நம்மாழ்வார் பாசுரங்கள் அந்தாதியா?

இறை நிலையை உணர்ந்த பரவச நிலையில் எழுந்தபாடல்களுக்கு,இலக்கணம் பார்ப்பது முறை அல்ல என்பது என் நிலைப்பாடு ..
கருத்துக்களை வரவேற்கிறேன் .

I received an email from my friend Mr.Srininvasan Rajan thus.

“கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே..

இப்பாசுரத்தின், ஈற்றுச் சொல் நாரணம். அடுத்த பாசுரம்
நாரணனெம்மான் என்று இந்த ஈற்றுச் சொல்லாகவே தொடங்குகிறது.

நம்ஆழ்வார் அருளீய அனைத்துப் ப்ரபந்தங்களும் , அந்தாதியாக அறிகிறோம்.

திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி , யாவும் அந்தாதியே.

இப்படி இருக்கையில்,திருவாய்மொழியின் ஒரு பாசுரத்தின் கடைச்சொல் அடுத்த பாசுரத்தின் தொடக்கமாக் இல்லாமல் இருக்கிறது.

இதுவும், அந்தாதியா? அல்லதுஅந்தாதி இல்லையா?”

எனது குறிப்பு

நாலாம் திருமொழியின் முதல் பாசுரத்தின் ஈற்றும், இரண்டின் முதல் அடியும் அந்தாதி இலக்கணத்தில் அடங்கவில்லை..

:அஞ்சிறை மட நாராய் ……செய்யுமோ ……….. (1)

என் செய்ய தாமரைக்கண்…………………………………(2)

முதல் பாசுரத்தின் கடைசிச் சீரின் முந்தைய சீர் இரண்டாம் பாசுரத்தின் முதல் சீராக அமைந்துள்ள)த.

ஆராந் திருமொழி

‘பரிவதலீசனைப்பாடி ….’
முதல் பாடல்
அடுத்த பாடல்’ மதுவார் ‘”

இதனிலிலும் சீர் அடங்கவில்லை .

ஆழ்வார்களும் நாயன்மார்களும் இறைவனை உணர்ந்து பரவச நிலையில் பாமாலை சூடுகையில் ,இலக்கணம் பார்ப்பதில்லை .
காளிதாசனோ ,அருணகிரியோ இலக்கியம் படைக்க வேண்டும் என்று எண்ணிப் பாடவில்லை..
இறை நிலையை உணர்ந்த பரவச நிலையில் எழுந்தபாடல்களுக்கு,இலக்கணம் பார்ப்பது முறை அல்ல என்பது என் நிலைப்பாடு ..
கருத்துக்களை வரவேற்கிறேன் .

Ramanis blog
Ramanis blog

Retired Senior Management Professional.
Lectures on Indian Philosophy,Hinduism, Comparative Religions.
Researching Philosophy, Religion.
Free lance Writer.Blogger,Tedex Speaker

Articles: 8820

Leave a Reply

Discover more from Ramanisblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading