Tag: இந்து மதம்

  • புருஷ சூக்தம் அர்த்தம் பொழிப்புரை

    புருஷன் ,இறைவன் ஆயிரக்கணக்கான தலைகள் உடையவர் .

    ஆயிரக்கணக்கான கண்களை உடையவர் .

    Purusha Sooktham, Virata Purusha
    Viraata Purusha ,Purusha Suktham

    Image credit. http://karmakandi.com/Images/VishwaRoop.jpg

    ஆயிரக்கணக்கான பாதங்களை உடையவர் .அவர் பூமியை வியாபித்து 10 அங்குல அளவில் நிற்கிறார் .1

    முன்பு எது இருந்ததோ ,எது இனி வரப் போகிறதோ ,இப்பொழுது எது காணப்படுகிறதோ ,எல்லாம் இறைவனே .

    மரணமிலாப் பேரு நிலைக்குத் தலைவராக இருப்பவரும் அவரே.

    ஏனெனில் , அவர் இந்த ஜட உலகைக் கடந்தவர் . 2

    இங்கு காணப்படுவதெல்லாம் இறைவனின் மகிமையே .

    ஆனால் ,அந்த இறைவன் ,இவற்றை விடச் சிறப்பு மிக்கவர் .

    தோன்றியவை எல்லாம் அவருடைய கால் பங்கு மட்டுமே .

    அவரது முக்கல் பங்கு விண்ணில் இருக்கிறது . 3

    பரம்பொருளின் முக்கல் பங்கு விண்ணில் விளங்குகிறது ,

    எஞ்சிய கால் பண்குமீண்டும் இந்தப் பிரபஞ்சமாகத் தோன்றியது .

    பிறகு , அவர் உயிர்கள் மற்றும் ஜடப் பொருள்களில் எல்லாம் ஊடுருவிப் பார்த்தார். 4

    அந்த ஆதி புருஷனிடமிருந்து பிரம்மாண்டம் தோன்றியது .

    ப்ரம்மாண்டைத் தொடர்ந்து பிரம்ம உண்டாகி எங்கும் வியாபித்தார் .

    பிறகு அவர் பூமியைப் படைத்தார் .

    அதன் பிறகு , உயிர்களுக்கு உடலைப் படைத்தார் . 5

    முதற்பபடைப்பில் படைக்கப்பட்ட தாங்கள் வேள்வி செய்வதற்கான் போருல்கலில்லை என்பதைக் கண்டனர்.

    எனவே ,இறைவனை ஆகுதியாகக் கொண்டு மனத்தளவில் வேள்வி செய்தனர் .

    இயற்கையின் அம்சங்களான காலம் போன்றவற்றைப் பயன் படுத்தினர் . 6

    இந்த வேள்விக்கு பஞ்ச பூதங்கள் ,இரவு ,பகல் ஆகியவை பரிதிகள் ஆயின .

    இருபத்தொரு தத்துவங்கள் விறகுகள் ஆயின .

    தேவர்கள் யாகத்தை ஆரம்பித்து பிரம்மாவை ஹோமப் பசுவாய்க் கட்டினார்கள் 7

    முதலில் உண்டான அந்த யஜ்ன புருஷனான பிரம்மாவின் மீது தண்ணீர் தெளித்தார்கள் .

    அதன் பிறகு சாத்த்யகளும் தேவர்களும் ரிஷிகளும் இன்னும் யார் யார் உண்டோ அவர்களும் யாகத்தைச் செய்தார்கள்.9

    பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்தில் இருந்து தயிர் கலந்த நெய் உண்டாயிற்று .

    பறவைகளையும் மான் புலி போன்ற காடு விலங்குகளையும் ,பசு போன்ற வீடு மிருகங்களையும் பிரம்ம படைத்தார் 9

    பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யகத்தில் இருந்து ரிக் ,சாம வேத மந்திரங்களும் ,காயத்ரீ சந்தங்களும் உண்டாயின .

    அதிலிருந்தே யஜுர் வேதம் உண்டாயிற்று . 10

    அதிலிருந்தே குதிரைகள் தோன்றின .

    இருவரிசைப் பற்கள் உடைய மிருகங்களும் ,பசுகாளும்வேள்ளடுகளும் ,செம்மறியாடுகளும் தோன்றின . 11

    பிரம்மாவை தேவைகள் பலியிட்டபோது அவரை எந்தெந்த வடிவம் ஆக்கினார்கள்?

    அவர் முகம் எதுவாயிற்று ?

    கைகால்களாக எது சொல்லப்படுகிறது ?

    தொடைகளாக ,பாதங்களாக எது கூறப்படுகிறது ? 12

    அவரது முகம் பிராம்மணன் ஆயிற்று .

    கைகள் சத்ரியன் ஆயிற்று .

    தொடைகள் வைசியன் ஆயிற்று .

    அவரது பாதங்களில் இருந்து சூத்திரன் தோன்றினான் . 13.

    மனதிலிருந்து சந்திரன் தோன்றினான் .

    கண்ணில் இருந்து சூரியனும் ,முகத்தில் இருந்து இந்திரனும் அக்னியும் தோன்றினர் .

    பிராணன் வாயுவைத் தோற்றுவித்தது . 14.

    தொப்புளில் இருந்து வானவெளி தோன்றிற்று .

    தலையில் இருந்து சொர்க்கம் தோன்றியது .பாதங்களில் இருந்து பூமியும் ,காதில் இருந்து திசைகளும் தோன்றின .

    அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன . 15.

    எல்லா உருவங்களையும் தோற்றுவித்து ,பெயர்கையும் அமைத்து ,எந்த இறைவன் செயல் பட்டுக் கொண்டிருக்கிறாரோ ,

    மகிமை பொருந்தியவரும் ,சூரியனைப் போல் ஒளிர்பவரும் ,இருளுக்கு அப்பாற்பட்டவரும் ஆன அந்த இறைவனை நான்

    அறிவேன் . 16

    எந்த இறைவனை பிரம்மா ஆதியில் என்று கண்டு கூறினாரோ ,இந்திரன் நான்கு நான்கு திசைகளிலும் நன்றாகக் கண்டானோ ,

    அவரை நான் இவ்வாறு அறிவபன்,

    இங்கேயே, அதாவது இந்தப் பிறவியிலே முக்தனாகிறான் .

    மோட்சத்திற்கு வேறு வழி இல்லை . 18

    தேவர்கள் இந்த வேள்வியினால் இறைவனை வழி பட்டார்கள் .

    அவை முதன்மையான தர்மகள் ஆயின .

    எங்கே ஆரம்பத்தில் வேள்வியால் இறைவனை வழி பட்ட சாத்யர்களும் தேவர்களும் இருக்கிறார்களோ தர்மங்களைக் கடைப்

    பிடிக்கின்ற மகான்கள் அந்த மேலான உலகை அடைவார்கள் . 18

    தண்ணீரிலிருந்தும் சாரமான அம்சத்தில் இருந்தும் பிரபஞ்சம் உண்டாயிற்று .

    பிரபஞ்சத்தை உருவாக்கிய இறைவனிடம் இருந்து சிறந்தவரான பிரம்ம தோன்றினார் .

    இறைவன் அந்த பிரம்மாவின் (பதிநானு உலகும் நிறைந்த)உருவை உண்டாக்கி அதில் வியாபித்து இருக்கிறார் .

    பிரம்மாவின் இந்தப் பிரபஞ்ச வடிவம் படைப்பின் தொடக்கத்தில் உண்டாயிற்று . 19

    மகிமை பொருந்தியவரும் ,சூரியனைப் போல் ஒளிர்பவரும் ,இருளுக்கு அப்பால் இருப்பவரும் ஆகிய அந்த இறைவனை நான்

    அறிவேன் .

    அவரை இவ்வாறு அறிபவன் இங்கேயே இந்தப் பிறவியில் முக்தனாகிறான் .

    முக்திக்கு வேறு வழி இல்லை . 20

    இறைவன் பிரபஞ்சத்தில் செயல் படுகிறார் .

    பிறக்காதவர் ஆயினும் ,அவர் பல்வேறு வடிவங்களில் தோன்றுகிறார்.

    அவரது உண்மையான வடிவத்தை மகான்கள் நாக்கு அறிகிறார்கள் .

    பிரம்மா போன்றோர் கூட மரீசி போன்ற மகன்களின் பதவியை விரும்புகிறார்கள் . 21.

    யார் தேவர்களிடம் தேஜஸ் ஆக விளங்குகிராரோ ,ஹெவர்களின் குருவாக இருக்கிறாரோ ,தேவர்களுக்கு முன்பே

    தோன்றியவரோ , அந்த ஒளி மயமான பரம்போருக்கு நமஸ்காரம் . 22.

    பரம்பொருளைப் பற்றிய உண்மையை அளிக்கும்போது தேவர்கள் ஆதியில் அடாஹிப் பற்றி பின் வருமாறு கூறினார்கள் .

    “யாராக இருந்தாலும் , பரம்பொருளை நாடுபவன் , இவ்வாறு அறிவான் ஆனால் , அவனுக்கு தேவர்கள் வசமாக இருப்பார்கள்

    – 23

    நாணத்தின் தலைவி ஆகிய ஹ்ரீ தேவியும் ,செல்வத்திற்குத் தலைவி ஆகிய லக்ஷ்மி தேவியும் உமது மனைவியர் .

    பகலும் இரவும் உமது பக்கங்கள் ,நட்சத்திரங்கள் உமது திரு உருவம் .

    அஸ்வினி தேவர்கள் உமது மலர்ந்த திரு வாய் . 24.

    பரம் பொருளே !

    நாங்கள் விரும்புவதைக் கொடுத்து அருள்வாய் .

    இவ்வுலக இன்பத்தைக் கொடுத்து அருள்வாய் ,

    இகத்திலும் , பரத்திலும் அனைத்தையும் தந்தருள்வாய் .

    ஓம் தத் சத் !

    புருஷ சூக்தம் நிறைந்தது

  • சந்தியா வந்தனம் மந்திரம் அர்த்தம் பூர்வ பாகம் ஐயர் ஐயங்கார்

     

    முதல் பகுதி

    Sandta vanadanam Duty of Hindus
    Sandya vandanam
    Image credit:http://ramanisblog.in/wp-content/uploads/2014/04/sandhyavandanam_1.jpg

     

    அச்சுதனுக்கு நமஸ்காரம் ,

     

    அனந்தனுக்கு நமஸ்காரம் ,

     

    கோவிந்தனுக்கு நமஸ்காரம்

    .

    கேசவ ,நாராயணா ,மாதவா ,கோவிந்தா ,விஷ்ணோ ,மதுசூதனா ,திரிவிக்ரமா ,வாமனா, ஸ்ரீதரா,ஹ்ரிஷிகேசா பத்மநாபா ,தாமோதரா,

     

    உன்னைப் பன்னிரு திரு நாமங்களால் போற்றி என் இந்திரியங்கள் அனைத்திற்கும் ரக்ஷை இடுகின்றேன் .

     

    எங்கும் நிறைந்தவரும் எனினும் பக்தருக்கு உகந்த வடிவம் எடுப்பவரும்,வெண்மையான ஆடை உடுத்தவரும் ,நிலவு போன்ற  ஒளி உள்ளவரும் ,நான்கு கைகள் உள்ளவரும் ,ஆனந்தம் பொங்கும் முகமண்டலத்தை உடையவரும் ஆகிய கணபதியை ,எல்லா இடையூறுகளும் விலகுவதற்காக த்யானம் செய்ய வேண்டும்.

     

    மூச்சின் ஆட்சி .

     

    ஓங்காரமே பூலோகம் ,
    ஓங்காரமே புவ லோகம் ,
    ஓங்காரமே ஸுவர் லோகம் ,
    ஓங்காரமே மகர் லோகம் ,
    ஓங்காரமே ஜன லோகம் ,
    ஓங்காரமே தபோ லோகம் ,
    ஓங்காரமே சத்திய லோகம் ,

     

    ஓங்காரப் எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ ,அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதி ஸ்வரூபத்தை தியானிப்போம் .
    ஓங்காரமே ஜலமும் ஒளியும் ,
    ஓங்காரமே ரசம் பொருந்திய அன்னத்தை அளிக்கும் பூமியும் ,
    அதுவே உயிருக்கு ஆதாரமான வாயுவும் ,
    எங்கும் பரந்த ஆகாசமும் ,
    பூ:புவ:சுவ: என்ற வ்யாஹ்ரிதிகள் குறிப்பிடும் மனம் ,புத்தி அகங்காரம் என்ற தத்துவங்களும் ஓங்காரமே.

     

    தெளிந்த தீர்மானம் .

     

    என்னால் அடையப்பட்ட எல்லாப் பாவங்களையும் நசிக்கச் செய்வதின் மூலம் , பகவானின் அருளுக்குப் பாத்திரமாகும் பொருட்டு ,காலையில் ,நடுப்பகலில் ,மாலையில் சந்தியா தேவியை உபாசிக்க ஆரம்பிக்கிறேன்

     

    மார்ஜனம் .

    ஓம் ,

     

    கேசவனுக்கு நமஸ்காரம் ,
    ஜல தேவதைகாளகிய நீங்கள் உயர்ந்த சுகத்திற்கு காரணமாக இருக்கிறீர்கள் என்பது பிரசித்தம் .
    அப்படிப் பட்ட நீங்கள் எண்களுக்கு மகிமை பொருந்தியதும் ,ராமநீயமானதும் ஆன ஞான திருஷ்டியின் பொருட்டுப் போஷணையை அளியுங்கள் .

     

    உங்களிடம் எந்தப் பரம மங்கலமான பேரின்ப ரசம் உள்ளதோ ,அதற்கு இங்கேயே எங்களை ,நீங்கள் அன்பு சுரக்கும் அன்னையைப் போல் உரியவர்களாக்குங்கள்.
    எந்த ரசத்தை நிலையாக வழங்கும் பொருட்டு நீங்கள் இன்ப வடிவாய் விளங்குகரீர்களோ அந்த ரசத்தை அடையும் பொருட்டு உங்களை மிகவும் ஆர்வமுடன் நாடுகின்றோம் .
    ஜல தேவதைகள் ஆகிய நீங்கள் எங்களை ஞானத்தால் புனிதமான புனர் ஜன்மம் அடைந்து விளங்கும் படியும் அருள்வீர்கள் ஆக .

     

    ப்ராசனம் -மந்திரத்தால் ஜபிக்கப் பட்ட தீர்த்தம் உட்கொள்ளுதல் .

     

    காலையில் .
    அனைத்தையும் இயக்கம் சூரியனும் அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும் கோபத்தை ஆளும் தெய்வ சக்திகளும் ,கோபத்தால் செய்யப்பட்ட பாவங்களில் இருந்து என்னைக் காப்பற்றட்டும் .
    இரவில் மனத்தினாலும் வாக்காலும் கைகளாலும் கால்களாலும் வயிற்றாலும் ஆண் குறியாலும் எந்தப் பாவத்தை செய்தேனோ

    ,இன்னும் என்னிடத்தில் வேறு என்ன பாவம் உண்டோ அதையும் இரவின் அதி தேவதை நீக்கி அருள வேண்டும் .
    இங்ஙனம் பாவம் நீங்கிய என்னை நான் மோக்ஷதிற்க்கு காரணமாகிய சூரிய வடிவமான பரஞ்சோதியில் ஹோமம் செய்கின்றேன் .
    இந்த ஹோம்மம் நன்கு அனுஷ்டிக்கப்படவேண்டும் .

     

     
    நடுப்பகலில் .
    ஜல தேவதை தனுக்கு உறைவிடமாகிய பூமியை புனிதமாக்கட்டும் .
    அங்கனம் புனிதமாக்கப்பட்ட பூமி என்னைப் புனிதம் ஆக்கட்டும் .
    அது வேதத்திற்கு உறைவிடமான ஆசாரியனையும் புனிதம் ஆக்கட்டும் .

     
    என்றும் புனிதமாய் உள்ள வேதம் என்னைப் புனிதம் ஆக்கட்டும் .
    பிறர் உண்ட மிச்சமும் ,புசிக்கத் தகாததும் புசிக்கப் பட்டதாலும் ,துர் நடத்தையாலும் ,கெட்டவர்களிடம் இருந்து தானம் வாங்கியதாலும் உதித்த பாவங்கள் எல்லாவற்றிலும் இருந்தும் என்னை ஜல தேவதை புனிதம் ஆக்கட்டும் .

     
    என்று வேண்டி ,
    என்னைப் பரமாத்மா சொத்தில் ஹோமம் செய்கின்றேன்.

     

     

    சாயங்காலத்தில் .
    அக்கினியும் ,அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும் ,கோபத்தை ஆளும் தெய்வ சக்திகளும் , கோபத்தால் செய்யப்பட்ட பாவங்களில் இருந்து என்னைக் காப்பாற்றட்டும் .

     

    பகலில் ,மனத்தாலும் வாக்காலும் கைகளாலும் கால்களாலும் வயிற்றாலும் ஆண் குறியாலும் எந்தப் பாவத்தை செய்தேனோ ,என்னிடத்தில் வேறு என்ன பாவம் உண்டோ , அதையும் பகலின் அதி தேவதை நீக்கி அருள வேண்டும் .
    இங்ஙனம் பாவம் நீங்கிய என்னை ,நான் மோக்ஷதிற்க்கு காரனமாகியதும் ,முக்காலத்தும் சத்தியமாய் விளங்கும் பரஞ்சோதியில் ஹோமம் செய்கின்றேன் .
    இந்த ஹோமம் நன்கு அனுஷ்டிக்கப் பட்டதாக வேண்டும் .

     

    புனர் மார்ஜனம் -மீண்டும் ப்ரோக்ஷனத்தால் மந்திர ஸ்நானம் .
    அனைத்து உலகையும் தாங்குபவனும் ,ஆள்பவனும் அளப்பவனும் ஜெயசீலனும் சகல வித்தைகளுக்கும் ஆதாரமான ஹயக்ரீவ வடிவம் எடுத்தவனும் வேகவானுமாகிய பரம புருஷனுக்கு வந்தனம் செய்கின்றேன் .
    நம்முடய முகத்தையும் மற்ற இந்திரியங்களையும் அவர் நன் மணம் உடவியவை ஆக ஆக்க வேண்டும் .
    நம்முடைய ஆயுளை இடையூறு இல்லாமற் காக்க வேண்டும்,
    ஜல தேவதைகள் நம்மை ஞானத்தால் புனிதமான புனர் ஜன்மம் அடைந்து விளங்கும் படி அருள் புரிய வேண்டும் .
    அர்க்யம் கொடுத்தல் .
    ஓங்காரப் பொருளான பகவானே பூ லோகமும் புவர் லோகமும் ஸுவர் லோகமும் .
    எந்தப் பரமாத்மா புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ , அந்த அனைத்தையும் படைக்கிறவர் ஆன பகவானுடைய சிறந்த ஜோதி ஸ்வருபத்தை த்யானிப்போம் .

     

    ப்ராயசித்தார்க்யம் -காலந் தவறிய குறை நீங்க மீண்டுமொரு அர்க்யம் .

     
    ஒரு முறை செய்யவும் .
    ஐக்யானுசந்தானம் .
    இந்த சூரியன் பிரம்மம் ,நானும் பிரம்மமாகவே இருக்கிறேன் .

     

    தேவ தர்ப்பணம் .

    சூரியனை ,சந்திரனை ,செவ்வாயை ,புதனை ,குருவை .சுக்கிரனை ,மெதுவாய்ச் செல்லும் சனியை ராகுவை ,கேதுவை – கால ரூபிகளான நவக்ரக தேவதைகள் எல்லோரையும் திருப்தி செய்விக்கின்றேன் .

     

    கேசவனை ,நாராயணனை ,மாதவனை ,கோவிந்தனை ,விஷ்ணுவை ,மதுசூதனை ,த்ரிவிக்ரமனை ,வாமனனை ,ஸ்ரீதரனை ,ஹ்ரிஷிகேசனை ,பத்மநாபனை ,தாமோதரனை , பானிரு திரு நாமங்களால் வரிசையாக மார்கழி முதல் கார்த்திகை வரை உள்ள பன்னிரெண்டு மாதங்களுக்கும் அதி தேவதையாகவும் கால ரூபியாகவும் விளங்கும் நாராயணனை திருப்தி செய்கின்றேன் .

     

    ஆசமனம் .

     

    பூர்வ பாகம் நிறைவடைந்தது .

     

    Ref.Anna Subramania Iyer..

     

    Text down load.http://www.tamilbrahmins.com/share-your-knowledge/4703-yajur-veda-sandhyavandanam-procedure.html

     

    Audio down load for Vaishnava Sampradayam.

    http://anudinam.org/2012/03/08/sandhyavandanam-audio-and-notes/

    Enhanced by Zemanta
  • அத்வைத விளக்கம் ,காஞ்சி பெரியவா.

    ஸ்வாமி நாமா? இல்லை என்றால்….?

    ஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான் என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்கள்.

    Kanchi Periyavar _album2_76.jpg
    Sage of Kanchi.

    அதாவது நாமேதான் ஸ்வாமி என்கிறார். “நான்தான் ஸ்வாமி” என்றுதான் ஹிரண்யகசிபு சொன்னபோது தன்னைத் தவிர வேறு ஸ்வாமியே கிடையாது என்ற அகங்காரத்தில் சொன்னான். பகவத் பாதர்களோ ஸ்வாமியைத் தவிர வேறு எதுவுமே கிடையாது என்பதால் நாமும் ஸ்வாமிதான் என்கிறார். ஜீவன் தனக்கு உள்ள அகங்காரத்தை அடியோடு விட்டு விட்டால் இவனே பிரம்மத்தில் கரைந்து பிரம்மமாகி விடுகிறான் என்கிறார். இப்போது நாம் உத்தரணி ஜலத்தைப்போல் கொஞ்சம் சக்தியுடன் இருக்கிறோம். ஸ்வாமி அகண்ட சக்தியுடன் சமுத்திரமாக இருக்கிறார். அந்தச் சமுத்திரத்திலிருந்துதான் இந்த உத்தரணி ஜலம் வந்தது. இந்த உத்தரணி ஜலம், தான் தனி என்கிற அகங்காரத்தைக் கரைத்து சமுத்திரத்தில் கலந்து சமுத்திரமே ஆகிவிட வேண்டும்.

    நாம் ஸ்வாமியாக இல்லாவிட்டால், ஸ்வாமியைத் தவிர வேறான ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறெனில் பரமாத்மாவுக்கு வேறான வஸ்துக்களுக்கு உண்டு என்றாகிவிடும். அதாவது, பல வஸ்துக்களில் பரமாத்மாவும் ஒன்று என்றாகி விடும். அவருடைய சம்பந்தமில்லாமல் அந்தப் பல வஸ்துக்கள் உண்டாகி இருக்கின்றன என்றாகும். இப்படி இருப்பின் அவர் பரமாத்மா, ஸ்வாமி என்பதே பொருந்தாதே எல்லாமாக ஆன ஒரே சக்தியாக இருக்கிற மட்டும்தானே அவர் ஸ்வாமி எல்லாம் அவர் என்னும்போது நாம் மட்டும் வேறாக இருக்க முடியுமா? எனவே, ‘ஸ்வாமியே நாம்’ என்று வெளிப்பார்வைக்கு அகங்காரமாகப் பேசுகிற அத்வைதிகள், ஸ்வாமியின் மகிமையைக் குறைக்கவில்லை. மாறாக, ‘ஜீவன் ஸ்வாமி அல்ல: இவன் அல்பன், அவர் மகா பெரிய வஸ்து: இவன் வேறு: அவர் வேறு’ என்று அடக்கமாகச் சொல்கிறவர்கள்தான், தாங்கள் அறியாமலே அவரைப் பல சாமான்களில் ஒன்றாக்கி அவருடைய மகிமையைக் குறைத்து விடுகிறார்கள். அவரே சகலமும் என்றால் நாமும் அவராகத் தான் இருந்தாக வேண்டும்.

    சமுத்திரமாக இருக்கிற அவரேதான் ஆற்று ஜலம், குளத்து ஜலம், கிணற்று ஜலம், அண்டா ஜலம், செம்பு ஜலம், உத்தரணி ஜலம்போல் தம் சக்தியைச் சிறுசிறு ரூபங்களாகச் செய்துகொண்டு பலவித ஜீவ ஜந்துக்களாகியிருக்கிறார். இதில் மனிதனாகும்போது பாப புண்ணியத்தை அனுபவிக்கவும், பாப புண்ணியம் கடந்த நிலையில் தாமே ஆகிவிடவும் வழி செய்திருக்கிறார். மனிதனாகும்போது மனசு என்ற ஒன்றைக் கொடுத்து அதைப் பாப புண்ணியங்களில் ஈடுபடுத்திப் பலனை அனுபவிக்கச் செய்கிறார்.

    மனசு ஆடிக் கொண்டேயிருக்கிற நிலையில் உள்ள நாம் எடுத்த எடுப்பில் பாப புண்ணியமற்ற நிலையை அடைந்து அவரே நாம் என்று உணர முடியாது. ஆகவே, அவரே நாமாக இருந்தாலும், அதை நாம் அனுபவத்தில் உணருவதற்கு அவரது அருளைப் பிரார்த்திக்க வேண்டியர்களாகவே இருக்கிறோம். அவர் மகா பெரிய ஸ்வாமி, நாம் அல்ப ஜீவன்-அவர் மகா சமுத்திரம், நாம் உத்தரணி ஜலம் என்கிற எண்ணத்தோடு ஆரம்பத்தில் பக்தியே செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். ஸ்வாமி கொடுத்துள்ள மனசுதான் இப்போது நம்மை அவரிடமிருந்த பேதப்படுத்துகிறது. இந்த மனசை எடுத்த எடுப்பில் போ என்றால் போகாது. ஆகவே, இந்த நிலையில் இதே மனசால் அவர் ஒருத்தரை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். மனசை அவர் குரங்காகப் படைத்திருக்கிறார். அந்தக் குரங்கு இப்போது

    தேகத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்வாமி இந்தத் தேகத்தை நசிப்பதாக அல்லவா வைத்திருக்கிறார்?

    இந்த அழுகல் பழத்தை மனக்குரங்கு விட்டுவிட வேண்டும். அழுகாத பழம் கிடைத்தால் அழுகல் பழத்தைக் குரங்கு போட்டுவிடும். அழுகாத மதுரமான பழம் பரமாத்மாதான். அதை மனத்தால் பிடித்துக்கொண்டு சரீரப் பிரக்ஞையை விட்டுவிட அப்பியசிக்க வேண்டும். இதற்குத்தான் பக்தி, பூஜை, க்ஷேத்திராடனம் எல்லாம் வைத்திருக்கிறது. இவற்றில் மேலும் மேலும் பக்குவமடைந்து சரீரப் பிரக்ஞை, அகங்காரம் அடியோடு போய்விட்டால், அவர் பரமாத்மா, நாம் ஜீவாத்மா என்கிற பேதமே போய், அவரே நாமாக, அத்வைதமாக ஆகிவிடுவோம். ‘நீ வேறெனாதிருக்க’ என்று அருணகிரிநாதர் பாடிய அனுபவத்தை அடைவோம்.

    Ack:Sri.Kanchi Math.

    http://www.kamakoti.org/tamil/part1kural3.htm

  • பிள்ளையார் தத்துவம் ,’தெய்வத்தின் குரல்’

     

    Excerpts from Deivathin Kural by Kanchi Periyavar( compiled  by Ra.Ganapathy is being published here with the permission of The Kanchi Mutt.

    ‘விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் ப்ரியம் ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.

    சிதறு தேங்காய் என்ற உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில் என்மேல் விழுந்துவிடுப் போகின்றனவே என்று என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் “இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்” என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் ‘டாண்’ என்று, “பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல

    உங்களுக்கு என்ன பாத்தியதையும்’ என்று தெரிந்தது.

    அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத் ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது. கணபதியைக் காட்டிலும் சரீரத்தில் பருமனான ஸ்வாமி வேறு யாரும் இல்லை. சிரசு யானையின் தலை. பெரிய வயிறு. பெரிய உடம்பு. அவருக்கு ‘ஸ்தூல காயர்’ என்றே ஒரு பெயர். மலைபோல் இருக்கிறார். ஆனாலும் அவர் சின்னக் குழந்தை சரி, குழந்தைக்கு எது அழகு? குழந்தை என்றால் அந்தப் பருவத்தில் நிறையச் சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம்கூட இளைக்கக்கூடாது. ஒரு சந்நியாசி நிறையச் சாப்பிட்டுக் கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால் ராத்திரி உபவாசம் இருப்பார்கள். குழந்தை அப்படி இருப்பது அழகா? குழந்தை என்றால் தொந்தியும் தொப்பையுமாகக் கொழு கொழுவென்று இருந்தால்தான் அழகு. நிறையச் சாப்பிடுவதுதான் அழகு. குழந்தைகள் நல்ல புஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குழந்தைச்சாமியே காட்டிக் கொண்டிருக்கிறார், கையில் மோதகத்தை வைத்துக்கொண்டு.

    இவரோ யானை மாதிரி இருக்கிறார். அதற்கு நேர் விரோதமான சின்னஞ்சிறு ஆகிருதி உடையது மூஞ்சூறு. இதை அவர் தம் வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். மற்ற ஸ்வாமிகளுக்காவது ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு பட்சி, என்று வாகனம் இருக்கிறது. இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக் கொண்டாலும் வாகனத்தினால் சுவாமிக்குக் கௌரவம் இல்லை. சுவாமியால்தான் வாகனத்துக்கு கௌரவம். வாகனத்துக்குக் கௌரவம் கொடுக்க, அதனுடைய சக்திக்கு ஏற்றபடி நெட்டிப் பிள்ளை யார் மாதிரியாகக் கனம் இல்லாமல் இருக்கிறார். அதற்குச் சிரமம் இல்லாமல், ஆனால் அதற்கு மரியாதை, கௌரவம் எல்லாம் உண்டாக்கும்படியாகத் தம் உடம்பை வைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்தூலகாயரான போதிலும், ‘பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறார்.

    ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வோர் அங்கத்தில் அதிகக் கௌரவம் இருக்கும். சவுரிமான் (கவுரிமான்) என்று உண்டு. அதன் கௌரவம் வாலில். மயில் என்றால் அதற்குத் தோகை விசேஷம். தோகையை மயில் ஜாக்கிரதையாக ரட்சிக்கும். யானை எதை ரட்சிக்கும்? தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று பண்ணுகிறது என்றால், அந்தக் கொம்பில் ஒன்றையே ஒடித்து, அதனால் மகாபாரதத்தை எழுதிற்று. தன் அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்று நியாயத்துக்காக, தர்மத்துக்காக, விந்தைக்காக எதையும் தியாகம் பண்ண வேண்டும் என்பதைத்தானே தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டியிருக்கிறது. ஸ்வாமிக்குக் கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை. எதையும் கருவியாக அவர் நினைத்தால் உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணம். ஒரு சமயம் தந்தத்தாலேயே அசுரனைக் கொன்றார். அப்போது அது ஆயுதம். பாரதம் எழுதும் இப்போது அதுவே பேனா.

    நமக்குப் பார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துக்கள் சந்திரன், சமுத்திரம்,

    யானை ஆகியன. இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், அலுப்புச் சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும். அதனால்தான் குழந்தைஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும்படியாக யானை உருவத்தோடு இருக்கிறார். அது ஆனந்த தத்துவம்: ஆராத ஆசையின் தத்துவம், அவர் பிறந்ததே ஆனந்தத்தில். பண்டாசுரன் விக்ன மந்திரங்களைப் போட்டு அம்பாளின் படை தன்னை நோக்கி வரமுடியாதபடி செய்தபோது, பரமேசுவரன் அவளை ஆனந்தமாகப் பார்த்தப்போது , அவளும் ஆனந்தமாக இந்தப் பிள்ளையைப் பெற்றாள். அவர் விக்னயந்திரங்களை உடைத்து அம்மாவுக்கு சகாயம் செய்தார்.

    அவர் பார்வதி பரமேஸ்வரர்களுக்குப் பிள்ளை .இந்த உலகத்துக்கே மூலத்திலிருந்து ஆவிர்ப்பவித்ததனால், அவரை நாம் “பிள்ளையார்” , “பிள்ளையார்” என்றே விசேஷித்து அழைக்கிறோம்.

    எந்த ஸ்வாமியை உபாஸிப்பதானாலும் முதலில் விநாயகருடைய அநுக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டால்தான் அந்தக் காரியம் விக்கினம் இல்லாமல் நடைபெறும். அவரையே முழுமுதற் கடவுளாக, பிரதான மூர்த்தியாக வைத்து உபாசிக்கிற மதத்துக்கு காணபத்தியம் என்று பெயர்.

    பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.

    “தோர்பி: கர்ணம்” என்பேத தோப்புக்கரணம் என்று மாறியது. “தோர்பி” என்றால் “கைகளினால்” என்று அர்த்தம். ‘கர்ணம்’ என்றால் காது. “தோர்பி கர்ணம்” என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.

    விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக.

    http://www.kamakoti.org/tamil/part1kural2.htm

    Ack Sri.Kanchi Mutt.Enhanced by Zemanta
  • தெய்வத்தின் குரல் காஞ்சி பெரியவர் , விநாயகர்

    கல்விக் கடலாக விளங்கிய காஞ்சிப் பெரியவரின் ‘ தெய்வத்தின் குரலில் இருந்து பகுதிகள் வெளியிடப்படுகின்றன .

    ஆங்கில மொழி பெயர்ப்பும்  வெளிடப்படும்.

    Periyava8_jpg_634809g.
    Kanchi Periyavar.

    தமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். “கோயில்” என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார்.

    தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள் பாலித்து வருகிறார். அவரைப் “பிள்ளையார்” என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். “பிள்ளை” என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே “பிள்ளை” என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் “பிள்ளையார்” என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.

    “குமாரன்” என்றால் “பிள்ளை” என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் “குமரக் கடவுள்” என்கிறோம். ஆனால், அவரைக் “குமரனார்” என்பதில்லை: “குமரன்” என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம்.

    முதல் பிள்ளை இவர்: குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல பிரவஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும்.

    குழந்தையாக இருந்துகொண்டே ஆதிமுதலின் தோற்றமாக இருக்கிற பிள்ளையார் குழந்தைபோல் தோன்றினாலும், பக்தர்களை ஒரேயடியாகத் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வராக இருக்கிறார். ஒளவைப் பாட்டி ஒருத்தியின் உதாரணமே போதும். ஒளவையார் பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான “விநாயகர் அகவலை”ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும். இந்த ஒளவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஒளவை விக்நேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, “நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்” என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள். ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார். அவளுக்குப் பிற்பாடுதான்

    சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாள் திருக்கைலாய ஞான உலாவைப் பாடினார். இதை அருணகிரிநாதர் திருப்புகழில்,

     

    ஆதரம் பயில் ஆரூரர் தோழமை

    சேர்தல் கொண்டவரோடே முனாளினில்

    ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி

    ஆதி அந்த உலா ஆசு பாடிய

    சேரர்….

    என்பதில் சொல்லாமல் சொல்கிறார். “அப்படிப்பட்ட சேரர் ஆண்ட கொங்கு தேசத்தில் உள்ள பழனியில் இருக்கிற பெருமாளே” என்று பழனியாண்டவனைப் பாடுகிறார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசம் சேர்ந்ததற்கு இப்படி குமாரஸ்வாமியின் சம்பந்தத்தை உண்டாக்குகிறார். மூத்த குமாரரான பிள்ளையாருக்கோ ஏற்கனேவே அந்த சம்பவத்தில் சம்பந்தம் இருக்கிறது. அந்த இரண்டு பேருக்கும் முன்னதாக, ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர்.

    http://www.kamakoti.org/tamil/part1kural1.htm

    © Copyright Shri Kanchi Kamakoti Peetham