“உயிரினும் மேலான உடன் பிறப்பே “-கலைஞர் மடல்.

பத்திரிகைகளிலும்  இணைய தளங்களிலும் இன்ன பிற ஊடகங்களிலும் நம் கழக குடும்பத்தைப் பற்றி பரப்பப்படும் செய்திகளைக் கேட்டு உன் மனம்  பதைப்பதை நான் அறிவேன் .

Karunanidhi.

தம்பி ,ஆரியர்  கூட்டமும் அதற்குத்  துணை போகும் சில எட்டப்பர்களையும்  நீயும் அறிவாய் ,நானும் அறிவேன்.

‘நான் சொத்து சேர்த்து விட்டேனாம் ,ஊழல் புரிந்திட்டேனாம் ‘-எண்ணவே – மனம் பதைக்கிறது .

நீ அறிவாய் ,நான் சென்னைக்கு திருவாருரில்ருந்து வருகையில் ஒரு கருப்பு நிற டிரங்குப் பெட்டியைத் தவிர ஏதும் கொணரவில்லை என்பதை, நீ மட்டுமல்ல,  இந்த  நாடே அறியும்..

இன்று ஏதோ சிறு தொகையை கலைஞர் அறக் கட்டளைக்காக சிறிதாக ,குருவி மணி சேர்ப்பது போல் சேமித்து வைத்ததை  ஏகடியம் பேசுகின்றனர் .

புறம் கூறற்க என்னும் தமிழ் மூதுரையையும் மறந்து ,’வாய்மை எனப்படுவது  யாவர்க்கும் தீமை இலாத சொலல் ‘ என்னும் வள்ளுவம் உரைக்கும் அற நெறியையும் புறந்தள்ளி , புழுதி   வாரித் தூற்றுவோரை , ‘மறப்போம்,,மன்னிப்போம் ‘என பேரறிஞர் கூற்றை மனதில்  இருத்தி   நான் மன்னித்தாலும் நீ மற்றக மாட்டாய் ,அடலேறு என தீப்பந்தம் ஏந்தி அன்றொரு நாள் எனது இல்லத்திற்கு,விதிகளை மீறி கட்டிடம் கட்டினேன்  என்பதற்காக மின் இணைப்புத் தராத காலையில் சென்னை வந்தவன்ரோ ,என் கண் மணி?

கனிமொழி லஞ்சம் வாங்கினாள் என்கின்றனர் -சாட்சி உண்டா ?
கழகக் கொள்கை பரப்ப ஊடகம் நடத்தியத் தவிர என்ன குற்றம் புரிந்தாள்?
ஆரிய ஊடகங்களையும்  ,இங்கு உள்ள பார்ப்பனச் சதியையும் புரிந்து கொள்ள இயலாதவனா  தமிழன் ?
பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட இனத திற்காகவும் பாடு படும் இந்தக் கருணாநிதியை வீழ்த்தும் சதியை இனங்கொண்டு  முறியடிப்போம் ..
Ramanis blog
Ramanis blog

Retired Senior Management Professional.
Lectures on Indian Philosophy,Hinduism, Comparative Religions.
Researching Philosophy, Religion.
Free lance Writer.Blogger,Tedex Speaker

Articles: 8833

Leave a Reply

Discover more from Ramanisblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading