Tag: chamakam meaning

  • சமகம் 2 அர்த்தம் பொழிப்புரை

    ஜைஷ்ட்யம்’ ச  ஆதி’பத்யம் ச மே ன்யுஶ்ச’ மே பாம’ஶ்ச மே‌உம’ஶ்சமே‌உம்ப’ஶ்ச மே ஜேமா ச’ மே மஹிமா ச’ மே வரிமா ச’ மே ப்ரதிமா ச’ மேர்ஷ்மா ச’ மே த்ராகுயா ச’ மே வ்றுத்தம் ச’ மே வ்றுத்தி’ஶ்ச மே த்யம் ச’ மே ஶ்ரத்தா ச’ மே ஜக’ச்ச மே தனம்’ ச மே வஶ’ஶ்ச மே த்விஷி’ஶ்ச மே க்ரீடா ச’மே மோத’ஶ்ச மே ஜாதம் ச’ மே ஜனிஷ்யமா’ணம் ச மே ஸூக்தம் ச’ மே ஸுக்றுதம் ச’ மே வித்தம் ச’ மே வேத்யம்’ ச மே பூதம் ச’ மே பவிஷ்யச்ச’ மேஸுகம் ச’ மே ஸுபதம் ச ம றுத்தம் ச ம றுத்திஶ்ச மே க்லுப்தம் ச’ மேக்லுப்தி’ஶ்ச மே திஶ்ச’ மே ஸுதிஶ்ச’ மே || 2 ||

     

    ஜைஷ்ட்யம் -மேன்மையும் ,

     

    ஆதிபத்யம்-தலைமைத் திறனும்,

     

    மன்யு :உட்பகைகளுடன் கோபமும் ,

     

    பாம:-வெளிப்பகைகளிடம் கோபமும் ,

     

    அம”ஆழமான மனமும் ,

     

    அம்ப;குளிர்ந்த நீரும் ,

     

    ஜேமா-வெற்றி கொள்ளும் திறனும் ,

     

    மஹிமா-வெற்றியால் வெற்றியால் விளையும் பெருமையும் ,

     

    வரிமா-அதனால் விளையும் மனத் திருப்தியும் ,

     

    ப்ரதிமா -வீடு மனை முதலிய செல்வங்களும் ,

     

    வர்ஷமா -புத்திர பௌத்ரர்களும் ,

     

    த்ராகுயா -அழியாத சந்ததியும் ,

     

    வ்ருத்தம்-செல்வப் பெருக்கும்,

     

    வ்ருத்தி-கல்வி கேள்விகளில் வளர்ச்சியும் ,

     

    சத்யம் -உண்மையும் ,

     

    ஸ்ரத்தா-உண்மையான் நம்பிக்கையும் ,

     

    ஜகத் -அசையும் மற்றும் அசையாப் பொருள்களும் ,

     

    தனம் -தனமும் ,

     

    வச :-பிறரை வசீகரிக்கும் சக்தியும் ,

     

    த்வீஷி -சரீர காந்தியும் ,

     

    க்ரீடா -ஆடல் மற்றும் பாடல் கலைகளும் ,

     

    மோத:அதனால் விளையும் களிப்பும் ,

     

    ஜாதம்-உருவானதும் ,

     

    ஜனி ஷ்யமாணம்-உருவாகப் போவதும் ,

     

    ஸூக்தம்-தேவர் துதியும் ,

     

    சூக்ருதம் -புண்யமும் ,

     

    வித்தம் -சேமித்த பொருளும் ,

     

    வேத்யம்-இனி கிட்டப் போகும் பொருளும் ,

     

    பூதம் -நிலம் முதலிய பொருட்களும் ,

     

    சுகம்-எளிதில் சென்றடையக் கூடிய ஊரும்,

     

    சுபதம்-நல்வழியும் ,

     

    ருத்தம் -கைகூடிய யாகங்களின் நற் பயனும் ,

     

    ருத்தி-கை கூட இருக்கும் நற் பயனும் ,

     

    க்லுப்தம்-முறையாகச் சேர்த்த பொருளும் ,

     

    க்லுப்தி-செய்யும் செயலில் திறனும் ,

     

    மதி -ஊகித்து அறியும் நுண் மதியும் ,

     

    சுமதி -அரசுப் பணிகளைப் பராமரிக்கும் திறனும் ,

     

    மே -ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும் என்னிடம் உள்ளன .

     

     

     

    மேன்மையும் ,தலைமைத் திறனும்,உட்பகைகளுடன் கோபமும் ,வெளிப்பகைகளிடம் கோபமும் ,ஆழமான மனமும் ,குளிர்ந்த நீரும் ,

     

    வெற்றி கொள்ளும் திறனும் ,வெற்றியால் விளையும் பெருமையும் ,அதனால் விளையும் மனத் திருப்தியும் ,வீடு மனை முதலிய செல்வங்களும் ,

     

    புத்திர பௌத்ரர்களும் ,அழியாத சந்ததியும் ,செல்வப் பெருக்கும்,கல்வி கேள்விகளில் வளர்ச்சியும் ,உண்மையும் ,

     

    உண்மையான் நம்பிக்கையும் ,அசையும் மற்றும் அசையாப் பொருள்களும் ,தனமும் ,பிறரை வசீகரிக்கும் சக்தியும் ,சரீர காந்தியும் ,

     

    ஆடல் மற்றும் பாடல் கலைகளும் ,அதனால் விளையும் களிப்பும் ,(உருவானதும் ,உருவாகப் போவதும் ),தேவர் துதியும் ,

     

    புண்யமும் ,சேமித்த பொருளும் ,இனி கிட்டப் போகும்அத்தகைய  பொருளும் ,நிலம் முதலிய பொருட்களும் ,

     

    எளிதில் சென்றடையக் கூடிய ஊரும்,நல்வழியும் ,

     

    கைகூடிய யாகங்களின் நற் பயனும் ,

     

    கை கூட இருக்கும் அத்தகைய  நற் பயனும் ,

     

    முறையாகச் சேர்த்த பொருளும் ,

     

    செய்யும் செயலில் திறனும் ,

     

    ஊகித்து அறியும் நுண் மதியும் ,

     

    அரசுப் பணிகளைப் பராமரிக்கும் திறனும் ,

     

    ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும் என்னிடம் உள்ளன .