Tag: தமிழ்

  • கண்ணதாசன் ,கெளரவம் ,தங்கப்பதக்கம் பாடல்கள்

    Kannadasan ,Tamil Poet
    Kannadasan

    கண்ணதாசனை ,அவரது உறவினர் ஒருவருடன் அவரது ஹென்ஸ்மன் ரோடு இல்லத்தில் (இப்போது அது கண்ணதாசன்  சாலை ) சந்தித்தேன் .

    பேச்சு பாடல்களைப் பற்றித் திரும்பியது .
    ‘இலக்கணத்திற்கு அடங்காத பாட்டை எழுதி ,கருத்தைத் தெளிவாகக் கூறுவதில் நீர் நீர்தான் ‘ என்றேன் .
    ‘அப்படியா ,சொல்லுங்க தம்பி’  என்றார்.
    கெளரவம் படத்தில் ‘நீயும் நானுமா ,கண்ணா , நீயும் நானுமா பாட்டில் அறிவைக் கொடுத்ததோர் துரோணரின் கெளரவம் அவர்மேல் தொடுத்ததேன் அர்ஜுனன் கெளரவம் வரி இலக்கணத்தில் அடங்காது,ஓரளவு உருவகம் என்று சொல்ல வேண்டியதுதான் ஆனால் படத்தின் கதை இந்த  இரண்டு வரிகளில் ‘
    ‘வேறே ‘
    தங்கப்பதக்கதில் சோதனை மேல் சோதனை பாடலில் ,சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது என்று எழுதியிருக்கிறீர்கள் .
    இந்த இரண்டு வார்த்தைகளும் சம்ஸ்க்ருதம் ,இதன் பொருள் சம்ஸ்க்ருதம்படித்தவர்களுக்கே    தெரியுமா என்பதே சந்தேகம் .
    சொந்தத்தை நாம் தேர்ந்தெடுக்க முடியாது ,இறைவன் கொடுப்பது ,தாய் ,தந்தை ,உடன் பிறப்புகள் மற்றும் மக்கள் .
    ஆனால் , பந்தம் நாம் தேர்ந்தெடுப்பது ,-மனைவி .
    கால்களிலும் கைகளிலும் விலங்கு பூட்டப்பட்டவன்,முயன்றால் ஒருவேளை கால் விலங்கை அகற்றிக்கொள்ள முடியும் .
    ஆனால்,கை விலங்கை ?
    கண்ணதாசன் சொன்னார் .
    ‘தம்பி ,நாங்க பாட்டு எழுதும்போது இதை எல்லாம் யோசிக்கறதில்லே,நான் பாட்டு தண்ணி அடிச்சுட்டு எழுதறதுதான் .
    நீங்கல்லாம் இந்தமாதிரி அனுபவிச்சு சொல்றீங்களே அது போதும் ‘
    ‘நான் தண்ணியடிச்சா தூக்கம்தான் வருது , படிக்கவே வரலே ‘
    கண்ணதாசன் தொடரும் .
    Related:
  • Know The Seeds of Pumpkin without Breaking, Tamil

     

    I had blogged on the antiquity of the Tamil Language , its rich culture and its scientific approach every thing.

     

    Tamil Land was demarcated into six zones and relevant details were assigned to each of them, which is not found in any other Literature.

     

    Also the Tamil Land was the one that contained all the six divisions of Land.

     

    Tamil’s ancient and authoritative Grammatical Works, Agathiyam, Tolkappiyam mention  advanced mathematics formulae.

     

    One other Sangam period work’ கணக்கதிகாரம்” by Kari Nayanar of  Korkkiyaar abounds in Mathematical Formulae.

     

    One such is the Calculation for finding the number of seeds in a Pumpkin.

     

    “கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி

    வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே

    பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
    பூசணிக்காய் தோறும் புகல்”
    Count the number of Slices visible in the Pumpkin
    Multiply it by 3, 6 and 5.
    Divide the result by 2
    Multiply this result by 3.
    This is the number of seeds per Slice.
    For the number of seeds multiply this by the number of slices visible in the Pumpkin.
    Source .TamilVaralaaru.

    Ack.History of The Tamils by Srinivasa Iyengar.

     

  • சுஜாதாவின் கொலையுதிர் காலம் ,பிரம்மசூத்திரம்,Free Down Load.

    'writer Sujatha, jpg
    Sujatha,Tamil Writer.

    சுஜாதாவின் தமிழ் நடையும் எளிமைப்படுத்தும் திறனும் அனைவரும் அறிந்ததே .

    நண்பர் என்ற முறையில் சந்தித்த போது,நான் பிரம்ம சூத்திரம் தமிழில் எழுதிக்கொண்டிருக்கிறேன் ,படித்து விட்டு உன் அபிப்ராயத்தைச் சொல்லு ,கஷ்டமான சப்ஜெக்ட் ,என் தமிழுக்குள் அடங்குமா என்று தெரியவில்லை ‘ என்றார்.
    நானும் படித்து விட்டு ‘தமிழ் சுஜாதா,அனால் பிரம்மா சூத்திரம் மிஸ்ஸிங் ‘ என்றேன்.
    சிரித்துவிட்டு ‘நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ,சீக்கிரம் முடித்து விடுகிறேன் .நீ மட்டும்  இல்லை ,ஆச்சரர்யர்களும் நீ சொன்னதையே சொல்கிறார்கள் ,அவாள் கிட்டே கேக்க முடியாது ,நீ சொல்லு,என்ன தப்பு ‘
    நான் சொன்னேன் ‘உங்க தப்பு ஒண்ணும் இல்லே ,சப்ஜெக்ட் அப்டி,லஹு தமிழ்லே எழுதினா ,நடை நன்னா  இருக்கும்,அர்த்தம் காலி ‘
    அவர் எங்கே ,நான் எங்கே,?
    அந்த எளிமை ,சுஜாதா, I miss You.

    http://www.mediafire.com/?w93xkvto8y3x88q

     

    http://www.mediafire.com/?eaa4ydu1b61o0n9

  • உன்கண்ணில் நீர்வழிந்தால் -கண்ணதாசன்

    “கண்ணதாசன் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.

    Kannadasan
    Kaviarasar Kannadasan.
    .”நான் பழந்தமிழ் பாடல்களைத் திருடுவதாகப் பலர் கூறுகிறார்கள்..ஆம்,,பழந்தமிழ்ப் பாடல்களை எளிமைப் படுத்தி அளிக்கிறேன்
    என்பதில் எனக்கு வெட்கம் இல்லை ,பெருமைப்படுகிறேன் .”
    நமக்கும் தமிழ் தெரியும் .ஆனால் கவியரசைப் போல் உணர்ந்து நாம் அன்றாடம் பயன் படுத்தும் சொற்களைக் கொண்டு இதயத்தைத் தொடுவதில் கண்ணதாசன், கண்ணதாசன்தான்.
    உன் கண்ணில் நீர் வழிந்தால் ,பாரதியின் பாடலின் முழுவீச்சை   உணர வைத்தவர் கண்ணதாசன்…
    மாறாப் புண்ணிற்கும் காலம்தான் மாற்றும் மருந்து என்பர்.
    காலச் சுமை தாங்கி என்று தொடங்கி ,காலம் முழுதும் கண்ணீரைத் துடைப்பவள் என்கிறார்..
    மார்பில் தாங்கி விழும் கண்ணீரை கீழே விழாமல் துடைப்பவள் -இதை விட கணவன் மனைவியின் ஒருமித்த உணர்வை எப்படி வெளிப்படுத்துவது ?
    “ஆலம் விழுதுகள் “-ஆலம் விழுதுகள் ஓரளவு மரத்தைத் தாங்கினாலும் , அவை மரமாகி மேலும் பல விழுதுகள் விட்டு முன் செல்லும்..
    தாய் மரத்தைத் தாங்கும் திறன் குறையும் .
    அதே போல்தான் மக்களும்..
    அவர்களும் என்ன முயன்றாலும் , அவர்கள் வளர்கையில் அவர்களின் குடும்பத்தைப் பேணும் சுமை வந்து விடுகிறது .
     அவர்களையும் குறை கூற இயலாது.

    இதை நம் கவிஞர் வெளிப்படுத்திய அழகு !
    இறுதில் சொல்கிறார் -‘என் தேவையை  யாரறிவரர்….தெய்வம் ஒன்றே அறியும் ‘
    சாதாரணக் கவிஞர்கள் ,உன்னைப்போல் தெய்வம் ஒன்றே  என்பதற்குப் பதிலாக வேறு வார்த்தையைப் போட்டு இருப்பார்கள் சந்தத்திற்காக!
    கண்ணதாசன்   இந்த வார்த்தையினால் மனைவியை தெய்வத்திற்கும் மேல் ஒரு படி உயர்த்தி விடுகிறார் .
    கடவுள் அருள் பெற்ற்வவரராலேதான் இது முடியும்!உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

    என் கண்ணில் பாவை அன்றோ
    கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

    உன்னை கரம் பிடித்தேன் 
    வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி

    பொண்ணை மணந்ததனால் சபையில்
    சபையில் புகழும் வளர்ந்ததடி

    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

    கால சுமைதாங்கி போலே
    மார்பில் எனை தாங்கி

    வீழும் கண்ணீர் துடைப்பாய்
    அதில் என் விம்மல் தணியுமடி

    ஆல‌ம் விழுதுகள் போல்
    உறவு ஆயிரம் வந்தும் என்ன

    வேர் என நீ இருந்தாய்
    அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

    முள்ளில் படுக்கையிட்டு
    இமையை மூடவிடாதிருக்கும்

    பிள்ளை குலமடியோ 
    என்னை பேதைமை செய்ததடி

    பேருக்கு பிள்ளை உண்டு
    பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு

    பேருக்கு பிள்ளை உண்டு
    பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு

    என் தேவையை யார் அறிவார்
    என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
    தெய்வம் ஒன்றே அறியும்

    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

    என் கண்ணில் பாவை அன்றோ
    கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

    உன் கண்ணில் நீர் வழிந்தால் . . .

  • பிள்ளையார்.

    Lord Ganesh
    அனைவருக்கும்    பரிச்சயமான சுக்லாம்பரதரம் எனத் தொடங்கும் விநாயக ஸ்தோத்திரத்தில் அது விநாயகரைப் பற்றியது என்பதற்கான குறிப்பு எதுவும் இல்லை .
    வெண்ணிற ஆடை அணிந்தவரும் (சுக்லாம்பரதரம் ),உலகத்தைக் காப்பவரும்   (விஷ்ணும்), வெண்மை நிறத்தவரும் (சசி வர்ணம்),நான்கு கரங்களை உடையவரும் (சதுர்புஜம்) ,மலர்ந்த (பிரசன்ன வதனம் ) முகத்தை உடையவரும் ,   அனைத்து  தடைகளையும் (சர்வ விக்ன )நீக்குபவரும் , ஆனவரை  அமைதிப்படுத்தி உள்ளத்தில் இருத்துகிறேன் .
    இதில் எந்த இடத்திலும் அவர் பெயர் குறிப்படவில்லை .
    குணங்களையும்  கடந்து, அனைத்து  தெய்வங்களுக்கும் முதலாய் இருப்பதால் பெயர் குறிப்பிடப்படவில்லை .
    அனைத்து பூஜைகளுக்கும் தொடக்கத்தில் அவர் வழிபடப்படுகிறார் .
    மேலும் எளியருக்கு உகந்த தெய்வம் .
    ஆலயங்கள் கேட்பதில்லை .குளத்தடி,அரச மரத்தடி போதும்.
    எளிய துதிகள் போதும்.
    மஞ்சள் மற்றும் மண்ணால் அவரைப்பிடித்து வழிபடலாம்.பார்வதி அவரை கடல் நுரையாலும் ,சிவன்  மஞ்சளினாலும் வழிபட்டுள்ளனர் .
    உபநிஷத்தில் உயர்ந்தது Ganopanisad.தமிழில் உயர்ந்த ஞான நூல் அவ்வை அருளிய விநாயகர் அகவல் ,அனைத்து தத்துவங்களும் யோகமும் கூறப்பட்டுள்ளது .
    வெள்  எருக்கினால் செய்த விநாயகரை பூசித்தல் மிகவும் சிறந்தது.
    மேலும் இந்துமதம் மற்றும் இந்து தத்துவங்களைப் பற்றி அறியவேண்டுமெனில் இந்ததளத்தில் வினாக்கள் தொடுக்கலாம் .இயன்றவரை ஆதார பூர்வமான விடை அளிக்க முயல்கிறேன்
    AfrikaansAlbanianArabicBelarusianBulgarianCatalanChineseCroatianCzechDanishDetect languageDutchEnglishEstonianFilipinoFinnishFrenchGalicianGermanGreekHaitian Creole ALPHAHebrewHindiHungarianIcelandicIndonesianIrishItalianJapaneseKoreanLatvianLithuanianMacedonianMalayMalteseNorwegianPersianPolishPortugueseRomanianRussianSerbianSlovakSlovenianSpanishSwahiliSwedishThaiTurkishUkrainianVietnameseWelshYiddishAfrikaansAlbanianArabicBelarusianBulgarianCatalanChineseCroatianCzechDanishDutchEnglishEstonianFilipinoFinnishFrenchGalicianGermanGreekHaitian Creole ALPHAHebrewHindiHungarianIcelandicIndonesianIrishItalianJapaneseKoreanLatvianLithuanianMacedonianMalayMalteseNorwegianPersianPolishPortugueseRomanianRussianSerbianSlovakSlovenianSpanishSwahiliSwedishThaiTurkishUkrainianVietnameseWelshYiddish

    Detect language » Hungarian