதல் சிறகை வானில் விரித்து வான வீத்யில் பறக்கவா ,
    கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் மிதக்கவா’
    எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா,
    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி  இரு கை கொண்டு வணங்கவா ‘
    பிரிந்த தலைவி கணவனின் மார்பில் முகம் புதைத்து அழுகிறாள் -இந்தக் கண்ணீர் யாருடையது என்பதைச்  சொல்லாததன் மூலம்,அது காதலனின்  கண்ணீராகக் கூட இருக்கலாம்.
    பிரிந்திருந்த காலத்தை வெறுத்து அக் காலத்தை வெறுப்பதாகவும் கொள்ளலாம் ; பிரிவின்  மூலம் காதலின் வலிமையை  உணர்த்தியதால் நன்றி மேலிட்டு காலத்தை வணங்குவதாகவும் கொள்ளலாம் .
    ‘முதல் நாள் காணும் மணப்பெண் போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா ,
    முறையுடன் மணந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா’
    பிரிந்தவர் கூடினால் அங்கு அடக்கத்திற்கு இடம் இல்லை ,உணர்ச்சிகள் பெருக்கெடுத்து இருக்கும் வேளையில்,அடக்கத்திற்கு இடம் ஏது?
    இதை’ நான் உன்னை மணந்தவள் ,நமக்கு இடையில் நாணம் தேவை இல்லை ,அங்கு உணர்ச்சிகளுக்குத்தான் முதல் இடம் ,வழிவழியாய் வந்த நாணத்திற்கு இடம் இல்லை .’
    ( இதே கவிஞர் ‘தாய் வழியே வந்த நாணத்தைக் காட்டி ‘ என்று ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி ‘ பாடலில்  பேசுகிறார் .)
    ‘பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது, அழுதால்  கொஞ்சம் நிம்மதி ,
    பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சந்நிதி ,
    அதுதான் காதல் சந்நிதி ‘
    பிரிந்தவராலே மட்டும் உணரக்கூடிய வரிகள் .
    அதுவும் நிரந்தரமாகப் (இறப்பில்) பிரிந்தவராலே மட்டும் கேட்டு அழக்கூடிய  வரிகள்.
    காதலின் சாரத்தைப் பிழிந்தெடுக்கும் மேலும் இரு பாடல்களுடன் கண்ணதாசன் மீண்டும் வருவார் .
    Related;
    ”நான் பழந்தமிழ் பாடல்களைத் திருடுவதாகப் பலர் கூறுகிறார்கள்..ஆம்,,பழந்தமிழ்ப் பாடல்களை எளிமைப் படுத்தி அளிக்கிறேன்

    என்பதில் எனக்கு வெட்கம் இல்லை ,பெருமைப்படுகிறேன் .”
    நமக்கும் தமிழ் தெரியும் .ஆனால் கவியரசைப் போல் உணர்ந்து நாம் அன்றாடம் பயன் படுத்தும் சொற்களைக் கொண்டு இதயத்தைத் தொடுவதில் கண்ணதாசன், கண்ணதாசன்தான்
  • கண்ணதாசன் ,கெளரவம் ,தங்கப்பதக்கம் பாடல்கள்

    Kannadasan ,Tamil Poet
    Kannadasan

    கண்ணதாசனை ,அவரது உறவினர் ஒருவருடன் அவரது ஹென்ஸ்மன் ரோடு இல்லத்தில் (இப்போது அது கண்ணதாசன்  சாலை ) சந்தித்தேன் .

    பேச்சு பாடல்களைப் பற்றித் திரும்பியது .
    ‘இலக்கணத்திற்கு அடங்காத பாட்டை எழுதி ,கருத்தைத் தெளிவாகக் கூறுவதில் நீர் நீர்தான் ‘ என்றேன் .
    ‘அப்படியா ,சொல்லுங்க தம்பி’  என்றார்.
    கெளரவம் படத்தில் ‘நீயும் நானுமா ,கண்ணா , நீயும் நானுமா பாட்டில் அறிவைக் கொடுத்ததோர் துரோணரின் கெளரவம் அவர்மேல் தொடுத்ததேன் அர்ஜுனன் கெளரவம் வரி இலக்கணத்தில் அடங்காது,ஓரளவு உருவகம் என்று சொல்ல வேண்டியதுதான் ஆனால் படத்தின் கதை இந்த  இரண்டு வரிகளில் ‘
    ‘வேறே ‘
    தங்கப்பதக்கதில் சோதனை மேல் சோதனை பாடலில் ,சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது என்று எழுதியிருக்கிறீர்கள் .
    இந்த இரண்டு வார்த்தைகளும் சம்ஸ்க்ருதம் ,இதன் பொருள் சம்ஸ்க்ருதம்படித்தவர்களுக்கே    தெரியுமா என்பதே சந்தேகம் .
    சொந்தத்தை நாம் தேர்ந்தெடுக்க முடியாது ,இறைவன் கொடுப்பது ,தாய் ,தந்தை ,உடன் பிறப்புகள் மற்றும் மக்கள் .
    ஆனால் , பந்தம் நாம் தேர்ந்தெடுப்பது ,-மனைவி .
    கால்களிலும் கைகளிலும் விலங்கு பூட்டப்பட்டவன்,முயன்றால் ஒருவேளை கால் விலங்கை அகற்றிக்கொள்ள முடியும் .
    ஆனால்,கை விலங்கை ?
    கண்ணதாசன் சொன்னார் .
    ‘தம்பி ,நாங்க பாட்டு எழுதும்போது இதை எல்லாம் யோசிக்கறதில்லே,நான் பாட்டு தண்ணி அடிச்சுட்டு எழுதறதுதான் .
    நீங்கல்லாம் இந்தமாதிரி அனுபவிச்சு சொல்றீங்களே அது போதும் ‘
    ‘நான் தண்ணியடிச்சா தூக்கம்தான் வருது , படிக்கவே வரலே ‘
    கண்ணதாசன் தொடரும் .
    Related:
  • Ullathil Nalla Ullam,Kannadasan,Star Vijay Super Singer.Soul Stirring.

    Sivaji as karnan
    Karna

    Music….if you have agood Lyric,soothing Music,a Mellifluous voice and the Bhaava-the right emotion essayed  by a here that felt..

    Can there be anything to match it?

    It is said that excessive Happiness also brings tears .

    The original by Sirkazhi Govindrajan in Karnan never failed to me with emotion.

    Kaviarasar Kannadasan‘s Lyric-what can one say?

    In four stanza’s can one compress Karnan’s Life and Kridshna’s Conspiracy?

    ‘தாய்க்கு  நீ மகன் இல்லை ,தம்பிக்கு   அண்ணன் இல்லை ‘

    Karna at his death-bed who knew who  his mother was and it is his younger brother Arjuna who felled him.

    Yet he can not expose these facts for such is his vow.

    ‘ஊர்ப் பழி ஏற்றாயடா’

    Never knowing his lineage, he was insulted throughout his life and had to fight every inch of life for recognition,being called as a ‘b……’!
    ‘மன்னவர் பணி ஏற்கும் கண்ணன் உன் பணி செய்ய உன்னடி பணிவானடா’

    Lord Krishna was the one who is to be worshipped and accorded the Respects First at the Courts of  Kings and Emperors.

    Such is the nature of the work Lord Krishna embarked upon, that of getting the Punya or the Good results of Karna’s actions,especially of donating, He is compelled to concede that in doing so he has to touch the feet of Karna.
    கண்ணன்  உன் பணி  செய்ய உன்னடி பணிவானடா ,கர்ணா ,மன்னித்து அருள்வாயடா

    So forgive Him with your kindness .

    Note how Kannadasan uses the Third Person for him, though the song is supposed to be sung by Krishna.

    நானும்  உன் பழி கொண்டேனடா

    Lord Krishna is aware what he was about to do is not Righteous,yet He Had to do it in the interest  of the Greater Good and Dharma.

    He also knows, as in the case Valli,he is going to be remembered for this blemish.

    Kannadasan now reverts to Second person.

    This is one of the rare songs where Kannadasn uses all-First Person,Second and the Third.

    Why does Karna behave thus?

    செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா , கர்ணா வஞ்சகன் கண்ணனடா

    The Ultimate Dharma in Hinduism is Gratitude.

    That’s what Karna has done, though he was aware what Duryodhana was doing in incorrect,such is his commitment to Gratitude.

    Adds The Poet Laureate ‘scheming and double dealing Krishna, that is Himself.

    Tell me which Religion allows some one to address God in these Terms?

    As Krishna explains in The Bhagavad Gita, ‘once born, even I am bound by the results of my actions’

    To one who knows the Mahabharata, this is a master piece of Poetry.

    I do not know what I am writing in terms of continuity of content.

    This piece is being written  after hearing a soul-stirring performance by a small  boy of this song in Star Vjay’s Super Singer Junior.

    The Judges were speechless and there were tears from the veterans of Carnatic Music.

    Such was the rendering.

    Listen and enjoy.

  • உன்கண்ணில் நீர்வழிந்தால் -கண்ணதாசன்

    “கண்ணதாசன் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.

    Kannadasan
    Kaviarasar Kannadasan.
    .”நான் பழந்தமிழ் பாடல்களைத் திருடுவதாகப் பலர் கூறுகிறார்கள்..ஆம்,,பழந்தமிழ்ப் பாடல்களை எளிமைப் படுத்தி அளிக்கிறேன்
    என்பதில் எனக்கு வெட்கம் இல்லை ,பெருமைப்படுகிறேன் .”
    நமக்கும் தமிழ் தெரியும் .ஆனால் கவியரசைப் போல் உணர்ந்து நாம் அன்றாடம் பயன் படுத்தும் சொற்களைக் கொண்டு இதயத்தைத் தொடுவதில் கண்ணதாசன், கண்ணதாசன்தான்.
    உன் கண்ணில் நீர் வழிந்தால் ,பாரதியின் பாடலின் முழுவீச்சை   உணர வைத்தவர் கண்ணதாசன்…
    மாறாப் புண்ணிற்கும் காலம்தான் மாற்றும் மருந்து என்பர்.
    காலச் சுமை தாங்கி என்று தொடங்கி ,காலம் முழுதும் கண்ணீரைத் துடைப்பவள் என்கிறார்..
    மார்பில் தாங்கி விழும் கண்ணீரை கீழே விழாமல் துடைப்பவள் -இதை விட கணவன் மனைவியின் ஒருமித்த உணர்வை எப்படி வெளிப்படுத்துவது ?
    “ஆலம் விழுதுகள் “-ஆலம் விழுதுகள் ஓரளவு மரத்தைத் தாங்கினாலும் , அவை மரமாகி மேலும் பல விழுதுகள் விட்டு முன் செல்லும்..
    தாய் மரத்தைத் தாங்கும் திறன் குறையும் .
    அதே போல்தான் மக்களும்..
    அவர்களும் என்ன முயன்றாலும் , அவர்கள் வளர்கையில் அவர்களின் குடும்பத்தைப் பேணும் சுமை வந்து விடுகிறது .
     அவர்களையும் குறை கூற இயலாது.

    இதை நம் கவிஞர் வெளிப்படுத்திய அழகு !
    இறுதில் சொல்கிறார் -‘என் தேவையை  யாரறிவரர்….தெய்வம் ஒன்றே அறியும் ‘
    சாதாரணக் கவிஞர்கள் ,உன்னைப்போல் தெய்வம் ஒன்றே  என்பதற்குப் பதிலாக வேறு வார்த்தையைப் போட்டு இருப்பார்கள் சந்தத்திற்காக!
    கண்ணதாசன்   இந்த வார்த்தையினால் மனைவியை தெய்வத்திற்கும் மேல் ஒரு படி உயர்த்தி விடுகிறார் .
    கடவுள் அருள் பெற்ற்வவரராலேதான் இது முடியும்!உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

    என் கண்ணில் பாவை அன்றோ
    கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

    உன்னை கரம் பிடித்தேன் 
    வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி

    பொண்ணை மணந்ததனால் சபையில்
    சபையில் புகழும் வளர்ந்ததடி

    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

    கால சுமைதாங்கி போலே
    மார்பில் எனை தாங்கி

    வீழும் கண்ணீர் துடைப்பாய்
    அதில் என் விம்மல் தணியுமடி

    ஆல‌ம் விழுதுகள் போல்
    உறவு ஆயிரம் வந்தும் என்ன

    வேர் என நீ இருந்தாய்
    அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

    முள்ளில் படுக்கையிட்டு
    இமையை மூடவிடாதிருக்கும்

    பிள்ளை குலமடியோ 
    என்னை பேதைமை செய்ததடி

    பேருக்கு பிள்ளை உண்டு
    பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு

    பேருக்கு பிள்ளை உண்டு
    பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு

    என் தேவையை யார் அறிவார்
    என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
    தெய்வம் ஒன்றே அறியும்

    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

    என் கண்ணில் பாவை அன்றோ
    கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

    உன் கண்ணில் நீர் வழிந்தால் . . .

  • Kannadasan,அர்த்தமுள்ள இந்து மதம் Parts 1-6

     

    KANNADASAN\’S ARTHAMULLA INDHU MADHAM PART-1

    KANNADASAN\’S ARTHAMULLA INDHU MADHAM PART-2

    KANNADASAN\’S ARTHAMULLA INDHU MADHAM PART-3

    KANNADASAN\’S ARTHAMULLA INDHU MADHAM PART-4

    KANNADASAN\’S ARTHAMULLA INDHU MADHAM PART-5

    KANNADASAN\’S ARTHAMULLA INDHU MADHAM PART-6

    There have been greater poets.

    But Kannadasan’s appeal to heart  is unique..

    Many of his Poems/songs may not be original like’Satti Suttadhada,veedu varai uravu,Irandhavanai chumandhavanum irandhuttan,

    But Kannadasan’s rendering is more appealing than the original.

    It is a Gift.

    There have been /are Scholarly treatises on’Hinduism

    But nothing like ‘Artamulla Indhumadham in terms of simple presentation of complex issues and an exquisite prose.

    May be there are inaccuracies here and there, those who find them may search the original for final say.

    Even here Kannadasan scores-he made you look for Hinduism.

    Uploaded above are six parts of Kannadasan’s ‘Arthamulla Indhumadham’

    http://www.mediafire.com/?y2aeafno11udzem

     

    Arthamulla Indhumadham Volume  7-12  http://ramanisblog.in/2012/06/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-kannadasan-volum/