Tag: சந்தியா வந்தனம்

  • சந்தியா வந்தனம் மந்திரம் அர்த்தம் பூர்வ பாகம் ஐயர் ஐயங்கார்

     

    முதல் பகுதி

    Sandta vanadanam Duty of Hindus
    Sandya vandanam
    Image credit:http://ramanisblog.in/wp-content/uploads/2014/04/sandhyavandanam_1.jpg

     

    அச்சுதனுக்கு நமஸ்காரம் ,

     

    அனந்தனுக்கு நமஸ்காரம் ,

     

    கோவிந்தனுக்கு நமஸ்காரம்

    .

    கேசவ ,நாராயணா ,மாதவா ,கோவிந்தா ,விஷ்ணோ ,மதுசூதனா ,திரிவிக்ரமா ,வாமனா, ஸ்ரீதரா,ஹ்ரிஷிகேசா பத்மநாபா ,தாமோதரா,

     

    உன்னைப் பன்னிரு திரு நாமங்களால் போற்றி என் இந்திரியங்கள் அனைத்திற்கும் ரக்ஷை இடுகின்றேன் .

     

    எங்கும் நிறைந்தவரும் எனினும் பக்தருக்கு உகந்த வடிவம் எடுப்பவரும்,வெண்மையான ஆடை உடுத்தவரும் ,நிலவு போன்ற  ஒளி உள்ளவரும் ,நான்கு கைகள் உள்ளவரும் ,ஆனந்தம் பொங்கும் முகமண்டலத்தை உடையவரும் ஆகிய கணபதியை ,எல்லா இடையூறுகளும் விலகுவதற்காக த்யானம் செய்ய வேண்டும்.

     

    மூச்சின் ஆட்சி .

     

    ஓங்காரமே பூலோகம் ,
    ஓங்காரமே புவ லோகம் ,
    ஓங்காரமே ஸுவர் லோகம் ,
    ஓங்காரமே மகர் லோகம் ,
    ஓங்காரமே ஜன லோகம் ,
    ஓங்காரமே தபோ லோகம் ,
    ஓங்காரமே சத்திய லோகம் ,

     

    ஓங்காரப் எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ ,அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதி ஸ்வரூபத்தை தியானிப்போம் .
    ஓங்காரமே ஜலமும் ஒளியும் ,
    ஓங்காரமே ரசம் பொருந்திய அன்னத்தை அளிக்கும் பூமியும் ,
    அதுவே உயிருக்கு ஆதாரமான வாயுவும் ,
    எங்கும் பரந்த ஆகாசமும் ,
    பூ:புவ:சுவ: என்ற வ்யாஹ்ரிதிகள் குறிப்பிடும் மனம் ,புத்தி அகங்காரம் என்ற தத்துவங்களும் ஓங்காரமே.

     

    தெளிந்த தீர்மானம் .

     

    என்னால் அடையப்பட்ட எல்லாப் பாவங்களையும் நசிக்கச் செய்வதின் மூலம் , பகவானின் அருளுக்குப் பாத்திரமாகும் பொருட்டு ,காலையில் ,நடுப்பகலில் ,மாலையில் சந்தியா தேவியை உபாசிக்க ஆரம்பிக்கிறேன்

     

    மார்ஜனம் .

    ஓம் ,

     

    கேசவனுக்கு நமஸ்காரம் ,
    ஜல தேவதைகாளகிய நீங்கள் உயர்ந்த சுகத்திற்கு காரணமாக இருக்கிறீர்கள் என்பது பிரசித்தம் .
    அப்படிப் பட்ட நீங்கள் எண்களுக்கு மகிமை பொருந்தியதும் ,ராமநீயமானதும் ஆன ஞான திருஷ்டியின் பொருட்டுப் போஷணையை அளியுங்கள் .

     

    உங்களிடம் எந்தப் பரம மங்கலமான பேரின்ப ரசம் உள்ளதோ ,அதற்கு இங்கேயே எங்களை ,நீங்கள் அன்பு சுரக்கும் அன்னையைப் போல் உரியவர்களாக்குங்கள்.
    எந்த ரசத்தை நிலையாக வழங்கும் பொருட்டு நீங்கள் இன்ப வடிவாய் விளங்குகரீர்களோ அந்த ரசத்தை அடையும் பொருட்டு உங்களை மிகவும் ஆர்வமுடன் நாடுகின்றோம் .
    ஜல தேவதைகள் ஆகிய நீங்கள் எங்களை ஞானத்தால் புனிதமான புனர் ஜன்மம் அடைந்து விளங்கும் படியும் அருள்வீர்கள் ஆக .

     

    ப்ராசனம் -மந்திரத்தால் ஜபிக்கப் பட்ட தீர்த்தம் உட்கொள்ளுதல் .

     

    காலையில் .
    அனைத்தையும் இயக்கம் சூரியனும் அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும் கோபத்தை ஆளும் தெய்வ சக்திகளும் ,கோபத்தால் செய்யப்பட்ட பாவங்களில் இருந்து என்னைக் காப்பற்றட்டும் .
    இரவில் மனத்தினாலும் வாக்காலும் கைகளாலும் கால்களாலும் வயிற்றாலும் ஆண் குறியாலும் எந்தப் பாவத்தை செய்தேனோ

    ,இன்னும் என்னிடத்தில் வேறு என்ன பாவம் உண்டோ அதையும் இரவின் அதி தேவதை நீக்கி அருள வேண்டும் .
    இங்ஙனம் பாவம் நீங்கிய என்னை நான் மோக்ஷதிற்க்கு காரணமாகிய சூரிய வடிவமான பரஞ்சோதியில் ஹோமம் செய்கின்றேன் .
    இந்த ஹோம்மம் நன்கு அனுஷ்டிக்கப்படவேண்டும் .

     

     
    நடுப்பகலில் .
    ஜல தேவதை தனுக்கு உறைவிடமாகிய பூமியை புனிதமாக்கட்டும் .
    அங்கனம் புனிதமாக்கப்பட்ட பூமி என்னைப் புனிதம் ஆக்கட்டும் .
    அது வேதத்திற்கு உறைவிடமான ஆசாரியனையும் புனிதம் ஆக்கட்டும் .

     
    என்றும் புனிதமாய் உள்ள வேதம் என்னைப் புனிதம் ஆக்கட்டும் .
    பிறர் உண்ட மிச்சமும் ,புசிக்கத் தகாததும் புசிக்கப் பட்டதாலும் ,துர் நடத்தையாலும் ,கெட்டவர்களிடம் இருந்து தானம் வாங்கியதாலும் உதித்த பாவங்கள் எல்லாவற்றிலும் இருந்தும் என்னை ஜல தேவதை புனிதம் ஆக்கட்டும் .

     
    என்று வேண்டி ,
    என்னைப் பரமாத்மா சொத்தில் ஹோமம் செய்கின்றேன்.

     

     

    சாயங்காலத்தில் .
    அக்கினியும் ,அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும் ,கோபத்தை ஆளும் தெய்வ சக்திகளும் , கோபத்தால் செய்யப்பட்ட பாவங்களில் இருந்து என்னைக் காப்பாற்றட்டும் .

     

    பகலில் ,மனத்தாலும் வாக்காலும் கைகளாலும் கால்களாலும் வயிற்றாலும் ஆண் குறியாலும் எந்தப் பாவத்தை செய்தேனோ ,என்னிடத்தில் வேறு என்ன பாவம் உண்டோ , அதையும் பகலின் அதி தேவதை நீக்கி அருள வேண்டும் .
    இங்ஙனம் பாவம் நீங்கிய என்னை ,நான் மோக்ஷதிற்க்கு காரனமாகியதும் ,முக்காலத்தும் சத்தியமாய் விளங்கும் பரஞ்சோதியில் ஹோமம் செய்கின்றேன் .
    இந்த ஹோமம் நன்கு அனுஷ்டிக்கப் பட்டதாக வேண்டும் .

     

    புனர் மார்ஜனம் -மீண்டும் ப்ரோக்ஷனத்தால் மந்திர ஸ்நானம் .
    அனைத்து உலகையும் தாங்குபவனும் ,ஆள்பவனும் அளப்பவனும் ஜெயசீலனும் சகல வித்தைகளுக்கும் ஆதாரமான ஹயக்ரீவ வடிவம் எடுத்தவனும் வேகவானுமாகிய பரம புருஷனுக்கு வந்தனம் செய்கின்றேன் .
    நம்முடய முகத்தையும் மற்ற இந்திரியங்களையும் அவர் நன் மணம் உடவியவை ஆக ஆக்க வேண்டும் .
    நம்முடைய ஆயுளை இடையூறு இல்லாமற் காக்க வேண்டும்,
    ஜல தேவதைகள் நம்மை ஞானத்தால் புனிதமான புனர் ஜன்மம் அடைந்து விளங்கும் படி அருள் புரிய வேண்டும் .
    அர்க்யம் கொடுத்தல் .
    ஓங்காரப் பொருளான பகவானே பூ லோகமும் புவர் லோகமும் ஸுவர் லோகமும் .
    எந்தப் பரமாத்மா புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ , அந்த அனைத்தையும் படைக்கிறவர் ஆன பகவானுடைய சிறந்த ஜோதி ஸ்வருபத்தை த்யானிப்போம் .

     

    ப்ராயசித்தார்க்யம் -காலந் தவறிய குறை நீங்க மீண்டுமொரு அர்க்யம் .

     
    ஒரு முறை செய்யவும் .
    ஐக்யானுசந்தானம் .
    இந்த சூரியன் பிரம்மம் ,நானும் பிரம்மமாகவே இருக்கிறேன் .

     

    தேவ தர்ப்பணம் .

    சூரியனை ,சந்திரனை ,செவ்வாயை ,புதனை ,குருவை .சுக்கிரனை ,மெதுவாய்ச் செல்லும் சனியை ராகுவை ,கேதுவை – கால ரூபிகளான நவக்ரக தேவதைகள் எல்லோரையும் திருப்தி செய்விக்கின்றேன் .

     

    கேசவனை ,நாராயணனை ,மாதவனை ,கோவிந்தனை ,விஷ்ணுவை ,மதுசூதனை ,த்ரிவிக்ரமனை ,வாமனனை ,ஸ்ரீதரனை ,ஹ்ரிஷிகேசனை ,பத்மநாபனை ,தாமோதரனை , பானிரு திரு நாமங்களால் வரிசையாக மார்கழி முதல் கார்த்திகை வரை உள்ள பன்னிரெண்டு மாதங்களுக்கும் அதி தேவதையாகவும் கால ரூபியாகவும் விளங்கும் நாராயணனை திருப்தி செய்கின்றேன் .

     

    ஆசமனம் .

     

    பூர்வ பாகம் நிறைவடைந்தது .

     

    Ref.Anna Subramania Iyer..

     

    Text down load.http://www.tamilbrahmins.com/share-your-knowledge/4703-yajur-veda-sandhyavandanam-procedure.html

     

    Audio down load for Vaishnava Sampradayam.

    http://anudinam.org/2012/03/08/sandhyavandanam-audio-and-notes/

    Enhanced by Zemanta