சங்க இலக்கியங்களில் மகாபாரதம்.இது இருமொழி இடுகை

The emblems of the Chera Chola and Pandyas.image

தமிழும் சனாதன தர்மமும் ஒன்றுக்கொன் று எதிர்மாறான கருத்துக்களைக் கொண்டவை, வட புல ஆரியம் தமிழை எதிர்த்தது, தமிழ் வேத மற்றும் இதிகாச புராணங்களை ஏற்றுக்கொள்ளவில்லை,வட புல அரசர்கள் தமிழக அரசர்களுடன் பகைமை பூண்டு இருந்தனர்,தமிழக மன்னர்களும் மக்களும் அவ்வாறே வட புலத்தவரை வெறுத்தனர் இன்ன பிற கட்டுக்கதைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது இன்றியமையாதது. ஏனெனில், தவறான வரலாற்றையும் அதன் காரணமாக பிரிவினைக்கும் இச்சதிகள் இடம் கொடுக்கின்றன. இங்ஙனம் ஆக வேண்டும் இந்தியா என்ற ஆங்கிலேயரின பணியை இன்றும் சிலர் செய்து கொண்டு வருகின்றனர்,சில நேரங்களில் அரசின் ஆதரவுடன். It is necessary to shed light on other myths such as that Tamil and Sanatana Dharma have diametrically opposed views, the Aryans of the Northern Field opposed tamil, the Tamil veda and epic puranas were not accepted, the kings of the northern field were hostile to the kings of Tamil Nadu, the kings and people of Tamil Nadu likewise hated the people of the north. This is because these castes give rise to a false history and therefore to partition. This is how it should be done even today, with the support of the Government, sometimes with the support of the Government, that some people are still doing the work of the British called India

இந்த வலைத்தளத்தில் இந்த வரலாற்றுப் பிழைகளை தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுளளேன். I have pointed out these historical errors on this website with relevant evidence.

சங்க இலக்கியங்களில் மகாபாரதம்.Mahabharata in Sangam literature

புறநானூறு. Purananuru

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

(புறநானூறு – 2)

(அலங்கு = அசைகின்ற; உளை = பிடரி மயிர்; புரவி = குதிரை; ஐவர் = பாண்டவர் / தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன்; பொலம் = பொன்; தும்பை = வலிமை காரணமாகப் போர்புரியும் வீரர்கள் அணியும் பூ / தும்பைப் பூ; ஈரைம்பதின்பர் = நூற்றுவர் / துரியோதனன் முதலிய நூறு சகோதரர்கள்; ஒழிய = சாவ; பதம் = சோறு, உணவு; வரையாது = அளவில்லாது)

பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியை இப்பாடல் விவரிக்கிறது. துரியோதனன் முதலிய கௌரவர் நூற்றுவரும் பாண்டவர் ஐவரோடு பகைத்துப் போரிட்டனர்; போரிட்டு மாண்டனர். அப்போர்க்களத்தில் சேரலாதன் போர் வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளித்துச் சிறப்புச் செய்துள்ளான் என்பது இப்பாடலின் பொருள். Perunjottu Udiyan Cheralathan. This song describes the incident that Perunjoru Uthiyan , a Chera King g.who provided food for both armies during the Bharata war. Duryodhana and the Kauravas fought against the five Pandavas; They fought and died. The meaning of this song is that in the field of battle, Cheralathan has rendered great joy to the warriors as well.

சிறுபாணாற்றுப்படை. காவெரி ஊட்டிய கவர்கணைத் தூணிப்பூவிரி கச்சைப் புகழோன் தம்முன்(சிறுபாணாற்றுப்படை அடிகள், 238-239)(கா = காடு, வனம், காண்டவ வனம்; எரி = தீ; காவெரி ஊட்டல் = காண்டவ வனம் எரியூட்டப் பெறுதல்; கவர் = பல; கணை = அம்பு; தூணி = அம்பு வைக்கும் கூடு; கச்சை = ஆடை வகை)என்ற பாடல் பாண்டவருள் அருச்சுனனையும் வீமனையும் குறிப்பிடுகிறது.காட்டிற்கு எரி ஊட்டியவனும், அம்புகள் நிரம்பிய அம்புக் கூட்டை உடையவனும், கச்சையை அணிந்தவனும் ஆகிய புகழை உடையவன் அருச்சுனன். அவனுடைய தம் முன் (மூத்தவன்) வீமன் ஆவான் என்பது இப்பாடல் வரிகளின் பொருள். மேலும் வீமனின் சமையல் சிறப்பும் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது..238-239) Arjuna has the reputation of having an arrow-shell full of arrows and wearing a girdle. The meaning of the lyrics of this song is that he is Bhim is his eldest brother. Moreover, the culinary excellence of Bhim is also mentioned -sirupanarupadai 238-239

பிற இலக்கியங்கள்

பதிற்றுப் பத்தின் பாடல் (14) ஒன்று, கௌரவர் நண்பனாகிய கர்ணனை அக்குரன் என்று கூறியுள்ளது. கர்ணன் ஞாயிற்றின் மகனாகக் கலித்தொகைப் பாடல் ஒன்றில் குறிக்கப்பெற்றுள்ளான் (முல்லைக் கலி, 28). துரியோதனன் முதலியோர் சூழ்ச்சியால் பாண்டவர் தங்கி இருந்த அரக்கு மாளிகை தீ வைக்கப்படுகிறது. அத்தீயிலிருந்து வீமன் தன் சகோதரர்களைக் காப்பாற்றிய நிகழ்ச்சியை மற்றொரு கலித்தொகைப் பாடல் (பாலைக்கலி, 25) விவரித்துள்ளது One of the verses (14) of the Pathirupathu describes Karna, the friend of the Kauravas, as Akuran. Karna is mentioned as the son of The Sun in a hymn (Mullai Kali, 28). Due to the conspiracy of Duryodhana and others, the Araku palace ( Palace of Wax),where the Pandavas were staying was set on fire. Another Kalithokai song (Palaikkali, 25) describes the story of Bhims’ s rescue of his brothers from the fire.

பெரும்பாணாற்றுப்படையில், பாண்டவர் ஐவரும் கௌரவர் நூற்றுவரைப் போர்க்களத்தே வென்ற செய்தி கூறப்பட்டுள்ளது. Perumpaanaatruppadai, another Sangam Classic records that the five Pandavas had conquered the hundred Kauravas in the battle.

ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்
பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல

    (பெரும்பாணாற்றுப்படை அடிகள்,  415-417)

(ஈரைம் பதின்மர் = கௌரவர் நூற்றுவர்; பொருது = சண்டை இட்டு; களத்து = போர்க் களத்து; அவிய = இறக்க; பேர் = பெரிய; அமர்க் கடந்த = வெற்றி பெற்ற; கொடிஞ்சி = தேரின் ஒரு பகுதி; ஆரா = தணியாத; செரு = போர்; ஐவர் = பாண்டவர்)

பெரிய வெற்றியைப் பெற்றவர் பாண்டவர்; இவர்கள் நெடிய தேரினையும் தீராத போர் வேட்கையையும் உடையவர்கள்; கௌரவர்கள் நூறு பேரும் போர்க்களத்தில் இறக்குமாறு இவர்கள் பெரிய வெற்றியைப் பெற்றார்கள் என்பது இவ்வரிகளின் பொருள்.. The Pandavas achievef a grand victory.; They have a long chariots and an unquenchable desire for war; These verses mean that the Pandavas achieved such a great victory that a hundred of them ( Kauravas) would die on the battlefield.

கீழ்க்காணும் வலைத் தளம் சீரிய முறையில் தமிழ் இலக்கியங்களை எடுத்து விவரிக்கிறது. The web site is an excellent source for Literature. Please visit.

Citation. https://www.tamilvu.org/courses/degree/a011/a0112/html/a01125p3.htm

, ,

தமிழ் வரலாறு பதினைந்து லக்ஷம் வருடங்களுக்கு முற்பட்டது சென்னையில் அகழாய்வு


ஆனால் தற்போது மேற்கூறிய ஆய்வின் மூலமாக, சென்னை அடுத்த Athirampakkam கள ஆய்வில் ராபர்ட் புரூஸ் கண்டு எடுத்த கல் கருவிகள் சுமார் பதினைந்து லக்ஷம் வருடங்களுக்கு முற்பட்டது என்பது தெரிய வந்துள்ளது

Keep reading
தமிழ் தாய்

கடவுள் பெயரை மறைத்து வெளியிட்ட தமிழ்த் தாய் வாழ்த்து நீராரும் கடலுடுத்த


தமிழ்த்தாயின் வாழ்த்து என்ற பெயரில், பாடலின் அனைத்து வரிகளையும் வெளியிடாமல், கடவுளைப் பற்றி புகழ்ந்து உள்ள வரிகளை நீக்கி விட்டு, தமிழ்த் தாய் வாழ்த்து என்ற பெயரில், வெளியிட்ட வர்கள், தமிழ் க் காவலர்! தமிழை மற்றும் சுந்தரம் பிள்ளையையும் ஏமாற்றுவது அல்லவா! நான் தமிழை மறைத்த கூட்டம் என ஆங்கிலத்தில் எழுதி ய பதிவு இதோ. ‘ Group in Tamil Nadu has been systematically suppressing a portion of History of…

Keep reading

தமிழகத்தின் நிலப்பரப்பு விவரங்கள் சஞ்சயன் மகாபாரதத்தில் வர்ணனை


சஞ்சயன், மகாபாரதத்தில் லெமூரியா கண்டம், தமிழ் நிலப் பரப்பு விளக்கம்?சஞ்சயன் மகாபாரதத்தில் வர்ணனை

Keep reading

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: