சந்தியா வந்தனம்உத்தர பாகம் நிறைவு அர்த்தம்

 

முதல் பாகத்தின் இணைப்பை இறுதியில் காண்க .

 

கணபதி த்யானம் .

 

எங்கும் நிறைந்தவரும் எனினும் பக்தருக்கு உகந்த வடிவம் எடுப்பவரும்,வெண்மையான ஆடை உடுத்தவரும் ,நிலவு போன்ற  ஒளி உள்ளவரும் ,நான்கு கைகள் உள்ளவரும் ,ஆனந்தம் பொங்கும் முகமண்டலத்தை உடையவரும் ஆகிய கணபதியை ,எல்லா இடையூறுகளும் விலகுவதற்காக த்யானம் செய்ய வேண்டும்.

 

மூச்சின் ஆட்சி .

 

ஓங்காரமே பூலோகம் ,
ஓங்காரமே புவ லோகம் ,
ஓங்காரமே ஸுவர் லோகம் ,
ஓங்காரமே மகர் லோகம் ,
ஓங்காரமே ஜன லோகம் ,
ஓங்காரமே தபோ லோகம் ,
ஓங்காரமே சத்திய லோகம் ,

 

ஓங்காரப் எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ ,அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதி ஸ்வரூபத்தை தியானிப்போம் .
ஓங்காரமே ஜலமும் ஒளியும் ,
ஓங்காரமே ரசம் பொருந்திய அன்னத்தை அளிக்கும் பூமியும் ,
அதுவே உயிருக்கு ஆதாரமான வாயுவும் ,
எங்கும் பரந்த ஆகாசமும் ,
பூ:புவ:சுவ: என்ற வ்யாஹ்ரிதிகள் குறிப்பிடும் மனம் ,புத்தி அகங்காரம் என்ற தத்துவங்களும் ஓங்காரமே.

 

தெளிந்த தீர்மானம் .

 

என்னால் அடையப்பட்ட எல்லாப் பாவங்களையும் நசிக்கச் செய்வதின் மூலம் , பகவானின் அருளுக்குப் பாத்திரமாகும் பொருட்டு ,காலையில் ,நடுப்பகலில் ,மாலையில் காயத்ரி மகா மந்திர ஜபம் ஆரம்பிக்கிறேன்.

 

பிரணவ ந்யாசம்.

ஒங்காரதிற்கு பிரம்மா ரிஷி ,

தேவி காயத்ரி சந்தம் ,

பரமாத்மா தேவதை .

பூ முதலிய ஏழு வ்யாஹ்ரிதிகளுக்கும் முறையே அத்ரி , பிருகு குத்சர் ,வசிஷ்டர் , கௌதமர் காஸ்யபர் ,ஆங்கிரசர் ரிஷிகள்.

காயத்ரி ,அனுஷ்டுப் ,ப்ருஹதி ,பங்க்தி ,த்ருஷ்டுப் ,ஜகதி என்பவை சந்தங்கள் .

அக்னி ,வாயு ,சூரியன்,பிருகஸ்பதி ,வருணன் ,இந்திரன் விச்வேதேவர்கள் முறையே தேவதைகள் .

ப்ராணாயாமம்

ஓங்காரமே பூலோகம் ,
ஓங்காரமே புவ லோகம் ,
ஓங்காரமே ஸுவர் லோகம் ,
ஓங்காரமே மகர் லோகம் ,
ஓங்காரமே ஜன லோகம் ,
ஓங்காரமே தபோ லோகம் ,
ஓங்காரமே சத்திய லோகம் ,

ஓங்காரப் எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ ,அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதி ஸ்வரூபத்தை தியானிப்போம் .
ஓங்காரமே ஜலமும் ஒளியும் ,
ஓங்காரமே ரசம் பொருந்திய அன்னத்தை அளிக்கும் பூமியும் ,
அதுவே உயிருக்கு ஆதாரமான வாயுவும் ,
எங்கும் பரந்த ஆகாசமும் ,
பூ:புவ:சுவ: என்ற வ்யாஹ்ரிதிகள் குறிப்பிடும் மனம் ,புத்தி அகங்காரம் என்ற தத்துவங்களும் ஓங்காரமே.

காயத்ரி ஆவாகனம் .

ஆயாது எனும் அனுவாகதிற்கு வாம தேவர் ரிஷி ,

அனுஷ்டுப் சந்தம் ,

காயத்ரி தேவதை .

விரும்பிய வரங்களை அளிப்பவளும்,அழிவற்றவளும் வேதத்தால் அறியப்பட்டவளும் வேத மாதாவும் ஆகிய காயத்ரி தேவி எழுந்தருளி இந்த வேத மந்திர ஸ்துதியை அங்கீகரிக்க வேண்டும் .

காயத்ரியே !

நீயே பிராண சக்த்யாகவும் ,இந்திர சக்தியாகவும் இருக்கிறாய் ,

சத்ருக்களை வெல்லும் திறமையாக இருக்கிறாய் ,

அங்கங்களின் வலிமையாக இருக்கிறாய் ,

ஞான ஒளியாக இருக்கிறாய் ,

தேவர்களின் பிரசித்தமான பிரகாச வடிவாய் இருக்கிறாய் ,

உலக வடிவாய் இருக்கிறாய் ,

கால் ரூபியாக உலகின் ஆயுளாகவும் இருகிறாய் .

எல்லோருடைய ஆயுளாகவும் இருக்கிறாய் ,

அனைத்தையும் வென்றவள் ஆக இருக்கிறாய் ,
பிரணவப் பொருளான காயத்ரியே !

உன்னை , எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன் ,

சாவித்ரி !

உன்னை எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன் ,

சரஸ்வதி

உன்னை எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன் .

காயத்ரி ந்யாசம் .

காயத்ரி மந்திரத்திற்கு விஸ்வாமித்ரர் ரிஷி ,

நிஸ்ருத் காயத்ரி என்னும் சந்தம்

சவிதா தேவதை .

அனகன் ந்யாசம் , கர ந்யாசம் ஸ்வரூப த்யானம் ,பஞ்ச பூஜை செய்து கொள்ளவும் .

காயத்ரி ஜபம் .

ஓங்காரப் பொருளான எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ ,அந்த அனைத்தையும் படைக்கிறவரான ,பகவானுடைய சிறந்த ஜோதி ஸ்வரூபத்தை த்யாநிப்போம் .

காயத்ரி உபஸ்தானம் காலை சந்த்யோபஸ்தானம் செய்கிறேன் ,

நடுப்பகலில் ஆதித்ய உபஸ்த்தானம் செய்கிறேன் ,

சாயங்காலத்தில் சாயம் சந்த்யா உபஸ்தானம் செய்கிறேன் .

பிரகாசிக்கின்ற காயத்ரி தேவியே ,
பூமியில் பிரம்ம உபாசனம் செய்கின்ற எங்களுக்கு அனுக்கிரகத்தை செய்து மேரு மலையின் உச்சியில் உத்தமமமான சிகரத்தில் உள்ள உனது ஆலயத்திற்கு ஆனந்தமாய் எழுந்து அருள்வாய் .

காலையில் சூரிய உபஸ்தானம்.

பிரஜைகளை ரக்ஷிக்கும் சூரிய தேவனுடைய பூஜிக்கத் தகுந்ததும்,அழிவற்றதும் , கேட்பவர் மனத்தை கவர்வதில் சிறந்ததுமான

கீர்த்தியையும் பெருமையும் த்யானிக்கிறேன்

சூரியன் அனைத்தையும் அறிந்து கொண்டு ஜனங்களை நடத்தி வைக்கிறார் .

சூரியன் பூமியையும் மேல் உலகையும் தாங்குகிறார் .

அவர் ஜீவராசிகளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் .

அழியாது பலனைப் பெறுவதற்காக வேய் நிறைந்த ஹவிஸ்ஸை அளிக்கிறோம் .

மித்திரர் ஆன சூரிய பகவானே !

எவன் நியமத்துடன் உம்மை ஆராதிக்க விரும்புகிறானோ ,அந்த மனிதன் பரி பூரணமான தர்மபலனுடன் கூட்டினான் ஆகட்டும் .

உம்மால் இரட்சிக்கப் பட்டவன் நோய் வயப்பட்டு அழிவுறான் .

இவனைப் பாவம் சமீபத்திலோ தூரத்திலோ துன்புறுத்தாது .

மத்தியான்னம் .

ஆன்ம ஜோதியாலும் கண்காணும் பிரகாசத்தாலும் தேவ உலகினரையும் அவரவர் கருமங்களில் புகுத்திக் கொண்டு சுற்றி

வருபவரான சூரிய தேவன் ,பொன் மயமானதேரில் உலகங்களை நன்கு பார்வையிட்டுக் கொண்டு சஞ்சரிக்கிறார் .

இருளை விழுங்கிக் கொண்டு உதிக்கின்ற உயர்ந்த ஜோதி வடிவானவராயும் ,தேவர்களையும் உள்ள சூரிய தேவனைப் பார்ப்பவர்கள்

ஆன நாம் உத்தமமான ஆன்ம ஜோதியையே அடைந்தவர்கள் ஆவோம் .

அந்தப் பிரசித்தமான அனைத்தையும் அறிகின்ற தேவனான சூரியனை கிரணங்கள் ஆகிய குதிரைகள் உலகோரின் தரிசனத்திற்காக

உயரத் தாங்கிச்செல்கின்றன .

மிதிரனுக்கும் வருணனுக்கும் அக்னிக்கும் கண் போன்றவரும் , விசித்திரமான சர்வ தேவ ஸ்வரூபியும் ஆகிய சூரியன்

உயரசெல்கிறார் .

அசையும் பொருள்களுக்கும் அசையாப் பொருள்களுக்கும் ஆத்மாவாகிய சூரியன் தேவ லோகம் ,பூலோகம் அந்தரிக்ஷம் அனைத்தையும் வியாபிக்கிறார் .

கிழக்கில் பரிசுத்தமாய் உதித்து தேவர்களுக்கு நமை செய்வதும் கண் போன்றதும் ஆன அந்த சூரிய மண்டலத்தை நூறாண்டு காலம் கண்டு வணைங்குவோம் .

அங்ஙனம் நூறாண்டு வாழ்வோம் .

நூறாண்டு உற்றார் உறவினருடன் கூடிக் குலவுவோம் .
நூறாண்டு மகிழ்வோம் .
நூறாண்டு கீர்த்தியுடன் விளங்குவோம் .
நூறாண்டு இனியதே கேட்போம் .

நூறாண்டு இனியதே பேசுவோம் .
நூறாண்டும் தீமைகளால் ஜெயிக்கப்படாமல் வாழ்வோம் .
இங்ஙனம் நீண்ட காலம் சூரிய தேவனைப் பார்த்து அனுபவிக்க ஆசைபடுகின்றோம் .

விரும்பிய பலனை அளிப்பவரும் சிவந்த கண்களை உடையரும் ஆன எல்லாம் அறிந்தவருமான எவர் எத்திக்கிலும் பபிரகாசிப்பவராய் பெரிய ஜல சமுத்திரத்தில் மத்தியில் இருந்து காலையில் உதித்தாரோ அந்த சூரிய தேவன் என்னை முழு மனதுடன் புனிதாக்கி அருள்வாராக .

மாலையில்

வருண தேவரே!

எங்களுடைய இந்த வேண்டுகோளைக் கேட்டுருள்வீராக ,

இப்போழுதே இன்பமுறச்செய்வீர் .

ரக்ஷை வேண்டி உம்மைப் பிரார்த்திக்கின்றேன் .

வேத மந்திரத்தால் ஸ்தோத்திரம் செய்து கொண்டு அதற்காகவே உம்மைச் சரண் அடைகிறேன் .

யாகம் செய்பவன் ஹவிஸ் திரவியங்களைக் கொண்டு அதையே கோருகிறான்.

புகழ் மிக்க வான தேவரே !

அநாதரவு செய்யாமல் இப்பொழுது என் பிரார்த்தனையை அங்கீகரிக்க வேண்டும் .

எமது ஆயுளைக் குறைத்து விடாதீர் .

வருண தேவரே !

விவேகமற்ற மனிதரைப் போல் உம்முடைய ஆராதனையை தினந் தோறும் அனுஷ்டிக்காமல் அஜாக்கிரதையால் எதை விடுததோமோ ,

வருண தேவரே !

தேவதைகளின் சமுகத்திற்கு மனிதர்களாகிய நாங்கள் அறியாமையால் இவ்விதமான வஞ்சனை எது எது செய்துள்ளோமோ <

உம்முடைய தருமத்தில் எதைக் கெடுத்தோம்,

வருண தேவரே !

அந்தப் பாவத்திற்காக எங்களை இம்சியாது காத்து அருள வேண்டும்
.

.

சூதாடிகளைப் போன்றோர் ,நல்லோர் நாடாத இடத்தில் எந்தப் பழியை அநியாயமாக என் மீது சுமத்தினார்களோ ,

அல்லது அந்தப் பாவம் உண்மையில் அறிந்து செய்யப் பட்டதோ ,மேலும் எதைச் செய்தும் அறியவில்லையோ ,

அவையனைத்தும் சிதறிப் போகுமாறு நாசம் செய்யும் .

வருண தேவரே !

பின்னர் உமக்குப் பிரியமானவர்களாக நாங்கள் எப்போதும் இருக்க வேண்டும் .

சமஷ்டிய அபிவாதனம் ..

சந்த்யா தேவிக்கு நமஸ்காரம் .

சாவித்ரி தேவிக்கு நமஸ்காரம்.

காயத்ரி தேவிக்கு நமஸ்காரம் .

சரஸ்வதி தேவிக்கு நமஸ்காரம் .

எல்லா தேவதைகளுக்கும் மீண்டும் மீண்டும் நமஸ்காரம் ..

காமம் செய்தது , கோபம் செய்தது -நான் செய்த பாவம் எதுவும் வேண்டுமென்று மனமோப்பிச் செய்ததன்று .

காமம் குரோத வசத்தால் அறியாமையில் நிகழ்ந்து விட்டதால் ,

தேவர்களே !

பொறுத்து அருள வேண்டும்
.
தேவர்களே உங்களைப் பன் முறை வணங்குகிறேன்.

அபிவாதனம் .

யம மந்திரம் .

யமனுக்கு நமஸ்காரம் .

அனைத்தையும் அடக்கி ஆள்பவனாகவும் ,தருமா தேவதையாகவும் ,அழிப்பவனாகவும் ,முடிப்பவனாகவும் ,

விவச்வானுடைய மகனும் ,கால ஸ்வரூபியாகவும் ,எல்லாப் பிராணிகளையும் ஒழிப்பவனாயும்,

மிக்க பலசாலியும் தத்னன் என்ற பெயருடவனும் கரிய மேனி உடையவனும் எல்லோராலாரும் பூஜிக்கப்

பட்டவனாகவும் பேரு வயிறு படைத்தவனாயினும் ,விசித்ரமானவனும் ,விசித்ரமாகத் தன் ரகசியங்களைக் காப்பவனும் ,

உள்ள தர்ம ராஜனுக்கு எனது நமஸ்காரம் .

மீண்டும் சித்ரகுப்தனுக்கு நமஸ்காரம் .

ஹரிஹர வந்தனம் .

காணும் பொருள்களில் அழகாயும் ,காட்சிக்கு ஆதாரமாயும் ,உள்ள பரப் பிரம்மத்தை ,உடல் தோறும் உறைபவனைக் கருமேனித்

திருமாலும் செம்மேனிச் சிவனும் ஒன்றாய் இணைந்த வடிவை ,வீரியத்தின் மேல் நோக்கு உடையவனை ,முக்கண்ணனை ,

எல்லாம் தன வடிவாய்க் கொண்டவனக்குப் பன்முறை நமஸ்காரங்கள் .

சூரியநாராயண வந்தனம் .

உலகத்திற்கெல்லாம் ஒரு கண்ணாக விளங்குபவரும் ,உலகின் சிருஷ்டி ,ஸ்திதி சம்ஹார காரணரும் ,வேதஸ்வரூபியும் ,

முக்குணத்தால் மூன்று வடிவம் தாங்கி ,பிரம்மா , விஷ்ணு , சங்கரன் என்ற மூர்த்திகளில் விளன்குபரும் ஆகிய சூரிய தேவனுக்கு

நமஸ்காரம் .

சூரிய மண்டல மத்தியில் உறைபவரும் ,பத்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும் ,தோல் வளையும் ,காதில் மகர குனடலமும் ,

சிரஸில் கிரீடமும் ,மார்பில் முத்துமாலை அணிந்தவரும் ,சங்கும் சக்கரமும் ஏந்தியவரும் பொன்போல் ஒளிரும் திருமேனி

உடையவருமான நாராயணர் எப்போதும் த்யானத்திற்கு உரியவர் .

சங்கு சக்கரம் கதை இவைகளைக் கையில் ஏந்தியவரே !

த்வாரகையில் நித்ய வாசம் புரிபவரே !

அடியவரை நழுவவிடாதிருப்பவரே !

உலக ரக்ஷகரே !

தாமரை போற கண்களை உடையவரே !

சரணடைந்த என்னைக் காத்தருளும் .

ஆகாயத்திலிருந்து விழுந்த நீர் சமுத்திரத்தை நோக்கி எவ்வாறு சென்று அடைகிறதோ , அவ்வாறே எல்லா தேவர்களுக்கும்

செய்யும் நமஸ்காரம் கேசவனையே நாடி அடைகிறது .

அபிவாதயே ..

சமர்ப்பணம் .

சரீரத்தாலோ ,வாக்காலோ மனதாலோ கர்ம இந்திரியங்கள் ஆலோ ஞான இந்த்ரியங்கலாலோ ,இயற்கையின் இயக்க்கத்தாலோ

எது எதைச் செய்கிறேனோ அது எல்லாவற்றையும் பரம் புருஷனாகிய நாராயணுக்கு சமர்ப்பிக்கிறேன் .

ஓம் தத் சத் .

சந்த்யா வந்தனம் நிறைவுற்றது .

தவறுகளுக்கு மன்னிக்க்கவும்.

பிழைகளைச் சுட்டிக் காட்டவும் .

http://ramanisblog.in/2014/04/01/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/

 

Comments

2 responses to “சந்தியா வந்தனம்உத்தர பாகம் நிறைவு அர்த்தம்”

  1. Seetharaman J Avatar
    Seetharaman J

    அருமையான, தெளிவான, பயனுள்ள, இன்றைய தேவைக்குஹந்த ஒன்று.

    1. ramanan50 Avatar

      நன்றி.

Leave a Reply

More posts

Discover more from Ramanisblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading