Tag: ஆவணி அவிட்டம்

  • Krishna Yajur Upakarma Gayatri Japa Mantras In Tamil

    யஜுர் வேத உபாகர்மா – ஆவணி 12-ம் தேதி,
    ஆவணி அவிட்டம் ( 29-08-2015 )சனிக் கிழமை

    தாமாகவே வீட்டில் உபாகர்மாவை செய்து கொள்பவர்களுக்கு

    குறிப்பு:- ப்ரம்மசாரிகள் காலையில் ஸ்நானம், ஸந்தியாவந்தனம் செய்து, பிறகு வபனம் (க்ஷவரம்) செய்துகொண்டு மறுபடியும் ஸ்நானம் செய்து ஸமிதாதானம், ”காமோ கார்ஷீத்” ஜபம்,மாத்யாஹ்னிகம், ப்ரஹ்ம யஜ்ஞம், பின்பு மஹா ஸங்கல்பம் செய்து கொண்டு ஸ்நானம் செய்து யஜ்ஞோபவீத தாரணம், ”காண்ட ரிஷ்” தர்ப்பணம், வேதாரம்பம் செய்து ஸ்வாமிக்கும்,பெரியோர்களுக்கும் நமஸ்காரம் செய்து உபாகர்ம கார்யத்தை முடித்துக் கொள்ள வேண்டும்

    . “ப்ரதம ச்’ராவண ப்ரஹ்மசாரிக்கு காமோகார்ஷீத் ஜபம் கிடையாது.” ”க்ருஹஸ்தர்களுக்கு க்ஷவரம்,ஸமிதாதானம் கிடையாது.” பாக்கி விஷயங்களை மேலே சொன்னபடி செய்து கொள்ள வேண்டும்.
    .
    ஸமிதா தானம்

    கிழக்கு முகமாக உட்கார்ந்து, ப்ரஹ்மசாரிகள் மங்கள ஸ்நானம்,வபனம்,ஸந்தியாவந்தனம் செய்து
    அக்னி ஏற்படுத்தி முன்னால் வைத்துக் கொண்டபின், இரண்டு முறை ஆசமனம் செய்ய வேண்டும்.
    ஆசமனம் (1) ஒம் அச்யுதாய நம: (2) ஒம் அனந்தாய நம: (3) ஒம் கோவிந்தாய நம:

    அங்கவந்தனம்:

    ஓவ்வொரு மந்திரத்தைச் சொல்லும்போது அந்தந்த மந்திங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பர்சித்துக் கொள்ள வேண்டும்.
    கேச…வ வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
    நாராயண வலக்கைக் கட்டை விரல் இடக்கன்னம்
    மாதவ வலக்கை மோதிர விரல் வலக் கண்
    கோவிந்த வலக்கை மோதிர விரல் இடக் கண்
    விஷ்ணு வலக்கை ஆள்காட்டி விரல் வலது நாசி
    மதுஸூதன வலக்கை ஆள்காரராலாலட்டிவிரல் இடது நாசி
    த்ரிவிக்ரம வலக்கை சிறு விரல் வலது காது
    வாமன வலக்கை சிறு விரல் இடது காது
    ஸ்ரீதர வலக்கை நடு விரல் வலது தோள்
    ஹ்ருஷீகேச… வலக்கை நடு விரல் இடது தோள்
    பத்மநாப ஐந்து விரல்களும் சேர்த்து நாபி
    தாமோதர ஐந்து விரல்களும் சேர்த்து தலை

    விக்னேச்வர த்யானம்

    சு’க்லாம் பரதரம் விஷ்ணும் ச’சி வர்ணம் சதுர்ப்புஜம் !
    ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசா’ந்தயே !!
    ப்ராணாயாமம்;.

    ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓட்மாபோ: ஜ்யோதீரஸா:,அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் – என்று வலது காதைத் தொடவேண்டும்.வலது காதில் கங்கை வசிப்பதாக ஐதிகம்

    ஸங்கலபம்,

    மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்’வர ப்ரீத்யர்த்தம், |
    (காலையில்) ப்ராத ஸமிதாதானம் கரிஷ்யே (மாலையில்) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே” பிறகு, அக்னி பிரார்த்தனை. ”பரித்வாக்னே பரிம்ருஜாமி, ஆயுஷா ச தநேந ச ஸுப்ரஜா ப்ரஜயா பூயாஸம் ஸுவீரோ வீரை: ஸுவர்ச்சா: வர்ச்சஸா ஸுபோஷ: போஷை: ஸுக்ருஹோ க்ருஹை: ஸுபதி:பத்யா ஸுமேதா: மேதயா ஸுப்ரஹ்மா ப்ரஹ்மசாரிபி: ( என்று சொல்லி ஜலத்தைக் கையில் எடுத்து ) ”தேவஸவித: ப்ரஸுவ” ( என்று கூறி ஜலத்தால் அக்னியைச் சுற்றி விடவும் )

    ஸமிதா தானம்-தொடர்கிறது ( ”க்ருஹஸ்தர்களுக்கு க்ஷவரம்,ஸமிதாதானம் கிடையாது.”)

    ப்ரார்த்தனை
    பரித்வாக்னே பரிம்ருஜாமி ஆயுஷாச தனேன ச ஸுப்ரஜா; ப்ரஜயா பூயாஸம் ஸுவிர;வீரை; ஸுவர்ச்சா ; வர்ச்சஸா ; ஸுபோஷ; போஷை’ஸுக்ருஹ;
    க்ருஹை;ஸுபதி; பத்யா ஸுமேதா; மேதயா ஸுப்ரஹ்மா பிரம்மசாரிபி; (தேவஸவித;ப்ரஸுவ என்று அக்னியை ஜலத்தினால் ப்ரதக்ஷிணமாக சுற்றவும்)

    ஹோமம்:-

    (கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி ஒவ்வொரு தடவையும் ”ஸ்வாஹா” என்று சொன்ன பின்அக்னியில் ஸமித்தை ஒவ்வொன்றாக வைக்கவும்)

    01)ஒம் அக்னயே ஸமிதமாஹார்ஷம் ப்ருஹதே ஜாத வேதஸே யதாத்வமக்னே ஸமிதா ஸமித்யஸே ஏவம் மாமாயுஷா வர்ச்சஸா ஸந்யாமேதயா ப்ரஜயா பசு பி: ப்ரஹ்ம வர்ச்சஸேன அந்நாத்யேன ஸமேதய ஸ்வாஹா.
    02) ஏதோஸி ஏதிஷீமஹி ஸ்வாஹா
    03)ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா
    04)தேஜோஸிதேஜோ மயிதேஹி ஸ்வாஹா
    05)அபோ அத்ய அந்வசாரிஷகும்ரஸேந ஸம ஸ்ருக்ஷ்மஹிபயஸ்வான் அக்ந ஆகமம் தம்மாஸகும் ஸ்ருஜவர்சாசஸா ஸ்வாஹா
    06)ஸம்மாக்நே வர்ச்சஸா ஸ்ருஜ ப்ரஜயா ச தநேந ச ஸ்வாஹா
    07)வித்யுந்மேஅஸ்ய தேவா: இந்த்ரோ வித்யாத் ஸஹரிஷிபி: ஸ்வாஹா
    08)அக்நயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா
    09) த்யாவா ப்ருதிவீ ப்யாகும் ஸ்வாஹா
    10) ஏஷாதே அக்நே ஸமித்தயா வர்த்தஸ்வ ச ஆப்யாயஸ்வ ச தயாஹம் வர்த்தமாநோ பூயாஸம்- ஆப்யாயமாநஸ் ச ஸ்வாஹா
    11) யோமாக்நே பாகிநகும்ஸந்தம் – அதா பாகம் சிகீர்ஷதி அபாகமக்நே தம்குருமாமக்நே பாகிநம் குரு ஸ்வாஹா
    12)ஸமிதமாதாய அக்நே ஸர்வவ்ரதோ பூயாஸகும் ஸ்வாஹா
    ( என்று ஸமித்தை அக்னியில் சேர்த்த பிறகு )
    தேவஸவித: ப்ராஸாவீ: என்று ஜலத்தால் அக்னியை ஒரு முறை சுற்றி விடவும். பிறகு “ஸ்வாஹா” (என்று கூறி ஸமித்தை அக்னியில் சேர்க்கவும் )

    உபஸ்தானம்:- ”அக்நே உபஸ்த்தாநம் கரிஷ்யே” என்று கூறி உபஸ்தானம் செய்ய எழுந்து நின்று, இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு அக்னி பகவானைப் ப்ரார்த்திக்கவும்) யத்தே அக்நே தேஜஸ்தேந அஹம் தேஜஸ்வீ பூயாஸம், யத்தே அக்நே வர்ச்சஸ்தேந அஹம் வர்ச்சஸ்வீ பூயாஸம்,யத்தே அக்நே ஹரஸ்தேந அஹம் ஹரஸ்வீ பூயாஸம் மயி மேதாம் மயிப்ஜாம் மய்யக்நி: தேஜோ த்தாது, மயிமேதாம் மயிப்ரஜாம் மயீந்தர: இந்த்ரியம் த்தாது, மயி மேதாம் மயி ப்ரஜாம் மயிஸூர்யோப்ராஜோ த்தாது, அக்நயே நமஹ மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஹீதாச’ன யத் ஹுதம் து மயா தேவ பரிபூர்ணம் த்தஸ்து தே, ப்ராயச் சித்தாந்யசேஷாணி தப: கர்மாத்மகாநிலை,யாநிதேஷாமசே ஷாணாம், ஸ்ரீக்ருஷ்ண அனுஸ்மரணம் பரம், ஸ்ரீக்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண, (என்று சொல்லிநமஸ்காரம் செய்யவும்) பிறகு அக்னியிலிருந்து சிறிதளவு பஸ்மத்தை எடுத்து இடது உள்ளங்கையில் ஜலம் விட்டு மோதிர விரலால் கீழ்க்கண்ட மந்த்ரத்தைக் கூறி, குழைத்து அந்தந்த இடத்தில் ரக்ஷையாக இட்டுக் கொள்ளவும்)

    ரக்ஷா மந்த்ரம் : “மானஸ்தோகே தநயே மாந ஆயுஷமாநோகோஷுமாநோ அச்’வேஷீரீ ரிஷ:வீராந்மாநோ ருத்ரபாமிதோவதீ: ஹவிஷ்மந்தோ நமஸாவிதேமதே மேதாவீ பூயாஸம் (நெற்றில்)தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்) வர்ச்சஸ்வீ பூயாஸம் (வலது தோளில்) ப்ரஹ்வ்வர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்) ஆயுஷ்மாந் பூயாஸம் (கழுத்தில்) அந்நாதோ பூயாஸம் (நாபியில்) ஸ்வஸ்தி பூயாஸம் (தலையில்) இட்டுக்கொண்டு கை அலம்பி, அக்னி பகவானைப் பார்த்து ப்ரார்த்தனை செய்யவும். ஸ்வஸ்தி ச்ரத்தாம் மேதாம் யச: ப்ரஜ்ஞாம், வித்யாம், புத்திம். ச்’ரியம், பலம், ஆயுஷ்யம்,தேஜ: ஆரோக்யம் தேஹி மே, ஹவ்யவாஹந ச்’ரியம் தேஹி மே, ஹவ்யவாஹன ஓம் நம: இதி (என்று சொல்லி அக்னியைப் ப்ரார்த்தித்து பின் ஆசமனம் செய்து) ‘‘ஒம் த்தஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து”என்று சொல்லி ஒரு உத்தரணி தீர்த்தத்தை வலது உள்ளங்கையில் விட்டுக் கீழே விடவும்.
    ஸமிதாதனம் முற்றிற்று.

    காமோ கார்ஷீத் ஜப ஸங்கலபம்

    “ப்ரதம ச்’ராவண ப்ரஹ்மசாரிக்கு காமோகார்ஷீத் ஜபம் கிடையாது.”)
    ப்ரஹ்மசாரிகளும், க்ருஹஸ்தர்களும், அவசியம் செய்ய வேண்டியது

    (முதல் ஆவணி அவிட்டம் (ச்ராவணம்) செய்பவர்கள் இதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை)

    ஆசமனம் செய்து 2-பில் பவித்ரத்தை மோதிர விரலில் போட்டுக் கொண்டு 4-கட்டை தர்ப்பங்களைக் காலின் கீழ் ஆஸனமாகச் சேர்த்து, 4-கட்டை தர்ப்பங்ளை பவித்ர விரலில் மடக்கிக் கொண்டு ஸங்கல்பம் செய்யவும்.
    விக்னேச்வர த்யானம்

    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !
    ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!

    ப்ராணாயாமம்;.
    ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் – என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம் )

    ஸங்கல்பம் மந்திரம்,
    மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,சு’பே சோ’பனே முஸூர்த்தே, அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்ததே ச்’வேத வராஹ கல்பே,வைவஸ்வத மந்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே கலியுகே, ப்ரததே பாதே, ஜம்பூத்வீபே, பாரவர்ஷே,பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச’காப்தே, அஸ்மின், வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரவாதீனாம், ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே.

    மன்மத நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ, ஸிம்ஹ மாஸே, சு’க்ல பக்ஷே, .பௌர்ணமாஸ்யாம் சு’பதிதௌ, ஸ்திர வாஸரயுக்தாயாம், ச்ரவிஷ்டா நக்ஷத்ரயுக்தாயாம், அதிகண்ட நாமயோக, பத்ரைகரண யுக்தாயாம் ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம் பெளர்ணமாஸ்யாம் சு’பதிதௌ.
    மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம், தைஷ்யாம் பௌர்ணமாஸ்யாம், அத்யாயோத்ஸர்ஜன, அகரண ப்ராயச்’சித்தார்த்தம், அஷ்டோத்திர ஸஹஸ்ர,ஸங்க்ய்யா (1008 தரம்) அல்லது அஷ்டோத்திர சத ஸங்க்யயா (108 தரம்) “காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன்” இதி மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே. (என்று தர்ப்பையை இடது பக்கம் போடவும்.)

    (காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன் நமோ நம)

    (காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன் நமோ நம: இந்த மந்த்ரத்தை ஜபித்து பிறகு பவித்ரத்தை அவிழ்த்து ஆசமனம் செய்து) ஸர்வம் ஸ்ரீ ப்ரஹ்மார்ப்பணமஸ்து ( என்று சொல்லி ஜலத்தைக் கீழே விடவும் )இதன் பிறகு மாத்யாஹ்னிகம் செய்து ப்ரஹ்ம யஜ்ஞம் செய்ய வேண்டும்.

    மஹா ஸஹ்கல்பம்
    (2-புல் தர்ப்பை பவித்ரம் தரித்து காலடியில் நாலு கட்டை தர்ப்பையைப் போட்டுக் கொண்டு பவித்ரத்துடன் 4-கட்டை தர்ப்பையை பவித்ர விரலில் மடித்துக் கொண்டு) ஸங்கல்பம் செய்யவும். (பின்)
    விக்னேச்வர த்யானம்
    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !
    ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!
    ப்ராணாயாமம்;
    ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் – என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம் )
    ஸங்கல்பம் மந்திரம், மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்,ததேவ லக்னம் ஸுதினம் ததேவ, தாராபலம் சந்த்ரபலம் ததேவ! வித்யாபலம் தைவ பலம் ததேவ, லக்ஷ்மீபதே தே அங்க்ரியுகம் ஸமராமி !! அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவத்தாம் கதோபிவா ய:ஸ்மரேத் புண்ரீகாக்ஷம் ஸபாஹ்யாப்யந்தர: சு’சி: மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்ச’ய: ஸ்ரீராம ராம ராம, திதிர் விஷ்ணு: த்தாவார:நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச யோகச்’ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ: ஆஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம் ச’திதமே, கலியுகே –ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச’காப்தே, அஸ்மின், வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரவாதீணாம், ஷஷ்ட்யா, ஸம்வத்ஸராணாம் மத்யே

    மன்மத நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ ஸிம்ஹ மாஸே, சு’க்ல பக்ஷே பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ, ஸ்திரவாஸர.யுக்தாயாம், ச்’ரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம், .அதிகண்ட நாமயோக, .பத்ரை கரணயுக்தாயாம் ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம் பௌர்ணமாஸ்யாம் சு’பதிதௌ.

    அனாதி அவித்யாவாஸனயா ப்ரவர்த்தமானே, அஸ்மின் மஹதி ஸம்ஸார சகரே, விசித்ராபி: கர்மகதிபி: விசித்ராஸு யோநிஷு புன: புன: அனேகதா ஜனித்வா கேனாபி புண்ய கர்மவிசே ஷேண இதானீம் தனமானுஷ்யே த்விஜன்ம விசே’ஷம், பராப்தவத: மம ஜன்மாப்யாஸாத், ஜன்மப்ரப்ருதி, ஏதத்க்ஷண பர்யந்தம், பால்யே, வயஸி, கௌமாரே,யௌவனே, வார்த்தகே ச ஜாக்ரத், ஸ்வப்ந, ஸுஷுப்தி அவஸ்த்தாஸு, மனோ வாக்காய, கர்மேந்த்ரிய, ஜ்ஞானேந்த்ரிய வ்யாபாரைச்ச ஸம்பாவிதானம் இஹ ஜன்மனி, பூர்வ ஜன்மனி, ஜன்மாந்தரே ச ஜ்ஞானத: அஜ்ஞானத: க்ருதானாம், மஹா பாதகானாம், மஹாபாதக அனுமந்த்ரத்வாதீனாம், ஸமபாதகானாம், உப பாதகானாம், நிந்தித தனாதான உபஜீவனாதீனாம், அபாத்ரீகரணானாம், ஜாதி ப்ரம்ச கராணாம், விஹிதகர்ம த்யாகாதீனாம், ஜ்ஞானத: ஸக்ருத்க்ருதானாம், அஜ்ஞானத: அஸக்ருத்க்ருதானாம், ஹர்வேஷாம் பாபாநாம், ஸத்ய: அபனோதனார்த்தம், பாஸ்கர க்ஷேத்ரே விநாயகபதி ஸமஸ்த ஹரிஹர தேவதா ஸந்நிதௌ, ச்’ராவண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யா யோபாகர்ம கரிஷ்யே, த்தங்கம் ஸ்நானமஹம் கரிஷ்யே, என்று தர்ப்பையை வடக்கே போடவும். கை அலம்பி தீர்த்தம், ப்ரார்த்தனை (செய்து கொள்ளவும்)

    1) அதிக்ரூர மஹாகா கல்பாந்த தஹநோபம, பைரவாய நமஸ்துப்யம் அநுஜ்ஞாம் தாதுமர்ஹஸி
    2) துர்போஜன-துராலாப-துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம், பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸக்யகன்யே நமோஸ்துதே
    3) த்ரிராத்ரம் ஜாஹ்னவி தீரே பஞ்சராத்ரம் து யாமுநே: ஸதய: புநாது காவேரி பாபம் ஆமரணாந்திகம்.
    4) கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோ ஜனானாம் சதைரபி, முச்யதே ஸர்வ பாபேப்யோ விஷ்ணுலோகம் ஸ கச்சதி
    5) நந்திநி நளிநி ஸீதா மாலதீ ச மாலபஹா, விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத .
    காமினி
    புஷ்கரத் யானி தீர்த்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா, ஆகச்சந்து பவித்ராணி ஸ்னான காலே ஸதா மம
    ( என்று ஸங்கல்பத்தை முடித்துக் கொண்டு ஸ்நானம் யஜ்ஞோபவீத்தாரம், காண்டரிஷி தர்ப்பணம் செய்து ச்’ராவண ஹோமம் செய்யும் இடத்தில் கலந்து கொண்டும், ஸ்வாமி தரிசனம்,பெரியோர்களை வழிபடுதல் முதலிவற்றை முடித்துக் கொண்டு ச்’ராவண கர்மாவை பூர்த்தி செய்து கொள்ளவும்)

    யஜ்ஞோபவீத தாரண மந்த்ரம் ( ரிக், யஸுர், ஸாம வேத பொது)

    ஆசமனம் (1) ஒம் அச்யுதாய நம: (2)ஒம் அனந்தாய நம: (3) ஒம் கோவிந்தாய நம:
    விக்னேச்வர த்யானம்:
    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !
    ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!
    ப்ராணாயாமம்;
    ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் – என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம் )

    ஸங்கல்பம் மந்திரம்,
    மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், ச்’ரௌதஸ்மார்த்த, விஹிதஸதாசார, நித்யகர்மானுஷ்டான, யோக்யதாஸித்தயர்த்தம், ப்ரஹ்மதேஜ: அபிவ்ருத்யர்த்தம், யஜ்ஞோபவீத்தாரணம் கரிஷ்யே. என்று ஜலத்தை தொட்டு யஜ்ஞோபவீத்தாரண மஹா மந்த்ரஸ்ய, பரப்ரஹ்ம ரிஷி: (தலையில்) த்ருஷ்டுப் சந்த: (மூக்கு நுனியில்) பரமாத்மா தேவதா: (மார்பில்)யஜ்ஞோபவீத்தாரண விநியோக: என்று பூணுல் முடிச்சு வலது உள்ளங்கையில் மேலே இருக்கும் படியும் இடது கை ஜல (பஞ்சபாத்திரத்தில்) பாத்திரத்தில் வைத்துக் கொண்டு

    யஜ்ஞோபவீதம், பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத்,ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சு’ப்ரம், யஜ்ஞோபவீதம் பலமஸ்துதேஜ: ஒம்

    (என்று புதிய பூணுலைப் போட்டுக் கொள்ளவும், ப்ரம்மசாரிகள் 1பூணுல், திருமணம் ஆனவர்கள் 2 பூணுல் பெரியோர்கள் 3 பூணுல்) சிலர் மூன்று முடி பூணுல் அணிந்து கொள்ள பழக்கம் உள்ளது.

    ஆசமனம்: உபவீதம் பின்னதந்து ஜீர்ணம் கஸ்மல துஷிதம் விஸ்ருஜாமி ப்ரஹ்ம வர்ச்ச: ஜலேஸ்மின் தீர்க்காயுரஸ்துமே ஒம் (பழைய பூணுலைக் கழற்றி ஜலத்தில் போடவும், ஆசமனம் செய்யவும், பிரம்மச்சாரிகள் மான்தோல், இடுப்புக்கயிறு தண்டம்-மந்திரம் சொல்லி அணியவும்)

    காண்டரிஷி தர்ப்பணம்

    ஆசமனம் செய்து பவித்ரம் போட்டுக் கொண்டு: கட்டைபில்லை பவித்ரத்துடன் மடித்துக் கொண்டுவிக்னேச்வர த்யானம்: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !
    ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !! ப்ராணாயாமம்; ஓம் பூ:, ஓம் புவ:,ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் – என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம் )
    ஸங்கல்பம் மந்திரம்,

    மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம், ச்’ராவண்யாம், பௌர்ணமாஸ்யாம், அத்யாயோபாகர்மாங்கம் ப்ராஜாபத்யாதி காண்டரிஷி தர்ப்பணம் கரிஷ்யே (என்று சொல்லி, கட்டைபுல் தர்ப்பையை கீழே போட்டு ஜலத்தை தொடவும். பூணுலை மாலையாகப் போட்டுக் கொண்டு கீழ்க்கண்ட 9 தர்ப்பணங்களை அக்ஷதையும், எள்ளும் சேர்த்துக்கொண்டு, மும்மூன்று தடவை உள்ளங்கை இடது பக்கம் வழியாக ஜலத்தைக் கீழே விடவும்) ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) ஸோமம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) அக்னிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) விச்’வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) நேராக ஸாகும்ஹிதீர் தேவதா:உபநிஷதஸ் தர்ப்பயாமி (3) யாஜ்ஜிகீர் தேவதா: உபநிஷதஸ்: தர்ப்பயாமி (3) வாருணீர் தேவதா:உபநிஷதஸ் தர்ப்பயாமி (3) ( துக்கிய உள்ளங்கையைக் கீழமர்த்தி அதன் வழியாக ஜலம் விடவும்) ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம் தர்ப்பயாமி (3) (நேராக ஜலம் விடவும்) ஸதஸஸ்பதிம் தர்ப்பயாமி (3) பூணுலை உபவீதி (பவித்ரத்தை காதில் வைத்து) ஆசமனம் செய்யவும்.

    வேதாரம்பம்

    பவித்ரம் அணிந்து கொண்டு கட்டை தர்ப்பையை பில் மடித்துக் கொண்டு ச்ராண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாய உபாகர்மாங்கம், வேதாரம்பம் கிரிஷ்யே, தர்ப்பையை போட்டு கை அலம்பவும்.

    ஒம்பூ: தத்ஸவிதுர்வரேண்யம், ஒம்புவ: பர்கோ தேவஸ்ய தீமஹி, ஒம் கும் ஸுவ:தியோயோந: ப்ரசோதயாத், ஓம் பூ: தத்ஸவிதர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, ஓம்புவ:தியோயோந: ப்ரசோதயாத்: ஒகும் ஸுவ:
    தத்ஸவிதர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோயோந: ப்ரசோதயாத் ஓம்.ஓம்

    இக்ஷேத்வா – ஊர்ஜேத்வா – வாயவஸ்த – உபாயவஸ்த தேவோ வ : ஸவிதா ப்ரார்பயது ச்’ரேஷ்டதமாய கர்மணே ஓம் – ஓம் அக்னிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம்ருத்விஜம்:ஹோதாரம் ரத்ன தாதமம் ஓம் – ஓம் அக்ன ஆயாஹிவீதயே க்ருணாநோ ஹவ்ய தாதயே நிஹாதா ஸத்ஸி பர்ஹிஷி ஓம் – ஓம் ச’ந்நோ தேவீரபிஷ்டயே ஆபோ பவந்துபீதயே ச’ம்யோரபிஸ்ரவந்துந:ஓம் – ஓம்ஸமாம்நாய; ஓம் ஸமாம் நாத: வ்ருத்திராதைச் ம-ய-ர-ஸ-தஜபன லகஸம்மிதம் – அத சி’க்ஷாம் – ப்ரவக்ஷ்யாமி கௌ: க்மா ஜ்மா – க்ஷமா – ஷோனி: அவநி: – அ – இ – உண் – ருலுக் – ஏஓங் – ஐஓளச் ஹயவரடு – லண் – ஞமங்ணநமு – ஜபஞ்ச் – கடதஷ் ஜப கடமஸ் க – ப – ச – ட – த சடதவ் – கபய் –ச’ஷஸர் – ஹல் – இதிமா ஹேச்’வராணி ஸூத்ராணி ஓம் நமோ ப்ரஹ்மணே – நமோஸ்த்வக்னயே –நம: ப்ருதிவ்யை நம ஒஷதீப்ய: நமோவாசே, நமோ வாசஸ்பதயே, நமோ விஷ்ணவே, ப்ருஹதே கரோமி, ஒம் தத்ஸத், பவித்ரம் அவிழ்த்து ஆசமனம், கும்பத்துக்கு தீபாராதனை, ஆசீர்வாதம், தீதுத்தப்ரஸாதம் – வாத்யார் ஸம்பாவனை – சுண்டல் – அப்பம் – புஷ்பம் ரக்ஷை ப்ரஸாதம் – ஸ்வாமி பெரியோர் நமஸ்காரம் – வீட்டில் போய் ஹாரத்தி.

    ஆவணி 13-ம் தேதி,

    ( 30-08-2015 ) ஞாயிற்றுக்கிழமை – காயத்ரி ஜப ஸங்கல்பம். ( ரிக், யஸுர், ஸாம வேத பொது)
    ஆசமனம் செய்து பவித்ரம் போட்டுக் கொண்டு: கட்டைபில்லை தரித்து

    Avani Avittam.png
    Yajur Upakarma

    விக்னேச்வர த்யானம்:

    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !
    ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!

    ப்ராணாயாமம்;
    ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும்,ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் – என்று வலது காதைத் தொடவேண்டும்.(வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம்)

    ஸங்கல்பம் மந்திரம்,

    மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், சுபே, சோபனே +ஸம்வத்ஸராணாம் மத்யே வரையில் மஹா ஸங்கல்கத்தில் உள்ளது போல் ஜபித்து.

    மன்மத நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ ஸிம்ஹ மாஸே, கிருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் சு’பதிதௌ பானு வாஸரயுக்தாயாம், சதபிஷங் நக்ஷத்ர யுக்தாயாம், சுகர்ம நாமயோக, பாலவ கரண யுக்தாயாம் ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம் ப்ரதமாயாம் சு’பதிதௌ.

    மித்யாதீத ப்ராயச் சித்தார்த்தம், தோஷவத்ஸு அபதனீய ப்ராயச் சித்தார்த்தம் – ஸம்வத்ஸர ப்ராயச் சித்தார்த்தாஞ்ச – அஷ்டோத்தர ஸஹஸ்ர ஸங்க்யயா (1008) அல்லது அஷ்டோத்தர சத (108)ஸங்க்யயா காயதரீ மஹாமந்த்ர ஜபம் கரிஸ்யே, ஹோமம் கரிஷ்யே ( கட்டைபில்லை வடக்கே போட்டு ஜலம் தொடவும். பிறகு ப்ரணவஸ்ய முதல் ஆயாத்விதி – ஸவிதா தேவதா முடியச் செய்து(1008) அல்லது (108) தடவை காயத்ரியை ஜபித்து (அ) சமித் ஹோமம் செய்து ப்ராணாயாமம், காலை உபஸ்தான மந்த்ரம் சொல்லி உபஸ்தானம் செய்து, பவித்ரத்தைப் பிரித்து விட்டு ஆசமனம் செய்த பிறகு ”ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பண மஸ்து” என்று சொல்லி ஜலத்தைக் கீழே விட வேண்டும்.)

    Thanks.Mr.Varagoor Sri.Narayanan.

  • Rig Upakarma Tamil Mantras Smarthas Sri Vaishnavas

    I have published procedure for Sanshyavanadana,Upakarma Mantras, Sankalpa in English and Tamil.

    I have also written on the importance of Sraddha,Pitru Paksha Mantras,Amavasya Tharpana Mantras, their meaning in Tamil.

    All these are for Krishna Yajur Vedins.

    Upakarma, Avani Avittam being performed.jpg
    Upakarma, Avani Avittam being performed.

    Many readers have requested that I post on Rig,Shukla Yajur and Sama Veda Mantras inEnglish and Tamil.

    I had touched upon  Shukla Yajur Vedins.

    I shall try to post on the sujects mentioned above ,hopefully in time before Upakarma.

    I am providing the Rig Veda Upakarma Mantras  below.

    This is for both Iyers and Iyengars..

    Corrections welcome.

    Please note that as this site is being rated as one of the authentic sites on Hinduism/Santana Dharma, please point out mistakes with inputs backed by authentic links.

    Rig Veda Upakarma.

    I shall be posting in English/Sanskrit as well.

    28th
    August 2015
    (Friday)

    The Upkarma dates in 2015 are August 28 and August 29. In 2015,

    Sama Vedi Upakarma is on September 15. It is the day the sacred thread worn by Brahmins known as ‘Yagnopavitam’ is changed.

    There are Brahmins who are the followers of Rig Veda, Yajur Veda and Sama Veda and they have separate dates for Upakarma.

    The ritual is also known as Avani Avittam in Tamil Nadu and Kerala.

    Yajur Vedi Upakarma is observed a day before Shravan Poornima day (Full moon day in Sawan month) this year. Brahmins who are the followers of Yajur Veda change the sacred thread on the day. In 2015, the date is August 29.

    Rig Vedi Upakarma is observed on the day of Shravan Poornima this year. Brahmins who are the followers of Rig Veda change the sacred thread on the day. In 2015, the date is August 28.

    Gayatri Japam is on August 30.

    Sama Vedi Upakarma is observed on the day after Shravan Amavasi (No moon day in Sawan month). Brahmins who are the followers of Sama Veda change the sacred thread on the day. In 2015, the date is September 15.

    ஸ்நானம், சந்த்யாவந்தனம் செய்யவும் .

    பிறகு யக்ஞோபவீத தாரணம்.கை கால்கள் அலம்பிய பின்னர் ஆசமனம்.
    இரண்டு புல் பவித்ரம் – இடுக்குப்புல் தரித்து ப்ராணாயாமம் செய்யவும்.
    பின்னர் கைகூப்பி:
    ததேவ லக்னம், ஸுதினம் ததேவ,தாராபலம் சந்த்ரபலம் ததேவ
    வித்யாபலம் தைவபலம் ததேவ
    லக்ஷ்மிபதே அங்ரியுகம் ஸ்வமராமி
    வடகலையார்: -அஸ்மத் குருப்யோ நம: ஸ்ரீமான் வேங்கடநாதார்ய கவிதார்க்கிககேசரீ. வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி | குருப்ய: தத் குருப்யஸ் ச ந்மோவாகே ம்தீமஹே, வ்ருணீ மஹேச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம்பதீ, ச்வசேஷபூதேன மயாஸ்வீயை: ஸரவபரிச்சதை, விதாதும் ப்ரீதமாத்மானம் தேவ ப்ரக்ரமதே ஸ்வயம்.

    ஐயங்கார் – வடகலை , தென்கலை மற்றும் ஸ்மார்த்தாள் (ஐயர்) – எல்லோருக்கும்

    அய்யர் ,பொது :ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வவிக்னோப சாந்தயே

    (யஸ்யத்விரத வக்ராத்யா பாரிஷத்யா பரச்சதம்
    விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாச்ர்ரயே) Vaishnavas
    என்று சொல்லி, பிறகு வலது தொடை மீது இடது உள்ளங்கை மேல் வைத்துகொண்டு கீழே உள்ளபடி ஸங்கல்பம்

    ஹர்ரிஹரோந்தத்ஸத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, அஸ்ய ஸ்ரீபகவத: மஹாபுருஷஸ்ய

    விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீச்வேதவரஹகல்பே, வைவஸ்த

    மன்வந்த்தரே, கலியுகே ப்ரதமே பாதே, பாரதவர்ஷே . பரதக்கண்டே ,சகாப்தே, மேரோர் தக்ஷிணே பார்ச்வே: அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே –
    …..( வருஷம் பெயர் ) நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதௌ, கடக மாஸே சுக்ல பக்ஷே பௌர்ணமாஸ்யாயாம் ஸுப திதௌ, ……(கிழமை )வாஸர யுக்தாயாம், ஸ்ரவண நக்ஷத்ர யுக்தாயாம், ஆயுஷ்மான் யோக பத்திரைகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம் பௌர்ணமாஸ்யாயாம் ஸுபதிதௌ ஸ்ரீ பகவதாக்ஞா _______@1___#2____*3_________________@1—(வடகலையார் – ) ஸ்ரீமன் நாராயண ப்ரீதியர்த்தம்#2– (தென்கலையார் ) பகவத் கைங்கர்ய ரூபம்*3– (ஸ்மார்த்தாள்) – பார்வதீ பரமேச்வர ப்ரீதியர்த்தம்(என்று மாற்றி சொல்லிக்கொள்ளவ்வும் )ஸ்ராவண்யாம் ச்ரவண ந்க்ஷத்ரே அதீதானாம் ச்சந்தஸாம், அத்யேஷ்ய மாணானாம் அயாதயாமத்வாய வீர்ய வர்த்தார்த்தம் ஸ்ராவண்யாம் ச்ரவண நக்ஷத்ரே, அத்யாய உத்ஸர்ஜன கர்மாங்கம், கரிஷ்யமாண உபாகர்மாங்கம், ப்ரம்ம யக்ஞ தர்ப்பணம், ஸாவித்ரியாதி நவ தர்ப்பணம் அக்ந்யாதி ஏகவிம்சத் தர்ப்பணம்ச அத்ய கரிஷ்யே: (என்று கூறி இடுக்குப் புல்லை மட்டும் வடக்கில் போடவும்).
    பிறகு வடக்கு நோக்கி குதிகாலில் அமர்ந்தவாறு, நனைத்த அரிசியை எடுத்து இரண்டு கை நுனிவிரல்கள் வழியாக தீர்த்தம் சேர்த்து கீழ்கணட மந்த்ரங்களை கூறி கீழே சேர்க்கவும்:
    (1) பூணூல் உபவீதம்:
    ப்ரஜாபதி த்ருப்யது
    ப்ரஹ்ம த்ருப்யது
    வேதாஸ் த்ருப்யந்து
    தேவாஸ் த்ருப்யந்து
    ரிஷயஸ் த்ருப்யந்து
    ஸர்வாணி சந்தாம்ஸி த்ருப்யது
    ஓம்காரஸ் த்ருப்யது
    வஷ்ட காரஸ் த்ருப்யது
    வ்யாஹ்ருதயஸ் த்ருப்யது
    ஸாவித்ரீ த்ருப்யது
    யஜ்ஞாஸ் த்ருப்யது
    த்யாவா ப்ருதிவீ த்ருப்யதாம்
    அந்தரிக்ஷந் த்ருப்யது
    அஹோராத்ராணி த்ருப்யந்து
    ஸாங்க்யாஸ் த்ருப்யந்து
    ஸித்தாஸ் த்ருப்யந்து
    ஸமுத்ராஸ் த்ருப்யந்து
    ந்த்யாஸ் த்ருப்யந்து
    காவஸ் த்ருப்யந்து
    கிரயஸ் த்ருப்யந்து
    க்ஷேத்ரௌஷதி வனஸ்பதி
    கந்தர்வாஸ் த்ருப்யந்து
    நாகாஸ் த்ருப்யந்து
    பயாம்ஸி த்ருப்யந்து
    விப்ராஸ் த்ருப்யந்து
    யக்ஷாஸ் த்ருப்யந்து
    ரக்ஷாம்ஸி த்ருப்யந்து
    பூதாநி த்ருப்யந்து
    ஏவமந்தானி த்ருப்யந்து
    (2) தாவடமாக் (நீவிதி), அதாவது மாலையாக பிடித்துக்கொண்டு அரிசி/தீர்த்தம் கொண்டு இரண்டு கைகளுக்கு நடுவில் வழியாக நீரை விடவும்.:
    ஸதர்சினஸ் த்ருப்யது
    மாத்யமாஸ் த்ருப்யது
    க்ருத்ஸமதஸ் த்ருப்யது
    விச்வாமித்ராஸ் த்ருப்யது
    வாமதேவஸ் த்ருப்யது
    அத்ரிஸ் த்ருப்யது
    பாரத்வாஜ த்ருப்யது
    வஸிஷ்ட த்ருப்யது
    ப்ரகாதஸ் த்ருப்யந்து
    பாவமான்யாஸ் த்ருப்யந்து
    க்ஷூத்ரஸூக்தாஸ் த்ருப்யது
    ஸுமந்து ஜைமிநி வைசம்பாயன பைல ஸுக்ர பாஷ்ய பாரத மஹாபாரத தர்மாசார்யாஸ் த்ருப்யது
    ஜானந்தீ பாஹவீ கார்க்ய கௌதம சாகல்ய பாப்ரவ்ய மாண்டவ்ய மாண்டூகேயாஸ் த்ருப்யது
    கர்கீ வாசக் நவீ த்ருப்யது
    வடவா ப்ராதி தேயீ த்ருப்யது
    ஸுலபா மைத்ரேயீ த்ருப்யது
    கஹோளாந் தர்ப்பயாமி
    கௌசீக தர்ப்பயாமி
    மஹா கௌஷீதகன் தர்ப்பயாமி
    பாரத்வாஜ தர்ப்பயாமி
    பைங்கன் தர்ப்பயாமி
    மஹா பைங்கன் தர்ப்பயாமி
    ஸுயஜ்ஞந் தர்ப்பயாமி
    ஸாங்யாயனன் தர்ப்பயாமி
    ஐதரேயந் தர்ப்பயாமி
    மஹைதரேயந் தர்ப்பயாமி
    ஸாகலந் தர்ப்பயாமி
    பாஷ்கலந் தர்ப்பயாமி
    கார்க்யந் தர்ப்பயாமி
    சௌமந் தர்ப்பயாமி
    ஸுஜாதவக்த்ரன் தர்ப்பயாமி
    ஔதவாளஹிந் தர்ப்பயாமி
    மஹௌதவாள்ஹிந் தர்ப்பயாமி
    ஸௌஜாமிந் த்ருப்யந்து த்ருப்யந்து
    ஸௌநகந் தர்ப்பயாமி
    ஆஸ்வ்வலாயந் தர்ப்பயாமி
    ஏசாந்யே ஆசார்யா தேஸர்வே த்ருப்யந்து த்ருப்யந்து, த்ருப்யந்து.
    (3) பூணூலை உபவீதமாக (வழ்க்கம்போல்) அணிந்து கை நுனி விரல்களால் தர்ப்பணம் செய்யவும் :
    ஸாவித்ரீந் தர்ப்பயாமி
    ப்ரஹ்மாப்ணந் தர்ப்பயாமி
    மேதாந் தர்ப்பயாமி
    ப்ரஜ்ஞாந் தர்ப்பயாமி
    தாரணான் தர்ப்பயாமி
    ஸதஸசஸ் பதிம் தர்ப்பயாமி
    அனுமதிந் தர்ப்பயாமி
    சாந்தாம்ஸ்ய தர்ப்பயாமி
    அக்நிந் தர்ப்பயாமி
    அப்த்ரிண் ஸூர்யந் தர்ப்பயாமி
    ஸகுந்தந் தர்ப்பயாமி
    மித்ரவருணௌ த்ருப்யேதாம்
    அக்னிந் தர்ப்பயாமி
    ஆபஸ் த்ருப்யது
    அக்நிந் தர்ப்பயாமி
    மருதஸ் தர்ப்பயாமி
    அக்நிந் தர்ப்பயாமி
    வர்மாணந் தர்ப்பயாமி
    அக்நிந் தர்ப்பயாமி
    இந்த்ரா ஸோமௌ த்ருப்யதாம்
    இந்த்ரன் தர்ப்பயாமி
    அக்னி மாருதன் தர்ப்பயாமி
    பவமான ஸோமௌ த்ருப்யதாம்
    ஸோமந் தர்ப்பயாமி
    ஸமஜ்ஞானந் தர்ப்பயாமி
    விச்வேதேவாஸ் த்ருப்யந்து
    அக்பிஸ் த்ருப்யது
    விஷ்ணுஸ் த்ருப்யது
    (4) தகப்பனார் இல்லாதவர்களுக்கு மட்டும் கீழ்கண்ட பித்ரு தர்ப்பணம் எள்ளும் தீர்த்தமும் கொண்டு வலது கை கட்டை விரல் வழியாக தர்ப்பணம் : மூன்று பில் பவித்ரம் அணிந்து கீழ்கண்டபடி ஒரு முறை தர்ப்பிக்கவும்:
    பித்ரு வர்க்கம் – பிதா, பிதாமஹர், ப்ரபிதாமஹர் – மாதா, பிதாமஹி, ப்ரபிதாமஹி மாத்ருவர்க்கம் – ஸபத்நீக மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹ
    பவித்ரத்தை அவிழ்த்து பிரித்துவிட்டு, ஆசனமம் செய்யவும்.

    வேதாரம்பம்- உங்கள் குரு/வாத்யார்/ஆசார்யன், பெருமாள் பெரியவர்களை ஸேவித்து ஆசி பெறவும்