தமிழக மன்னர்கள் சனாதன தர்மத்தை வெறுத்தார்கள், அந்தணர்களை ஒதுக்கி வைத்தனர் என்றும், அந்தணர்கள் அரசனுக்கு எதிராகச் செயல்பட்டார்கள்,தமிழ் மன்னர்கள் சமஸ்கிருதத்திற்கும் எதிரானவர்கள் என்ற புனையுரை தமிழகத்தில் பரப்பப்பட்டு வருகிறது.
இதற்கு பதிலை ராஜேந்திர சோழர் ஈசாளம் செப்பேடுகள் வழங்குகிறது. கீழே காண்க.
இராசேந்திரசோழனுடைய பட்டப் பெயர்களுள் விக்கிரமசோழன் என்பது ஒன்றாகும் . தானம் பெற்ற சர்வசிவபண்டிதரேஇத்தானத்திற்கு விக்ஞாப்தி ஆவார் . 35 சுலோகங்களில் பயின்று வந்துள்ள பாவகைகள் வருமாறு ; 1. ஸ்ரக்தரா 2. வஸந்ததிலக. 3. ஸ்ரக்தரா 4. சார்தூல விக்ரீடிதம் 5. மாலினீ. 6. சார்தூல விக்ரீடிதம் 7. அனுஷ்டுப் 8 . மஞ்ஜுபாஷி 9. இந்த்ரவஜ்ரா. 10. இந்த்ர வஜ்ரா. 11. உபேந்த்ர வஜ்ரா. 12. மாலினீ. 13. மந்தாக்ராந்தா 14. மந்தாக்ராந்தா 15. உபேந்திரவஜ்ரா. 16. ஸ்ரக்தரா 17 சார்தூலவிக்ரீடிதம் 18. மஞ்ஜுபாஷி 19. உபேந்த்ரவஜ்ரா. 20. சார்தூல விக்ரீடிதம் 21. அனுஷ்டுப்.. 22. . உபேந்த்ரவஜ்ரா. 23. சார்தூலவிக்ரீடிதம். 24 . வஸந்த திலகா 25. சார்தூல விக்ரீடிதம் 26. வஸந்த திலகா 27 . இந்த்ர வஜ்ரா 28 . உபேந்த்ரவஜ்ரா 29 .... ## 30. சார்தூலவிக்ரீடிதம் 31. இந்த்ர வஜ்ரா 32. வஸந்ததிலகா 33 . வஸந்த திலகா 34. அனுஷ்டுப் 35 . இராசகுரு ## செப்பேட்டில் உள்ளபடி இராசராசனுடைய குலகுருவாக ஈசான சிவபண்டிதர் இருந்தார் . இராசராசனுக்குப் பிறகு நாடாண்ட முதலாம் இராசேந்திரனுக்கும் இவர் குலகுருவாக இருந்துள்ளார் . தஞ்சாவூர் பிரகதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் இவரைக் குறிப்பிடுகின்றன . தொடக்கத்தில் இராசேந்திரனின் குருவாக இவர் இருந்திருப்பினும் ஆட்சியின் பிற்காலத்தில் சர்வ சிவபண்டிதர் இருந்துள்ளதைத் தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டும் கூழம் பந்தலில் உள்ள கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில் கல்வெட்டும் குறிப்பிடுகின்றன . ஆரியதேசம் , மத்திய தேசம் , கௌடதேசம் போன்ற நாடுகளில் இருந்து இராசேந்திரன் ஆசாரியர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆசாரிய போகமாக மிகுதியான நிலங்களை வழங்கியதை வரலாற்றில் காண்கிறோம் . எசாலம் கோயிலை எடுப்பித்த சர்வசிவ பண்டிதர் எசாலம் செப்பேட்டின் வடமொழிப் பகுதியிலும் தமிழ்ப்பகுதியிலும் குறிப்பிடப்பட்டுள்ளார் . மன்னன் இவரை நம் உடையார் என மிகவும் மரியாதையுடன் அழைத்துள்ளான் . எனவே தன்குரு கட்டிய சிவன் கோயிலுக்கு இராசேந்திரன் ஓர் ஊரையே இறையிலியாக வழங்கியதில் வியப்பொன்றுமில்லை . ..வி ( த்வி ) காஸம் கண்டே ஸாந்த்ரேந்த்ர நீலோத் பலமிவ விததத் காலகூடம் கராலம் முண்டேந்தும் மூர்த்னி சூடாமணிமிவ கலயனநித்ய க்ல்ருப்தாங்கபூஷா சோபோ திச்யாத் பவானீ பரணயனவிதிம் ப்ராப்தவான் தூர்ஜடி : வ : மங்களம் உண்டாகட்டும் . பவானி அம்மனோடு திருமணக் கோலம் கொண்ட தூர் ஜடியான் ( பரமசிவன் ) உங்களுக்கு கருணைபுரியட்டும் . மணவழகரான சிவனின் அழகிய நெற்றியில் திலகம் போல் மூன்றாவது கண்ணைக் கொண்டிருக்கிறார் . கருங்குவளை மலர் போன்று கழுத்தில் ஆலகால விஷத்தைக் கொண்டிருக்கிறார் . நிலவாகிய சந்திரனைத் தலையணிபோல் சடையில் கொண்டு அணிகலன்களால் எழிலுடன் காட்சி தருகிறார். குறிப்பு கல்யாண சுந்தர மூர்த்தியினை நினைவூட்டும் வகையில் உள்ள இக்காப்புச் சுலோகத்திலும் அம்மன் பெயர் பவானி என்றே உள்ளது . பிறதேவர்களுக்கு இல்லாத மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணும் பாற்கடல் கடைந்தபோது வெளிப்பட்ட கொடிய நஞ்சைக் கண்டத்திலும் தேய்பிறையான நிலவைச் சடையிலும் சூடியவர் என்பதால் உங்களுக்கும் அருள்புரிவார் என்பது குறிப்புப் பொருளாகும் . திருவாலங்காட்டுச் செப்பேட்டிலும் பவானி என உமையம்மன் கூறப்பட்டுள்ளார் . பஞ்சாசதேவ லிபய : பரிவ்ருத்த ஸங்க்யா : ஸங்க்ய மதீத்ய ரவிவம்சகுணா: விபாந்தி ஏதைரஹம் கதமமூம் கதயாமி மஹ்யம் மாத : ஸரஸ்வதி லிபீரபரா : விதேயா : தேவமொழியில் ஐம்பது எழுத்துகள் உள்ளன . ஆயின் இரவிவம்சத்தின் குணங்களோ எண்ணிக்கையில் அடங்காத அளவு மிகுந்திருக்கின்றன . இச்சூழலில் இவ்வைம்பது அட்சரங்களைக் கொண்டு அவர்களின் குணநலன்களை எப்படி கூறுவேன் ? அம்மாதாயே ! சரஸ்வதியே மேலம் சில லிபிகளை ( எழுத்துகளை ) எனக்குப் படைப்பாயாக . குறிப்பு தற்போது வடமொழியில் ஐம்பதுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் இருப்பினும் பழங்காலத்தில் ஐம்பது என்றே வரையறை செய்துள்ளனர் . இதே கருத்துள்ள சுலோகம் வேறு செப்பேடுகளிலும் உள்ளது . கல்விக்கு அதிபதியாக நான்முகனின் தேவி சரஸ்வதியைக் கூறுவது மரபாகும் . காளமேகப் புலவருக்குக் கலைமகள் அருள் புரிந்ததை அவருடைய வாக்காலே அறியலாம் . ஆஸீதாத்யோ ந்ருபாணாம் மனு : அகில ஜகச் ச r ஷ ஸப்தஸப்தே : இக்ஷ்வாகு : தத்தனூஜ: ப்ரவரகுணமணிச்ரேணி ஜன்மாம்பு ராசி : மாந்தாதா தஸ்ய வம்சே சதுருத்தி லஸன் மேகலா லங்க்ருதாயா ; பாதா விச்வம்பராயா : க்ஷிதி பதி மகுடச்ரேணி வ்ருந்தாங்க்ரி பீட பிரபஞ்சத்திற்கு விழியானவனும் ஏழுபரிகளை உடையவனுமான சூரியனுக்கு மன்னர்களுக்கெல்லாம் முதல்வனான மனுபிறந்தான் . மனுவிற்கு இக்ஷ்வாகு பிறந்தான் . அவன் நற்குணங்களின் கடலாக விளங்கினான் . இவனுடைய வமிசத்தில் மாந்தாதா என்பவன் தோன்றினான் . நான்கு கடல்களை டையணியாகக் கொண்ட பூமிதேவியை இவன் காத்ததால் எல்லா அரசர்களுடைய மகுடங்களும் பாதபீடங்களாக இருந்தன . குறிப்பு ஏழுகுதிரைகளையும் ஒரு சக்கரத்தையுமுடையவனாக ஆதித்தனைக் குறிப்பிடுவர் . ஆதித்தன் மரபே சோழமரபாகும் . இவனுடைய மகனாக மனு பிறந்தான் . இம்மரபில் வந்த மாந்தாதா பெருவீரன் என்பதால் அரசர்கள் மகுடங்களுடன் வீழ்ந்து வழிபட்டனர் . ஆதலால் பாதபீடங்களாகமாறின என்று நயமாகக் கவிஞர் கூறுகிறார். தத்புத்ரோ முசுகுந்த இத்யாஜனிய : ஸத்ய : ப்ரபோதோந்மிஷத் சக்ஷர்தக்தவிதக்த காலயவநாநந்தன் முகுந்தோ நிருப : அவைகள். தத்வம்சாம்பு நிதே : சசி கல்ப இத்யாக்யாம் ததாநோ அபவத் ய : சக்ரே வலபீம்புரீம் நிருபதிபி : தோர்தண்ட தண்டாநதை : 4 முசுகுந்தன் அவனுக்கு மகனாகப் பிறந்தான் . அவனைக் காலயவனன் என்னும் நிபுணனான அசுரன் தூக்கத்திலிருந்து எழுப்ப விழித்து எழுந்த முசுகுந்தன் அந்த அசுரனை எரித்தான் . இதனால் முகுந்தனுக்கு ஆனந்தம் கிடைத்தது . அந்த வம்சமாகிய கடலின் நிலவாக வலபன் என்ற அரசன் தோன்றினான் தன்புயபலத்தாலும் சேனையாலும் தோற்கடித்த மன்னர்களைக் கொண்டு வலபீ என்ற நகரை உருவாக்கினான் . குறிப்பு சங்க இலக்கியத்தில் இடம்பெறும் வல்லங்கிழான் என்ற வல்லபன் வேறு . இங்குள்ள புராண வலபன் வேறு ஆகும் . ஸகல ஜலதி வீ Y மேகலாலங்க்ருதாயா பதி : அவநியுவத்யா சோளவர்மா அஸ்ய வம்சே நமதகில நரேந்த்ர வ்ராத மௌலிப்ரபாபி விரசித சரணாப்ஜோ வீர்யவான் ஆவிராஸீத் 5 அனைத்துக் கடல்களின் அலைகளையே இடையணியாகக் கொண்ட பூமிதேவியின் புருஷனான சோழவர்மன் என்பவன் அந்தவம்சத்தில் தோன்றினான் . வீரியமிக்க அவன் காலில் விழுந்து வணங்கும் அரசர்களுடைய மகுடங்களின் பிரகாசத்தால் பாத தாமரை திகழ்ந்தது . குறிப்பு சோழவர்மன் என்பதே சோளவர்மா என வந்துள்ளது . தத்புத்ரோ அஜனி ராஜகேஸரிஸமாக்யாதோ யசஸ்வீ ந்ருப : தத்ஸுனு: பரகேஸரீ ரிபு நிருப வ்ராதாங்க்ரிப்தி ) கும்போத்பவ : ஆஜ்ஞாய ஆல ( யத்குல ) ஜன்மனா க்ஷிதிபுஜாம் தன்னாமநீ ப்ரக்ரமாத் ராஜ்நாம் மௌலிபிர் ஆநதை ரநுதினம் மாலேவ ஸம்பாவிதா 6 அவனுக்கு மகனாக ராஜகேசரி என்பவன் பிறந்தான் . அவன் கீர்த்தியுடையவன் . இவனுக்கு மகனாகப் பரகேசரி என்பவன் 51 பிறந்தான் . பகைவர் கூட்டமாகிய கடலுக்கு அகத்தியரைப் போன்றவன் பரகேசரியாவான் . இவ்விருவருடைய நாமங்களை முறையாகக் கொண்டே அந்தக் குலத்தின் ஆணை பிறப்பிக்கப்பட்டது . அந்த ஆணை ராஜாக்களின் வணங்கிய திருமுடிகளால் மாலை போலச் சீராக்கப்பட்டது. குறிப்பு குள்ளவடிவத்தில் இருந்த அகத்தியர் கடலைக் குடித்தவர் என்பது புராணம் . அவரைப்போலச் செயல் வல்லவன் பரகேசரி என்கிறார் . சோழருடைய கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இராசகேசரி , பரகேசரி என்ற பெயர்களிலேயே ஆணைகளைக் குறிப்பிடுகின்றன. மெய்க்கீர்த்திகளின் துணைகொண்டே அவர்களை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர் . அரிகாலஸ்ததோ ஜஜ்ஞே கரிகாலஸததன்வயே சக்ரு யஸ்ய ஆஜ்ஞயா பூபா காவேரீதீரபந்தனம் 7 அந்த வம்சத்தில் பகைவர்களுக்கு எமனான கரிகாலன் என்னும் அரசன் தோன்றினான் . அவனுடைய கட்டளையை ஏற்று அரசர்கள் சேர்ந்து காவிரிக்குக் கரை எடுப்பித்தனர் . குறிப்பு இலங்கையை வென்ற கரிகாலன் அங்கிருந்து 12,000 வீரர்களைச் சிறைப் பிடித்துக் கொண்டுவந்து காவிரிக்குக் கல்லணை கட்டியதாக வரலாறுண்டு . காவிரி என்ற சொல் சிலப்பதிகாரத்திலேயே காவேரி என்றிருக்கிறது . இதையே வடமொழியிலும் பயன்படுத்தி உள்ளனர் . ஸமஜனி விஜயாலய : ததீயே மஹதி குலே மஹனீய ராஜ்ய லஷ்மீ அனுபம விபவ ப்ரதாப வித்யா புஜபல விக்ரம சௌர்ய தைரியராசி 8 அந்தப் பெருங்குலத்தில் சிறப்புப் பெற்ற விசயாலயன் தோன்றினான் . அவன் ஒப்பற்ற பெருமை , பிரதாபம் ( கீர்த்தி ) தோள்வலிமை , பராக்கிரமம் , சூரத்தனம் , துணிவு, ஆகியவற்றின் இருப்பிடமாகத் திகழ்ந்தான் . குறிப்பு கரிகாலனுக்குப் பிறகு பல அரசர்கள் சோழர் வம்சத்தில் இருந்தும் அவர்களை இச்செப்பேட்டில் கவிஞர் குறிப்பிடாமல் விட்டுள்ளார் . பிற்காலச் சோழ மரபு இவனிடமிருந்துதான் தோன்றுகிறது என்பதால் இவனுக்கு ராஜ்ய லக்ஷ்மீ என அடை கொடுத்தார் போலும் . 96 விழுப்புண்களைத் தாங்கியவன் என்று வரலாறு இவனைக் கூறுவதால் புஜபல விக்ரம சௌரிய தைரியத்தைக் குறிப்பிடுகிறார் . தஞ்சை கொண்ட பரகேசரியாகிய விசயாலயனைக் கபிலைக் கதை என்ற நூலும் குறிப்பிடுகிறது . ஆதித்ய வர்ம்மா தநயஸ்ததீயோ புதாச்ரய ஸந்திஷண : தரஸ்வீ தோஷாபநீதௌ சததம் ப்ரவ்ருத்த : ஸன்மார்க வர்த்தீ க்ஷிதிம் அப்யரக்ஷத் 9 அவனுக்கு ஆதித்யன் மகனாகப் பிறந்தான் . பூமியைக் காத்த ஆதித்யன் அறிஞர்களுக்கெல்லாம் அடைக்கலமானவன். புத்தியில் பெரிய வியாழனை ஒத்தவன் . வேகம் மிக்க இவன் எப்போதும் தோஷங்களைக் களைபவன் . நன்னெறியில் நடப்பவன் ஆவான் . குறிப்பு வேகமிக்கவன் , தோஷம் ( இருள் ) களைபவன் என்பது சூரியனுக்கும் பொருந்தும் . எனவே ஆதித்யனை அரசனாகவும் சூரியனாகவும் கருதி , சிலேடை காணலாம் . தோஷம் என்ற சொல் கெட்டது என்ற பொருளில் தற்போதும் பயன்பாட்டில் உள்ளது . சன்மார்க்கம் என்ற சொல் வள்ளல் இராமலிங்க அடிகளுக்கு விருப்பமான சொல்லாகும் . சமரச சுத்த சன்மார்க்கம் காண அவர் விழைந்தார்...