பாவநோபநிஷத் பொருள் பொழிப்புரை பகுதி 1
ஒன்பது சக்ரங்களைக் கொண்ட இதுவே ஸ்ரீ சக்ரத்தின் வடிவாகும்.
4.
வாராஹி பித்ருரூபா குருகுல்லா பலிதேவதா மாதா –4
தாதுக்களுக்கு அதிதேவதையான வாராஹி , தந்தையின் வடிவம் ;
மாமிசத்திற்கு அதிதேவதையான வாராஹி எனப்படும் குருகுல்லா தேவி ,
அன்னையின் வடிவம்.
5.
புருஷார்த்தா; சாகரா :-5
அறம், பொருள் , இன்பம் மற்றும் வீடு எனப்படும் புருஷார்த்தங்கள் ,
நாற்புறமும் சூழ்ந்துள்ள கடல்கள் .
6.
தேஹோ நவரத்ன த்வீப :-6
உடலே நவரத்னத் தீவு .
7.
த்வகாதி சப்ததாது –ரோம சம்யுக்த :-7

You must be logged in to post a comment.