ரத சப்தமி மந்திரங்கள்.
தலையில் மூன்று எருக்கு இலைகளுடன(, தோ ளில் இரண்டு, பாதத்தில் இரண்டு) சிறிது அக் ஷ தை சேர்த்து ஸ்நானம் செய்யவும்.
“மொத்தம் ஏழு எருக்கு இலைகள்.
ஸ்னானம் செய்யும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்.
1.ஸப்த ஸப்திப்ரியே ! தே3வி! ஸப்த லோகைக பூஜிதே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ! ஸத்வரம்
2.யத்3 யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோக3ம் ச கம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ
3.நௌமி ஸப்தமி ! தேவி ! த்வாம் ஸப்தலோகைக மாதரம்
ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்னானேன மம பாபம் வ்யபோஹய!
(1) ஏழுகுதிரைகள்பூட்டிய தேருடன்கூடிய ஸூர்யனின்ப்ரியமான தேவியே! ஏழு உலகங்காளாலும் பூஜிக்கப்படுபவளே! ஹேஸப்தமிதேவி! ஏழு ஜன்மங்களில் நான் ஸேகரித்துள்ள பாபங்களை விரைவாக அபஹரித்துக்கொள்.
(2) மகர(தை)மாத ஸப்தமியே!, என்னால் முன் ஏழு ஜன்மங்களிலும் செய்யப்பட்ட (1,முன்பிறவி,2,இந்த பிறவி, 3,மனது, 4,உடல், 5,வாக்கு, 6,அறிந்து செய்தது, 7,அறியாமல்செய்தது என) ஏழுவிதமான பாபங்களால்ஏற்படப்போகும் நோயிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் என்னை விடுவிப்பாயாக.
(3) ஹே ஸப்தமி தேவியே! ஏழுலகங்களுக்கும் தாயாரான உன்னை வணங்கு கிறேன். ஏழு எருக்க இலைகளால் நான் செய்யும் ஸ்னானத்தால் எனது பாபத்தை போக்கி அருள் புரிவாயாக.
இவ்வாறு ச்லோகம் சொல்லி ஸ்னானம் செய்து விட்டு வஸ்த்ரம் உடுத்திகொண்டு
ரதஸப்தமீ ஸ்நானாங்கம் அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் கூறிகொண்டு
ஸப்த ஸப்தி ரதா2ரூட4 ! ஸப்தலோக ப்ரகாக !
தி3வாகர ! க்3ருஹாணார்க்4யம் ஸப்தம்யாம் ஜ்யோதிஷாம் பதே !
தி3வாகராய நம: இத3மர்க்4யம், இதமர்க்4யம்,இதமர்க்4யம்,
ஏழுகுதிரை பூட்டிய தேரில் அமர்ந்திருப்பவரே ! ஏழு உலகங்களுக்கும் ஒளியளிப்பவரே ! ஹே திவாகர ! நக்ஷத்ரமண்டலங்களுக்குத்தலைவரே ! ரதஸப்தமியன்று என்னால் தரப்படும் இந்த அர்க்ய (ஜல)த்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
என்னும் மந்த்ரம் சொல்லி சுத்தமான தீர்த்தத்தால் ஸூர்யனுக்கு மூன்று முறை அர்க்யம் தர வேண்டும்.
மேலும் இன்று வைவஸ்வத மன்வாதி புண்யகாலமாகையால் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் இன்று வைவஸ்வத மன்வாதி புண்யகாலே என்று கூறி முன்னோர்களுக்கு தர்ப்பணமும் செய்யவேண்டும்.
இன்று செய்யப்படும் தானங்கள் அளவற்ற பலனைத்தரும் .ஆகவே சக்திக்குத் தக்கவாறு ஏழைகளுக்கு தானங்களையும் செய்யலாம்.
பீஷ்மாஷ்டமீ Bheeshma Ashtamee Tharpana Mantra:
பீஷ்ம: என்றால் பயங்கரம் எனப்பொருள், யாரும் செய்ய இயலாததான தான் இறுதிவரை விவாஹமே செய்து கொள்ளமாட்டேன் என்று (தனது தந்தை ந்தனு மஹாராஜாவுக்காக) பயங்கரமான உறுதிமொழியை ஏற்றதால் தேவவிரதர் என்னும் இவருக்கு பீஷ்மர் என்னும் பெயர் ஏற்பட்டது,
சிறந்த தர்மாத்மாவும், சிறந்த வில்லாளியுமான பீஷ்மர் இறுதிவரை ப்ருஹ்மசாரியாகவே வாழ்ந்துகுருக்ஷேத்ரப்போரில் போரிட்டு , உத்தராயணம் (தை மாதம்) பிறந்தபிறகு அஷ்டமி திதியில் மோக்ஷத்தை அடைந்தார். இந்த நன்நாள் தான் பீஷ்மாஷ்டமீ.
மிகச்சிறந்த மஹாபுருஷரான பீஷ்மாசாரியருக்கு இவ்வுலகில் பிறந்த அனைவரும் இன்று ஜலத்தால் அர்க்யம் தரவேண்டும் என்கிறது சாஸ்த்ரம். ஆகவே விவாஹமானவர்கள், மற்றும் ப்ருஹ்மசாரிகள் ஆகிய அனைவரும் (தந்தையுள்ளவரும் கூட) இன்று காலை முறையாக ஸ்னானம் மற்றும் நித்யகர்மாக்களை முடித்துவிட்டு (காலை 6.30 முதல் 8.20 மணிக்குள்) பீஷ்மருக்கு கீழ்கண்டவாறு அர்க்யம் தர வேண்டும்.கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு
பீஷ்மாஷ்டமீ புண்யகாலே பீஷ்ம தர்பணம் கரிஷ்யே என ஸங்கல்பம் செய்து கொள்ளவும். பிறகு பூணூலை நிவீதியாக (மாலையாக)போட்டுக்கொண்டு, த்த ஜலத்தால் (எள்ளுகலக்காமல்) இரண்டு கைகள் நிறைய ஜலம் எடுத்துக்கொண்டு கீழ்கண்ட ச்லோகம் சொல்லி பீஷ்மருக்கு அர்க்கியம் தரவேண்டும்.
பீ4ஷ்ம: ந்தநவோ வீர: ஸத்யவாதீ3 ஜிதேந்திரிய:
ஆபி4 ரத்பி4 ரவாப்நோது புத்ர பௌத்ரோசிதாம் க்ரியாம் பீ4ஷ்மாய நம: இத3 மர்க்4யம்
சந்தனு மஹாராஜாவின் புதல்வரும், மிகச்சிறந்த வீரரும்,எப்பொழுதும் ஸத்யத்தையே பேசுபவரும், ஐந்து இந்த்ரியங்களையும் (புலன்களை) ஜயித்தவருமான பீஷ்மர்,இந்த அர்க்யஜலங்களால், புத்ரன் பௌத்ரன் (மகன் பேரன்)ஆகியவர்களால் முறைப்படி செய்யப்பட்ட ச்ராத்தம் தர்பணம் ஆகிய பித்ருகார்யங்களால் ஏற்படும் த்ருப்தியை அடையட்டும். (1)
வையாக்4ர பாத கோ3த்ராய ஸாங்க்ருத்ய ப்ரவராய ச
அபுத்ராய த3தா3ம்யர்க்4யம் ஸலிலம் பீ4ஷ்மவர்மணே பீ4ஷ்மாய நம: இத3மர்க்4யம்
வ்யாக்ரபாத மஹர்ஷியின் குலத்தில் பிறந்தவரும், ஸங்க்ருதி மஹர்ஷியின் வழி வந்தவரும், (தந்தைக்காக விவாஹமே செய்துகொள்ளாமல் இருந்ததால்) புத்ரனில்லாதவருமான,பீஷ்ம வர்ம மஹாராஜாவுக்கு இந்த அர்க்ய ஜலத்தைத் தருகிறேன்.2)
க3ங்காபுத்ராய ந்தாய ந்தநோ: ஆத்மஜாய ச
அபுத்ராய த3தா3ம்யர்க்4யம் ஸலிலம் பீ4ஷ்ம வர்மணே
பீ4ஷ்மாய நம: இத3மர்க்4யம், அநேன அர்க்4ய ப்ரதா3னேன பீ4ஷ்ம:ப்ரீயதாம்
கங்காதேவியின் புதல்வரும், சாந்த வடிவானவரும், ஸந்தனுமஹாராஜாவின் தவப்புதல்வரும், அபுத்ரருமான பீஷ்மாசார்யருக்கு இந்த தூய ஜலத்தால் அர்க்யத்தை ஸமர்பிக்கிறேன், என்னால் தரப்பட்ட இந்த மூன்று அர்க்ய ஜலத்தால் பீஷ்ம மஹாராஜா த்ருப்தியை அடையட்டும். (3)
இவ்வாறு முறையாக பீஷ்மருக்கு அர்க்யம் தருவதால் பீஷ்மாசார்யரின் அருளால் அனைத்து நோயும் விலகி நீண்ட ஆயுளும், ஆரோக்யமும், நல்ல ஸந்ததியும், ஸத்யத்தில் பிடிப்பும் ஏற்படும் என்கிறது சாஸ்த்ரம், ஆகவே இந்த நன்நாளில் நாமும் பீஷ்மரை மனதால் நினைத்து அவருக்குஅர்க்யம் தந்து நன்மையடைவோம்.