Tag: நோய்

  • அக்ஷீப்யாம் தே சூக்தம் சுய தூண்டுதலுக்கு நோயை விரட்ட

     

    சுய தூண்டுதல் நோயைவிரட்ட , மட்டுமல்ல , வளமான மற்றும் உறுதியான மனதிற்கும் ,எதிர் காலத்தை  நம் எண்ணப்படி

     

    அமைத்துக்கொள்ள  அவசியம் .

     

    ரிக் வேதம் 10.163 ,அக்ஷீப்யாம் தே  சூக்தத்தில் இந்த சுய தூண்டுதல் விளக்கப்  படுகிறது .

     

    இதைப் பாராயணம் செய்தால் சுய தூண்டுதல்  உந்தப் பெறும்.

     

    இதன் மூலமாக நோய்களை விரட்டலாம் .

     

     

    ஓம்

     

    1.அக்ஷீப்யாம் தே நாஸிகாப்யாம் கர்ணாப்யாம் சுபுகாததி ! யக்ஷ்மம் சீர்ஷண்யம் மஸ்திஷ்காத் ஜிஹ்வாயா விவ்ருஹாமி தே-1

     

     

    தே -உனது ,

     

    அக்ஷீப்யாம் -கண்களில் இருந்து ,

     

    நாசிகாப்யாம் -மூக்கிலிருந்து ,

     

    சுபுகாத் -கன்னத்திலிருந்து ,

     

    சீர்ஷ்ண்யாம்-தலையில் இருந்து ,

     

    மஸ்திஷ்காத் -மூளையில் இருந்து ,

     

    ஜிஹ்வாயா -நாக்கில் இருந்து ,

     

    யக்ஷ்மம் -நோயை ,

     

    விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

     

    உனது கண்களில் இருந்து ,மூக்கில்  இருந்து ,காதுகளில் இருந்து ,கன்னத்தில் இருந்து ,தலையில் இருந்து  ,மூளையில் இருந்து ,நாக்கில்

     

    இருந்து  நோயை விரட்டுகிறேன் .

     

     

    2.க்ரீவாப்யஸ்த உஷ்ணிஹாப்ய : கீகஸாப்யோ அனூக்யாத் யக்ஷ்மம் தோஷன்ய (அ ) மம்ஸாப்யாம்

     

    பாகூப்யாம் விவ்ருஹாமி தே-2

     

    தே-உனது ,

     

    க்ரீவாப்யாம் -கழுத்தில் இருந்து ,

     

    உஷ்நிகாப்ய:-தலையில் இருந்து ,

     

    கீகசாப்ய :எலும்புகளில் இருந்து ,

     

    அனூக்யாத்-மூட்டுகளில் இருந்து ,

    அம்சாப்யாம் -தோள்களில் இருந்து ,

    தோஷண்யம்-கைகளில் இருந்து ,

    பாஹுப்யாம் -முன் கைகளில் இருந்து ,

    யக்ஷ்மம் -நோயை ,

    விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

     

    உனது கழுத்தில் இருந்து , தலில் இருந்து ,எலும்புகளில் இருந்து ,மூட்டுகளில்  இருந்து ,தோள்களில் இருந்து ,கைகளில் இருந்து ,முன்

    கைகளில் இருந்து , நோயை விரட்டுகிறேன்.

     

    ஆந்த்ராயப்யச்தே  குதாப்யோ

     

    வனிஷ்டோர் ஹ்ருதயாததி யக்ஷ்மம் மதச்னாப்யாம்  யக்ன:

     

    ப்லாசிப்யோ  விவ்ருஹாமி தே- 3

     

    தே-உனது ,

     

    ஆந்த்ரேப்ய :-குடலில் இருந்து ,

     

    குதாப்ய :-குதத்தில்  இருந்து ,

     

    வநிஷ்ட -அடி வயிற்றில் இருந்து ,

     

    ஹ்ருதயாத் -இதயத்தில் இருந்து ,

     

    மதசஸ்னாப்யாம் – சிறு நீரகங்களில் இருந்து ,

    யக்ன:-கல்லீரலில்  இருந்து ,

    ப்லாசிப்ய :-வயிற்றின் உள் உறுப்புகளில்  இருந்து ,

    யக்ஷ்மம் -நோயை ,

    விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

     

    உனது குடலில் இருந்து ,குதத்தில் இருந்து ,அடிவயிற்றில் இருந்து ,இதயத்தில் இருந்து ,சிறுநீரகங்களில் இருந்து ,கல்லீரலில் இருந்து ,

     

    வயிற்றில் உள்ள உறுப்புகளில் இருந்து நோயை விரட்டுகிறேன் .

     

     

    ஊரூப்யாம்  தே  அஷ்டீவப்யாம் பார்ஷ்நீப்யாம்  பிரபதாப்யாம் I

     

    யக்ஷ்மம் ஸ்ரோணிப்யாம் பாசதாத் பம்ஸஸோ விவ்ருஹாமி  தே -4

     

    தே-உனது ,

     

    ஊருப்யாம் -தொடைகளில் இருந்து ,

     

    அஷ்டீவத் யாப்யாம் -மூட்டுகளில் இருந்து ,

     

    பார்ஷ்நீப்யாம் -குதிகால்களில் இருந்து ,

     

    பிரபதாப்யாம் -அடிக்கால்களில் இருந்து ,

     

    ச்ரோணிப்யாம்-இடுப்புப் பகுதிகளில் இருந்து ,

     

    பாஸதாத்-பின் புறங்களில் இருந்து,

     

    பம்ஸஸ: -உள் உறுப்புகளில்  இருந்து

     

    யக்ஷ்மம் -நோயை,

     

    விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

     

    உனது தொடைகளில் இருந்து ,மூட்டுகளில் இருந்து ,குதி கால்களில் இருந்து ,அடிக்கால்களில் இருந்து ,இடுப்புப் பகுதிகளில் இருந்து

     

    பின்புறங்களில் இருந்து ,உள்ளுறுப்பில் இருந்து நோயை விரட்டுகிறேன் .

     

     

    மேஹநாத்வனம்  கரணால்லோம ப்யஸ்தே  நகேப்ய :I

     

    யக்ஷ்மம் சர்வஸ்மாதாத்மன்ஸ்தமிதம் விவ்ருஹாமி தே  -5

     

    மேஹநாத் -பிறப்பு உறுப்பிலிருந்து ,

    வனம் கரணாத் -சிறுநீர்ப் பையில்  இருந்து ,

    லோமப்ய -முடியில் இருந்து ,

    நகேப்ய -நகங்களில் இருந்து ,

    ஆத்மனஸ்தம் -உன் உள்ளே உள்ள ,

    சர்வஸ்மாத்-அனைத்து அங்கங்களில் இருந்தும் ,

    யக்ஷ்மம் -நோயை ,

    விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

    உன் பிறப்புஉறுப்பில்  இருந்து , சிறுநீர்ப் பையில் இருந்து ,முடியில் இருந்து , நகங்களில் இருந்து ,உனது எல்லா அவயவங்களில்

    இருந்தும்  நோயை விரட்டுகிறேன் .

     

    அங்காதங்கால்லோம்னோ ஜாதம் பர்வணி  பர்வணிI

     

    யக்ஷ்மம் சர்வஸ்மாத்மநஸ்மிதம் விவ்ருஹாமி தே -6

     

    தே-உனது ,

     

    அங்காத் அங்காத்-ஒவ்வொரு உறுப்பிலும் இருந்து ,

     

    லோம் லோம்ன-ஒவ்வொரு  ரோமத்தில் இருந்தும் ,

     

    ஜாதம்-தோன்றுகின்ற ,

     

    பர்வனணி பர்வணி-ஒவ்வொரு  முட்டியிலும் ,

     

    ஆத்மனசஸ்தம்-உனது ,

    சர்வஸ்மாத் -எல்லா உறுப்புகளில் இருந்தும் ,

    இதம் -இந்த

    யக்ஷ்மம் -நோயை ,

    விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

     

    உனது ஒவ்வோர் அங்கங்களிருந்தும் ,முடியிலிருந்தும் ,நோய் தோன்றுகின்ற ஒவ்வொரு மூட்டியில் இருந்தும் ,உனது அனைத்து

     

    அவவயங்களில் இருந்தும் நோயை விரட்டுகிறேன் .

     

     For Text in Sanskrit and other Indian Languages.

    http://www.bharatiweb.com/new/aksheebhyam-sooktam/

     

    For Sanskrit text.

     

    http://sanskritdocuments.org/doc_veda/suktalst.html

     

     

    Enhanced by Zemanta